என் மலர்
செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே தனது மனைவியின் கழுத்தை அறுத்ததுடன் அவர் மீது காரை ஏற்றி டாக்டர் கொன்றார். தப்பிச்சென்ற போது கார் விபத்துக்குள்ளானதால் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம்:
சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் கோகுல் குமார் (வயது 40). கோவையை சேர்ந்தவர்.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகத்தை அடுத்த ஆனந்தா நகரை சேர்ந்த முரஹரி என்பவரது மகள் கீர்த்தனா (35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கீர்த்தனா மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.
கணவர், மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதனால் கீர்த்தனா தன்னுடைய தாய் வீட்டில் இருந்தார். நேற்று மாலை அங்கு சென்ற கோகுல்குமார் கீர்த்தனாவின் கழுத்தை கத்தியால் அறுத்து அவரை கீழே தள்ளி காரை ஏற்றி கொன்று விட்டு மாமனார் முரஹரி மற்றும் மாமியார் குமாரி ஆகியோரை கத்தியால் வெட்டிவிட்டு காரில் தப்பிச்சென்றார்.
மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே செல்லும்போது தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்த கோகுல் குமாரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். விசாரணையில் கோகுல்குமார் தனது மனைவியை காரில் ஏற்றி கொன்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். படுகாயம் அடைந்த முரஹரி மற்றும் அவரது மனைவி குமாரி ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,356ஆக உள்ளது.
கொரோனாவில் இருந்து இதுவரை 51,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 374 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 776 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. இதை ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் அருகே உள்ள அரசு இடத்தில் கொட்டி தேக்கி வைத்திருந்தனர்.
இதனால் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பரவும் ஆபத்து இருந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்ற தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவுபடி ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் கருணாகரன் தலைமையில் ஊராட்சி துப்பரவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை லாரி மூலம் ஏற்றி சிங்கப்பெருமாள்கோவில் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. குப்பைகள் அகற்றும் பணியை செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உடன் இருந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 126 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 776 பேர் உயிரிழந்துள்ளனர். 314 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 432 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 888 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 444 ஆக உயர்ந்தது. 100 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர் அருகே அரசு பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழாவுக்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ். ஆராமுதன் தலைமை தாங்கினார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் செங்கல்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சத்தில் புதிதாக கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழாவுக்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ். ஆராமுதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார்.
இதில் ஆப்பூர் மதுசூதனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மநாபன், டில்லிபாபு, பள்ளி தலைமை ஆசிரியர் சூரியகலா மற்றும் காரணைப்புதுச்சேரி ஊராட்சி தி.மு.க. கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 773 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 862 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 ஆயிரத்து 992 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருவர் இறந்த நிலையில், இதுவரையில் 694 பேர் கொரானா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறை மீது இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது, பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம். இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதாவது, 1887-ம் ஆண்டு கட்டப்பட்டது. வங்க கடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது மாலுமிகளுக்கு அடையாளம் காட்ட வசதியாக இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் இந்த கலங்கரை விளக்கத்தில் மண்எண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது. கடந்த 1940-ம் ஆண்டு மின்னணுகருவிகள் பொருத்தப்பட்டு, நவீனதொழில் நுட்பத்தில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் முழு அழகையும் ரசிக்கலாம்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் கடந்த 11 மாதங்களாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இநத நிலையில் நேற்று சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக மீண்டும்11 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் ஏராளமானோர் இதன் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் அழமை கண்டுகளித்தனர். பலர் கலங்கரை விளக்கத்தின் மீதும், அதன் கீழ் உள்ள பாறைக்குன்று நுழைவு வாயில் பகுதியிலும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி பார்க்க சுற்றுலா பயணி ஒருவருக்கு தலாரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே மலை பாறை குன்றின் மீது அதிக உயரத்தில் அமைந்துள்ள ஒரே கலங்கரை விளக்கம் என்ற சிறப்பை மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் பெற்றுள்ளது. மேலும் கலங்கரை விளக்க வளாகத்தில் உள்ள அருங்காட்சியகமும் 11 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக நேற்று திறக்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் மலையடிவாரத்தில் உடல் சிதைந்த நிலையில் குழந்தை பிணம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மலையடிவாரத்தில் தமிழ்நாடு ஓட்டல் பழைய கட்டிடம் உள்ளது. மரம், செடி, கொடிகள் அடர்ந்து காணப்படும் இந்த இடத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் பிணம் கிடந்தது.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பார்த்த போது குழந்தையின் உடல் விலங்குகளால் கடித்து குதறப்பட்டு உடல் சிதைந்து ரத்தம் கொட்டிய நிலையில் காணப்பட்டது.
உடல் சிதைந்து காணப்பட்டதால அது ஆண் குழந்தையா?, பெண் குழந்தையா? என்பது தெரியவில்லை. உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 3 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 3 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 946 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 772 பேர் உயிரிழந்துள்ளனர். 285 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 832 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். 89 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை போன்ற இடங்களில் ஐ.டி. நிறுவனங்கள், பன்னாட்டு் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த பகுதிகளில் உள்ள நிலங்களின் மதிப்பு அதிகம்.
இந்த அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்த அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக செல்வசுந்தரி என்பவரும், சார் பதிவாளராக பானுமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் சென்னை ஆலந்தூரில் இயங்கிவரும் லஞ்ச ஓழிப்புத்துறையின் துணை போலீஸ் சூப்பிரண்டு லவக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஓழிப்புத்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடத்திய சோதனையில் சென்னை முகப்பேரை சேர்ந்த மயில்வேலன் என்பவர் தனது பெயரிலான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை பத்திரப்பதிவு செய்ய இணை சார்பதிவாளர் செல்வசுந்தரிக்கு ரூ.1,000, அலுவலக உதவியாளர் பிரபுவுக்கு ரூ.1,000 இடைத்தரகர் நவீன் மூலம் லஞ்சமாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஓழிப்புத்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாமல்லபுரம் கடற்கரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் பாண்டியராஜன் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார்.
மாமல்லபுரம்:
எடப்பாடி 2021 என்ற கோஷத்தை முன் வைத்தும், அ.தி.மு.க. அரசின் 5 ஆண்டு சாதனைகளை முன்வைத்தும் மீண்டும் 2021 அ.தி.மு.க. ஆட்சி என்ற தலைப்பில் மாமல்லபுரம் கடற்கரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் சிற்ப கல்லூரியில் பட்டம் பெற்ற 10 சிற்பக்கலைஞர்கள் மூலம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராகவன் இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். கடந்த 10 நாட்களாக 10 சிற்ப கலைஞர்கள் மணலை ஒரு இடத்தில் குவித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நின்ற கோலத்தில் இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் தனது இரட்டை விரலை காண்பிக்கும் தோரணையில் இந்த மணல் சிற்பம் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டது.
இந்த மணல் சிற்பம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், மணல் சிற்ப அமைப்பாளருமான ராகவன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிகுழும உறுப்பினர் கணேசன், அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பி.ஏ.எஸ்வந்தராவ், வி.பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு மணல் சிற்பத்தை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்வையிடுவதற்காக திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை நினைவு படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மணல் சிற்பம் கலை, பண்பாட்டு துறையின் கீழ் உள்ள சிற்பக்கல்லூரி பயிற்சி மாணவர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் இந்த மணல் சிற்பம் காட்சிபடுத்தப்பட உள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தமிழக தொல்லியல் துறை சரியாக மேற்கொள்ளவில்லை எனவும், அ.தி.மு.க. ஆட்சியில் அகழாய்வு பணிகள் சரிவர செய்யப்படவில்லை எனவும் ஒரு பொய்யான தகவலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார்.
தற்போது ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை போன்ற இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி காலத்தில் கீழடி அகழாய்வு நடத்துவது குறித்து எந்த வித பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் ஆட்சி காலத்தில் கீழடி என்றால் அதன் முக்கியத்துவம் மக்களுக்கு என்னவென்று தெரியாமல் இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. தமிழக தொல்லியல் துறையின் பணிக்கும், அகழாய்வு பணிக்கும் இந்த ஒரு மணல் சிற்பம் முன்னுதாரணம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இதுவரை கீழடியில் ரூ.55 லட்சம் மதிப்பில் 6 கட்ட அகழாய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை (நாளை) சனிக்கிழமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 3 நாட்கள் காட்சி படுத்தப்படும் இந்த மணல் சிற்பத்தை சுற்றி மாமல்லபுரம் நகரின் பெருமைகளை உணர்த்தும் வகையில் சிறிய மணல் சிற்பங்கள் அமைக்கவும் சிற்பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தரைப்பகுதியில் இருந்து பொதுமக்கள் இந்த மணல் சிற்பத்தை சரியாக கண்டுகளிக்க முடியாது என்பதால மணல் சிற்பத்திற்கு எதிர் முனையில் சவுக்கு கம்புகளால் 20 அடி உயரத்திற்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் ஏறி மணல் சிற்பத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனபால், வி.எஸ்.ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள சூளேரிக்காட்டு குப்பத்தில் கடற்கரை ஓரம் செயல்பட்டு வரும் கடல் நீர் குடிநீராக்கும் ஆலைக்கு கடல்நீர் கொண்டு வர ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக அங்குள்ள கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு பெரிய, பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டன.
அங்கு கடல் அலையின் வேகத்தை குறைக்க கொட்டப்பட்ட கற்களால் பக்கத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்தது. அங்கு கடல் அலையின் வேகம் அதிகரித்து 50 மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி கரைப்பகுதியை நோக்கி வந்துவிட்டதால் அங்குள்ள மணல் பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு விட்டது. 50 மீட்டர் கரைப்பகுதி கடல் நீரால் ஆக்கிரமிக்கப்பட்டு ராட்சத அலை முன்னோக்கி சீறிப்பாய்ந்து வந்து தாக்கியதால் சில நாட்களுக்கு முன்பு 100 மீட்டர் நீளமுள்ள சிமெண்டு சாலை இடிந்து விழுந்து பலத்த சேதம் அடைந்தது.
நெம்மேலி குப்பத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள கரைப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு 20 மீட்டர் தூரத்திற்கு மணல் திட்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அங்குள்ள கடற்கரை ஓரம் உள்ள அம்மன் கோவிலும் கடல் அரிப்பால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக நெம்மேலி குப்பம் மீனவர்கள் தங்கள் பகுதியில் மேலும் கடல் அரிப்பு ஏற்படாத வண்ணம் தூண்டில் வளைவு அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நெம்மேலி குப்பத்திற்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் கடல் அரிப்பால் படகு, மீன்பிடி வலைகளை வைக்க இடம் இல்லாமல் தொடர்ந்து தாங்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் உடனடியாக தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் தூண்டில் வளைவு அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்த பிறகு உடனடியாக இந்த கோரிக்கை நிறைவேற்றும் விதமாக இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதி அளித்தார்.