என் மலர்
செங்கல்பட்டு
உயரமான கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நெம்மேலி குப்பத்திற்கு தாழ்வான நிலையில் செல்லும் இணைப்பு சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தில் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடியிருப்பில் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் அனைவரும் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை மீனவ குப்பத்தில் இருந்து 15 அடி உயரத்தில் உள்ளது. இந்த கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நெம்மேலி குப்பத்திற்கு தாழ்வான நிலையில் இணைப்பு சாலை செல்கிறது. நெம்மேலி குப்பத்தில் இருந்து இந்த இணைப்பு சாலை வழியாக உயரத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை மோட்டார் சைக்கிளில் அந்த பகுதி மீனவர்கள் கடக்கும்போதும், அதிவேகத்தில் செல்லும் கார், லாரி, வேன் போன்ற வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது.
அதேபோல் உயரமான கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தாழ்வான சாலையில் இறங்கி தங்கள் குடியிருப்புகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. இதுமாதிரி நடந்த 12 விபத்துகளில் நெம்மேலி மீனவ கிராமத்தை சேர்ந்த 10 வாலிபர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலமுறை இது மாதிரி விபத்துகள் நடக்காத வண்ணம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நெம்மேலி குப்பம் வரை உள்ள இணைப்பு சாலையை சீரமைத்து தரக்கோரி சாலை போக்குவரத்து நிறுவனத்திற்கு மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுப்படுகிறது.
எனவே இந்த சாலையை கிழக்கு கடற்கரை சாலையின் உயரத்தில் இருந்து தாழ்வான பகுதி வரை சீரான முறையில் மறுசீரமைத்து சாலையை செப்பனிட வேண்டும் என்று நெம்மேலி குப்பம் மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
சசிகலாவின் அக்காள் மகனான வி.என்.சுதாகரன் மற்றும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி ஆகியோருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்படுள்ளது.
இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம்கோர்ட்டு மேல்முறையீட்டு வழக்கில் 14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட சொத்துகளை அரசால் பறிமுதல் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தில் உள்ள கீழ்கண்ட சொத்துகள் அரசுக்கு உரிமை மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சுதாகரன், இளவரசி பங்குதாரரர்களாக உள்ள சிக்னோரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் உள்ள 7 சொத்துகளை பறிமுதல் செய்து தமிழக அரசின் சொத்து என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மேற்கண்ட சொத்துகள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துகள் என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம். இந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை நிலுவை) உள்பட அனைத்தும் தமிழக அரசுக்கு பாத்தியப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், ஊத்துக்காடு கிராமத்தில் மெடோ ஆக்ரோ பார்ம்ஸ் பிரைவெட் லிமிடெட் பெயரில் உள்ள 144.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட 17 சொத்துகள் தமிழ்நாடு அரசின் சொத்துகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை நிலுவை) உள்பட அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தன்னுடைய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஊத்துக்காடு கிராமத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வருவாய்த்துறையினருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. வித்யா, நில எடுப்பு அலுவலர் சைலேந்திரன், வாலாஜாபாத் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நேற்று முன்தினம் சென்னையில் இருவருக்கும் சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுராந்தகம் அருகே லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து அங்கு சென்ற படாளம் போலீசார் விபத்தில் சிக்கி பலியானோர் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 795-ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 795-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 749 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 770 பேர் உயிரிழந்துள்ளனர். 276 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 778 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 440 பேர் உயிரிழந்துள்ளனர். 107 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது வரையில் மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 ஆயிரத்து 815 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 212 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 691 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுபடுத்தும் முனைப்பில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு துறையின் வழிகாட்டுதலின் படி முதல் கட்டமாக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, குரோம்பேட்டை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரி, நந்திவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 3 மையங்களில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இதேபோல் வருவாய்துறை, போலீஸ்துறை, நகராட்சி பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 400 பேருக்கு நாள் ஒன்றுக்கு 50 பேர் வீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த பணியை சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் நேற்று பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
இதனை தொடர்ந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது கொரேனா தடுப்பூசி போடும் மையங்கள் 440 செயல்படுகிறது. இந்த மையங்களின் மூலம் 1 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தேவைக்கேற்ப தடுப்பூசி போடும் மையங்கள் அதிகரிக்கப்படும் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அச்சப்பட தேவையில்லை, மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் செங்கல்பட்டு பொது சுகாதார துணை இயக்குனர் பிரியாராஜ், தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், நந்திவரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊரப்பாக்கத்தில் கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 70). இவர் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காந்தம்மாள் ஊரப்பாக்கம் டீக்கடை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் காந்தம்மாள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட காந்தம்மாள் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் குழந்தையிடம் நகை திருடிய மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் அமுதா (வயது 30). இவர், தன்னுடைய 3 வயது குழந்தையுடன் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அரசு பஸ்சில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தார்.
பின்னர் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தபோது அவரது குழந்தையின் கையில் இருந்த அரை பவுன் ‘பிரேஸ்லெட்’ மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பஸ்சில் தனக்கு அருகி்ல் அமர்ந்து இருந்த மூதாட்டி மீது சந்தேகம் அடைந்த அமுதா, இதுபற்றி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், தாம்பரம், பாரதிநகர் பகுதியை சேர்ந்த பெருந்தேவி (63) என்பதும், ஓடும் பஸ்சில் அமுதாவின் குழந்தையிடம் தங்க நகையை திருடியதும் தெரிந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் வழக்கு உள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து மூதாட்டி பெருந்தேவியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து குழந்தையிடம் திருடிய பிரேஸ்லெட்டை மீட்டு அமுதாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் மூதாட்டியை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மண்ணிவாக்கம் அருகே சாலையோரம் குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அருகே உள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரமாக மழைநீர் தேங்கி இருந்த ஒரு குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார். எப்படி குட்டையில் மூழ்கி இறந்தார் என்பது குறித்து தெரியவில்லை, இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அருகே உள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரமாக மழைநீர் தேங்கி இருந்த ஒரு குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று குட்டையில் மூழ்கி இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அடையாளச்சேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட கூவத்தூர் கிராமத்தில் நாளை (வியாழக்கிழமை) புதிய மின் கம்பிகள் அமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே அடையாளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலூர், பரமேஸ்வரிமங்கலம், நத்தம், சோழக்கட்டு, வேப்பஞ்சேரி, கூவத்தூர், கீழார்கொல்லை, நெடுமரம், நெற்குணப்பட்டு, தட்டாம்பட்டு, முகையூர், தென்பட்டினம் உள்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மதுராந்தகம் மின் செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 51,607 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,39,352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,22,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,367-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,607 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 50,544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 768 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே பெண் போலீசின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் யுவராஜ் (வயது 24). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்த யுவராஜுக்கும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சங்கீதா என்பவருக்கும் காதல் உருவாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்தை அப்போதைய மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா நடத்தி வைத்தார்.
இந்த நிலையில் சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8-வயதில் குழந்தை இருப்பது தெரியவரவே கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக 2-மாதத்துக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அமுதா கணவன், மனைவி இருவரையும் பிரித்து வைத்தார்.
இதனால் மனமுடைந்த யுவராஜ் ஒரு மாதம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஒழலூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த போது சங்கீதா தான் வேறு இடத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். அங்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த யுவராஜ் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே துத்தநாகம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தன்னுடைய சாவுக்கு காரணம் மனைவி சங்கீதா, சங்கீதாவின் முன்னாள் கணவர் புருஷோத்தமன், பெண் போலீஸ் சந்தியா மற்றும் ஜீவா என்று எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது.
பெண் போலீஸ் சங்கீதாவை கைது செய்யக்கோரி யுவராஜின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தின் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்கள் சாலையில் உருண்டபடி அழுது புலம்பினர். இதனால் செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்கொலைக்கு காரணமாக பெண் போலீஸ் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 50 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 768- ஆக உயர்ந்தது. 343 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 245 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 670 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர். 136 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.