என் மலர்
செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் முககவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிப்பதற்காகவும், கடற்கரையில் பொழுதுபோக்குவதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் கம்பிவேலிக்கு வெளிப்புறம் உள்ள அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க தடை இல்லை. இதனால் இந்த புராதன சின்னங்களை பார்க்கவும், கடற்கரையில் பொழுதை கழிக்கவும் வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து காதல் ஜோடிகளும் அதிக அளவில் வருகின்றனர். இப்படி வரும் பயணிகளும், காதலர்களும் முக கவசம் அணியாமல் அலட்சிய போக்குடன் வருவதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இவர்கள் மூலம் மாமல்லபுரம் நகர பகுதியில் கொரோனா தொற்று பரவல் அபாயமும் இருந்தது. இதையடுத்து நேற்று மாமல்லபுரம் கடற்கரை சாலை மற்றும் ஐந்துரதம் பகுதியில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் முக கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த காதல் ஜோடிகளையும், கார், அரசு பஸ் மற்றும் வேன்களில் வந்த சுற்றுலா பயணிகளையும் மடக்கி தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்து முககவசம் அணிந்து செல்லுமாறு அறிவுரை வழங்கி, பேரூராட்சி சார்பில் இலவச முககவசம் வழங்கி அனுப்பி வைத்தனர். குறிப்பாக நேற்று முககவசம் அணியாமல் வந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் பரவிவரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் உள்பட 935 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் வேல்யாத்திரை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, வேல் யாத்திரை பொறுப்பாளரும் மாநில நிர்வாகியுமான நரேந்திரன், மாநில பா.ஜ.க. செயலாளர் கே.டி.ராகவன், மாவட்ட தலைவர் பலராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேசும்போது கூறியதாவது:-
பொதுமக்களிடம் தமிழ் வேறு, ஆன்மிகம் வேறு என போலி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்துக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பா.ஜ.க. முன்னால் நிற்கும்.
கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்து கருப்பர் கூட்டம் அவமானப்படுத்தியது. அதனை யாரும் தட்டி கேட்கவில்லை, ஆனால் பா.ஜ.க. அதனை தட்டி கேட்டது. மு.க.ஸ்டாலின் கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்குகிறார். தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தந்த தமிழக அரசு பா.ஜ.க.வுக்கு மறுக்கிறது. தேசிய அரசியலும், ஆன்மிக அரசியலும் தமிழகத்தில் காலூன்றுவதற்கான நேரம் நெருங்கி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
தடையை மீறி வேல் யாத்தரை தொடங்கிய பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் உள்பட 935 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்
வேல் யாத்திரை மேடை அருகே உள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது மாநில தலைவர் எல்.முருகன் சைகை மூலம் பேச்சை சிறிது நேரம் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று அண்ணாமலையும் பேச்சை நிறுத்தினார். தொழுகை முடிந்தவுடன் அவர் தனது பேச்சை மீண்டும் தொடங்கினார். இதனால் அங்கு 5 நிமிடம் அமைதி நிலவியது.
மாநில தலைவர் முருகனை வரவேற்கும் விதமாக மேடை கச்சேரி, தாரை தப்பாட்டம், கரகாட்டம், அலங்கரிக்கப்பட்ட குடைகள், சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து இருபுறமும் பெண்கள் மலர் தூவியும், சிறுவர் சிறுமிகள் முருகபெருமான் வேடம் அணிந்தும் வரவேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பலராமன் ஆள் உயர வேல் ஒன்றை மாநில தலைவர் முருகனுக்கு பரிசாக வழங்கினார்.
தேவைக்கு அதிகமான உரங்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது என்று கலெக்டர் ஜான் லூயிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் உரங்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது, இதில் நெல் ரகங்களான கா-51. என்.எல்.ஆர்- 34449, பி.பி.டி.-5204 மற்றும் எ.டி.டி-37 உள்பட மொத்தம் 350 மெட்ரிக் டன் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 250 மெட்ரிக் டன் தனியார் விற்பனை நிலையங்களிலும் இருப்பில் உள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில் சாகுபடியாகும் பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 1800 மெட்ரிக் டன், டி.ஏ.பி 920 மெட்ரிக்டன், பொட்டாஷ் 750 மெட்ரிக்டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 2 ஆயிரத்து 250 மெக்ரிக் டன் தனியார் சில்லரை உர விற்பனை கடைகளிலும் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பில் உள்ளது.
எனவே, விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்களை பெற்று பயனடையுமாறும் விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் அறிவிப்பு பலகை வைத்து அதில் உரங்களின் இருப்பு விவரங்கள் மற்றும் விலைப்பட்டியல்களை பதிவு செய்து விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும், உர விற்பனையாளர்கள் விற்பனை முனை எந்திரத்தின் முலம் மட்டுமே உரம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும்.
அரசு நிர்ணயித்த அதிக பட்ச விலைக்கு அதிகமாகவோ, ஒரே விவசாயிக்கு அதிக உர மூட்டைகளையோ மற்றும் விவசாயி அல்லாதவர்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது, மானிய உரங்களை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும் கூடாது, உர இருப்பு பதிவேடுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
உரங்களை விற்கும்போது தேவைக்கு அதிகமான உரங்களை வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது, இந்த வழிமுறைகளை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்,
இவ்வாறு இந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் தமிழ்காவியன் (வயது 12). நேற்று முன்தினம் மாலை செங்குன்றம் அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தான்.
அப்போது திடீரென கிணற்றில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஊரப்பாக்கம் அருகே குடும்ப தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி கிராமத்திலுள்ள கோகுலம் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 45). இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம், இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதனால் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் மனமுடைந்த தேவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,416 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 7,06,444 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,272-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,03,085 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,416 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42,676 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 688 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்லாவரம் நகராட்சி அலுவலகம் மற்றும் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில தீபாவளி பண்டிகையையொட்டி, வசூல் வேட்டை கொடிகட்டி பறப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார், கூடுதல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4.50 மணிக்கு பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் மெயின் கேட் மூடப்பட்டது. பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் அலுவலகத்தில் இருந்து யாரும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
நகராட்சி அலுவலக முதல் தளத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அது தொடர்பாக அத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இந்த நகராட்சி அலுவலகத்தில் இதேபோல் கடந்த ஆண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நகரமைப்பு பிரிவில் இருந்து கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஆலந்தூரில் சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் திடீரென சோதனை செய்தனர்.
அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டன. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றிய அறைகள் முழுவதும் சோதனை செய்தனர். 5 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியும் பணம் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆவணங்களில் முறைகேடு எதுவும் நடந்து உள்ளதா? என அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்தனர்.
மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் மணப்பாக்கத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் லோகநாதன் படாளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தற்கொலை செய்து கொண்ட ரவிக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
கூடுவாஞ்சேரி அருகே சகோதரர் தரக்குறைவாக பேசியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பாண்டூர் மூப்பனார் சாலை பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மனைவி கற்பகம் (வயது 43). இவருக்கும், இவரது சகோதரர் மணிக்குமார் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மணிக்குமார் தங்கை கற்பகத்தை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த கற்பகம் அரளி விதை அரைத்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கற்பகத்தை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கற்பகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கற்பகத்தின் கணவர் குபேந்திரன் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி போலீசில் மணிக்குமார் மீது புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வரதன் (வயது 61), இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் நேற்று முன்தினம் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். இதில் ஏரியில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக அவர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் ஏரியில் மூழ்கி இறந்துபோன முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் ஆந்திராவில் இருந்து வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 600 பெட்டிகளில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் சாலையில் உருண்டோடியது. இதை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையில் ஆந்திராவில் இருந்து செங்கல்பட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்காக காய்கறி மற்றும் தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் அப்பகுதியில் வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலைத்தடுமாறி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் ஏற்றி வந்த 600 தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்து உருண்டோடியது. இதனால் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது சாலையில் தக்காளி குவியலாக கொட்டி கிடப்பதை கண்ட பாலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து, தக்காளியை சிறிய பைகளிலும், கோணிப்பைகளிலும் மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றனர்.
பொதுமக்கள் சிலர் தக்காளி களை தண்ணீர் குடம் ஆகியவற்றில் அள்ளிச் சென்றதை காணமுடிந்தது. ஒரு சிலர் கவிழ்ந்த லாரியில் இருந்து கொட்டிய டீசலையும் திருடி சென்றனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார், விரைந்து வந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.
இது குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆந்திராவில் இருந்து வந்து கவிழ்ந்த லாரியில் இருந்து விழுந்து வீணான தக்காளி பழங்களின் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.