search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பைகளை அகற்றும் பணியை செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்த காட்சி
    X
    குப்பைகளை அகற்றும் பணியை செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்த காட்சி

    ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரம் - ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு

    ஊரப்பாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. இதை ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் அருகே உள்ள அரசு இடத்தில் கொட்டி தேக்கி வைத்திருந்தனர்.

    இதனால் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பரவும் ஆபத்து இருந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்ற தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவுபடி ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் கருணாகரன் தலைமையில் ஊராட்சி துப்பரவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை லாரி மூலம் ஏற்றி சிங்கப்பெருமாள்கோவில் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. குப்பைகள் அகற்றும் பணியை செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆனந்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உடன் இருந்தார்.
    Next Story
    ×