என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து வாலிபர் பணத்தை திருடி உள்ளார்
    • முதியவரின் பணத்தை மோசடி செய்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

    அரியலூர், 

    அரியலூர் அடுத்த காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (வயது65). இவர் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் தனது பணத் தேவைக்காக வி.கைகாட்டி பகுதியிலுள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்றார்.ஆனால் அவருக்கு அதில் பணம் எடுக்க தெரியாததால், வெளியே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை அழைத்து பணத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளார்.அப்போது அந்த வாலிபர் மயில்சாமிக்கு உதவுவது போல் நடித்து, ஏடிஎம்மில் பணம் இல்லை எனக் கூறி, தான் வைத்திருந்த வேறு ஒரு ஏடிஎம் கார்டை மயில்சாமியிடம் மாற்றி கொடுத்துள்ளார்.பின்னர் வீட்டுக்குச் சென்ற மயில்சாமி, தனது மகளிடம் ஏடிஎம் கார்டு மற்றும் கைப்பேசியை கொடுத்துள்ளார்.அதனை பெற்றுக் கொண்ட அவரது மகள், கைப்பேசியில் வந்த குறுச்செய்தியை பார்த்த போது, மயில்சாமி சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.10,400 ஏடிஎமில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த மயில்சாமி, இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் மயில்சாமியை ஏமாற்றியது ரெட்டிபாளையம் கிழக்குத் தெருவை சேர்ந்த அபிமன்யு (வயது 22) என்பது தெரியவந்தது.இதையடுத்து காவல் போலீசார் அபிமன்யுவை கைது செய்தனர்.

    • இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா அரியலூர் பள்ளியில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில், இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.விழாவுக்கு அக்கல்வி நிலையத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் பெ .செüந்தரராஜன் முன்னிலை வகித்து பேசுகையில், இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு உயிர்களின் கடமையாகும். இயற்கையோடு இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையை பேண வேண்டும் .இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என இயற்கையோடு வாழும் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கும். இதுவே காலத்தின் தேவைப்பாடாகும். அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையை பாதுகாத்து வளம் பெறுவோம் என்றார்.விழாவில் விழிப்புணர்வுப் போட்டிகளி வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளிச் செயலர் புகழேந்தி வரவேற்றார்.

    • அரியலூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது
    • 3 மாத பயிற்சியில் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு

    அரியலூர்,

    அரியலூர் திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

    3 மாத திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமும், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் இணைந்து நடத்துகிறது. இப்பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. வரை இருக்கலாம். வயது  40 க்குள் இருத்தல் வேண்டும்.கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், தச்சு, பார்பெண்டிங் அண்ட் சாரக்கட்டு. பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியானது தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் சேர்ந்து இப்பயிற்சியை நடத்த உள்ளன. பயிற்சி காலம் 7 நாள்களுக்கு வழங்கப்படும். ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும்.இப்பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18}க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 3 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர வேலை, கம்பி வளைப்பவர் தச்சு, பார்பெண்டிங் அண்ட் சாரக்கட்டு ஆகிய தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.இதுகுறித்த விவரங்களை அறிய மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுகலாம். இப்பயிற்சிகள் ஆகஸ்ட் 15}ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • கூழாங்கற்கள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது
    • 2 டிரைவர்களை கைது செய்து போலீசார் விசாரணை

    ஆண்டிமடம், 

    அரியலுார் மாவட்டம் ஜெயங் கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூழாங்கற்களை லாரிகளில் கடத்தி செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரியலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் விருத்தாச்சலம் - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்ததில் கூழாங்கற்கள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆண்டிமடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.லாரிகளின் டிரைவர்கள் விழுப்புரம் மாவட்டம் ராதாகிருஷ்ணன் (30) மற்றும் விருத்தாசலம் அருகே நெடியப்பட்டு கிராமம் ராஜ்குமார் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 8 லாரி டயர்களை டிரைவர் திருடி சென்றார்
    • தலைமறைவானவரை பிடித்து போலீசார் கைது செய்தனர்

    அரியலூர்,

    திருச்சி ஸ்ரீவெங்கட்ரமணா டிரான்ஸ்போட்டில் பல்கர் லாரியின் ஓட்டுநராக கடந்த 4 ஆண்டுகளாக பணிப் புரிந்து வந்த மதுரை மேலூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் காஞ்சிவனம்(48) என்பவர் கடந்த 8 ஆம் தேதி கும்பகோணத்தில் லோடு இறக்கி விட்டு லாரியை அரியலூர் ராம்கோ சிமென்ட் ஆலைக்கு எடுத்துச் செல்வதாக நிறுவனத்துக்கு தகவல் சொன்னவர் சிறிது நேரத்தில் பல்கர் லாரியின் ஜிபிஎஸ் சிக்னலை அணைத்துத்துள்ளார்.நிறுவனத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது, கைப்பேசியை அவர் எடுக்கவில்லை. லாரியை அவர் ராம்கோ சிமென்ட் ஆலை அருகே நிறுத்திவிட்டு தலைமறைவாகினார்.இதனால் சந்தேகமடைந்த அந்நிறுவனத்தின் கிளை மேலாளரும், திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில், பிரகாஷ் நகரை சேர்ந்தவருமான பாலமுருகன், லாரியை நேரில் வந்து பார்த்த போது, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 8 டயர்கள் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து கிளைமேலாளர் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், அரியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த காஞ்சிவனத்தை மதுரை, மேலூரில் வெள்ளிக்கிழமை கைது செய்து, அரியலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • அன்பு மணி ராமதாஸ் கைதை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம், 

    நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கண்டித்து அப்பகுதி மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்த போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போக அறிவுறுத்தினர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து செல்லவில்லை. இந்நிலையில் அவ்வழியாக வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா தலைமையிலான அதிரடிப்படை போலீசார் நகர செயலாளர் பரசுராமன் உட்பட பாமக-வினர் 13 பேரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஜெயங்கொண்டம் அருகே மனைவி தற்கொலை முயற்சியை அறிந்துகணவர் மன வேதனையில் விஷம் குடித்து சாவு
    • இவருக்கு கல்பனா என்ற ம னைவியும் 2 குழந்தைகளும் உள்ளன

    ஜெயங்கொண்டம்.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிரையன்பட்டிணம் கல்சாவடிகொட்டா தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் பச்சமுத்து(வயது27). இவருக்கு கல்பனா என்ற ம னைவியும் 2 குழந்தைகளும் உள்ளன.

    இந்நிலையில் கல்பனாவிற்கு அர்த்தநேரி கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதளை அறிந்த பச்சமுத்து தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கல்பனா மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சித்தார். பின்னர் கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வ ருகிறார்.

    இதனால் பச்சமுத்து மன வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து பச்சமுத்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி உள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பச்சமுத்துவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று , பாண்டிச்சேரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த பச்சமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் பச்சமுத்து தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ் ெ பக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ஆசிரியர்கள், மாணவர்கள்
    • அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர்

    அரியலூர்,

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக், கல்லூரிகளில் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், அப்து ல்கலாம் படத்துக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை, அரியலூர் அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, தங்கபாண்டி இளநிலை உதவியாளர் மணி கண்டன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர். லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சௌ ந்தர்ராஜன் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதே போல் மாவட்ட த்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூ ரிகளில் அப்துல்கலாம் நினைவுத் தினம் அனுசரி க்கப்பட்டது.

    • நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அண்ணாசிலை அருகே சிஐடியு வினர் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது
    • ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்

    அரியலூர்,

    அரியலூரில் ஆட்டோ ஸ்டாண்ட் அறிவிப்பு பலகையை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அண்ணாசிலை அருகே சிஐடியு வினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுப ட்டனர்.

    அரியலூர் செட்டி ஏரி பூங்கா அருகே ஆட்டோ ஸ்டாண்டு வைக்க அனுமதி தருமாறு நகராட்சி நிர்வாகத்திடமும், மாநில நெடுஞ்சாலைத் துறையினரிடமும் சிஐடியு அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு நகராட்சி நிர்வாகம் இதற்கெல்லாம் அனுமதி கொடுத்ததில்லை என்று கூறியுள்ளது. இதையடுத்து சிஐடியு சார்பில் செட்டி ஏரி முன்பு கடந்த 17-ம் தேதி ஆட்டோ ஸ்டாண்ட் திறக்க ப்பட்டது. இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நகராட்சி நிர்வாகம் கடந்த 26 -ம் தேதி அகற்றியது.

    இதனைக் கண்டித்தும், மீண்டும் அதே இடத்திலேயே ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட அனுமதிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலர் அருண்பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • அரியலூரில் பனை விதை, கன்றுகள் 100 சதவீதம் மானியம் கலெக்டர் அறிவிப்பு
    • விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அதில் அவர்கூறியிரு ப்பதாவது-

    தமிழகத்தின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இணைந்த மரமாக இருக்கிறது. நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணுக்கு உகந்த மரமாக உள்ளது. மேலும், அடி முதல் நுனி வரை பயன் தந்து பலருக்கு வாழ்வா தாரமாகவும் விளங்கு கிறது.

    எனவே பனை சாகுபடியை ஊக்குவி ப்பதற்காகவும், விவசாயி களின் வாழ்வா தாரத்தை மேம்படு த்துவதற்காகவும், நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்ட தோட்ட க்கலை துறைக்கு இலக்காக 30,000 பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானியத்தில் விநியோகம் செய்ய ரூ.1,02,500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயன டைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    • வங்கியில் 20 பவுன் போலி நகை அடமானம் வைக்க முயன்ற தேமுதிக ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் கைது
    • தப்பி ஓடிய நிர்வாகிக்கு வலைவீச்சு

    அரியலூர்,

    அரியலூரில், அரியலூர்- திருச்சி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது.இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர்.இந்த நிலையில் அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (வயது 39) மற்றும் அரியலூர் அஸ்வினாபுரம் பகுதியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி மணிமாறன் (39), பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ் (35) ஆகிய 3 பேரும் நகை அடமானம் வைக்க இந்த வங்கிக்கு வந்தனர்.மணிகண்டனும், மணிமாறனும் வங்கிக்குள் சென்று நகை மதிப்பீட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர். ரமேஷ் வங்கிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.இதையடுத்து மதிப்பீட்டாளர் அவர்கள் கொடுத்த நகைகளின் உண்மை தன்மையை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அப்போது அது போலி நகை என்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மேலாளரிடம் உங்களுக்கு பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என கூறிவிட்டு அந்த போலி நகைகளுடன் உதவி மேலாளர் செந்தில் குமார் கேபினுக்கு சென்றார். இதை அறிந்து ஆடிபோன செந்தில்குமார் சப்தமில்லாமல் அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீச இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.பின்னர் நகை மதிப்பீட்டாளர் முன்பு அடமானத் தொகைக்காக காத்திருந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மணிமாறன் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 20 பவுன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தேமுதிக ஒன்றிய செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளையபெருமாள் நல்லூர் இருளர் இன மக்களுக்கு மனைபட்டா வழங்க கேட்டு பேரணி நடத்தினர்
    • இருளர் இன மக்கள் வாழ்ந்த ௪.௭௫ ஏக்கரை மனைபட்டாவாக வழங்க கோரிக்கை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் இளையபெருமாள் நல்லூர் இருளர் இன மக்கள் வாழ்ந்த 4.75 ஏக்கர் நிலப்பரப்பை அவர்களுக்கே மனைபட்டா வழங்க கோரி ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பாளர் இளையபெருமாநல்லூர் நாகராஜ் தலைமை தாங்கினார், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாநாட்டு தொடக்க உரையாக தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கம் மாநில பொருளாளர் ஏழுமலை சிறப்புரையாற்றி பேசினார். மாநில செயலாளர் பரமசிவம் தமிழ்நாடு விவசாய சங்கம் உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஜெயங்கொண்டம் அண்ணாசிலையில் இருந்து முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர். பேரணியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பழங்குடி இனத்தைச் சார்ந்த பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×