என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

    தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ் (வயது 48). இவர் திருப்போரூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல வேலைக்கு சென்ற துளசிதாஸ் வேலை முடிந்து மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரத்தை அடுத்த பையனூர் என்ற இடத்தில் வரும்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் நிலைதடுமாறி அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவலின் பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த துளசிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×