என் மலர்
செங்கல்பட்டு

தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கிளியாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.
இந்தநிலையில் கிளி ஆற்று வெள்ளத்தில் மூதாட்டி அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து வள்ளியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை வள்ளியம்மாள் பெரும்பாக்கத்தில் உள்ள கிளி ஆற்றில் துணி துவைத்து குளிக்க சென்றார். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். இதற்குள் வள்ளியம்மாள் தண்ணீரில் மூழ்கினார். சுமார் 100 மீட்டர் தூரத்தில் வள்ளியம்மாளை கிராம மக்கள் மீட்டனர்.
அப்போது அவர் இறந்திருப்பது தெரிந்தது. இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், பலியான வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
வெங்காயம் - 1
முட்டை - 3
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்டது கருங்குழி பேரூராட்சி.
மத்திய அரசின் 2021-ம் ஆண்டிற்கான தென்னிந்தியாவில் தூய்மையான நகரம் தரவரிசைப் பட்டியலில் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 671 நகரங்களில் கருங்குழி பேரூராட்சி 25-வது இடத்தினை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அளவில் உள்ள 468 நகரங்களில் 7-வது இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் இடத்தையும் கருங்குழி பேரூராட்சி பிடித்து இருக்கிறது. இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறும் போது, “தூய்மையான நகரத்தை நோக்கிய பயணத்தில் தென்னிந்திய அளவில் 2018-ம் ஆண்டு 750-வது இடத்தையும், 2019-ம் ஆண்டு 216-வது இடத்தையும், 2020-ம் ஆண்டு 81 இடத்தையும் பெற்று ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலை உயரக் காரணமாக இருந்த பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறேன்” என்றார்.
மேலூர்:
மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகள் தாரணி. இவர் ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரி முடித்து விட்டு பஸ் ஏறுவதற்காக கல்லூரி முன்புள்ள 4 வழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் தாரணி நின்று கொண்டிருந்தார்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி தாரணி மற்றும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவி செல்லூர் சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்த லாவண்யா, கப்பலூரைச் சேர்ந்த மாணவர் நிதிஷ் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தாரணி இன்று காலை பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த பாண்டிச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கைது செய்துள்ளார்.

கோவில்பட்டி வடக்குதிட்டங்குளம் பகுதியில் அம்மன்கோவில் உள்ளது. அந்த கோவிலில் அம்மன் மட்டுமின்றி கருப்பசாமி, விநாயகருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் செவ்வாய் கிழமையான இன்று வழக்கம் போல பூஜை நடத்துவதற்கு பூசாரி சென்றுள்ளார். அப்போது அம்மன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது 2 அம்மன் சிலை கழுத்தில் கிடந்த தாலிகள் கொள்ளை போயிருந்தது. மேலும் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






