என் மலர்
அரியலூர்
- ரூ.7.67 கோடி மதிப்பில் 33 வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் ஒன்றியம், உசேனாபாத் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் (40 மீ) அமைக்கும் பணிக்கும், ரூ.3.02 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைத்தல் பணிக்கும், ரூ.4.78 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் மற்றும் மணல் வடிகட்டி உறிஞ்சுக்குழி (140 மீ) அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து அவர், மோரக்குழி, நுரையூர் ,அயன் ஆத்தூர், பூமுடையான்பட்டி, இலுப்பையூர் , பொய்யாதநல்லூர், தாமரைக்குளம் வெங்கட்ராமபுரம், தவுத்தாய்க்குளம் , அம்மாக்குளம் , வாலாஜாநகரம், பெரியநாகலூர் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.7.67 கோடி மதிப்பீட்டில் 33 பணிக்கு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ண தலைமை வகித்தார். அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது
- நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
அரியலூர்,
அரியலூர் அரசு கலைக் கல்லூரி சாலையில், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணை பொதுச் செயலர் பெ.செüந்தரராஜன், நாளும் ஒர் திருக்குறள் பெயர் பலகையை திறந்து வைத்தார். உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், வழக்குரைஞருமான எஸ்.வி.சாந்தி, புலவர் சி.இளங்கோ, சாந்தி மருத்துவமனை மருத்துவர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் பாண்டியன், செயலர் பெ.நாகமுத்து, துணைச் செயர் செவ்வேல் , செயற்குழு உறுப்பினர்கள் மலர்மாறன், ரவி, தனபால் உள்ளிட்டோர் பேசினர் . முடிவில் உலக திருக்குறள் கூட்டமைப்பின் மண்டல தலைவர் க.சின்னதுரை நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
- குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணவதி கொடியசைத்து தொடக்கி வைத்தார்
அரியலூர்,
ஆள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.பேரணியை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் குணவதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் அன்னை தெரசா பாரா மெடிக்கல் மற்றும் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைகளுக்கு போதை பொருள்கள் பழக்கம், குழந்தை கடத்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்போம், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.பேரணியில், அன்னை தெரசா பாரா மெடிக்கல் தாளாளர் முரளிதரன், சுபம் மதுபோதை மீட்பு மைய செயலாளர் அருண்பிரசாத், ஆலோசகர் நித்திஷ், ஆசிரியர்கள் சித்ரா, கோவிந்தம்மாள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- திருமானூர் அருகே தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது
- அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு
அரியலூர்,
திருமானூர் அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாயி ரவி(48). இவரது அண்ணன் ராஜேந்திரன்(50). இருவருக்கும் சொத்துதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரவிவீட்டு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று ராஜேந்திரன் வீட்டின்கூரையில் விழுந்துள்ளது. இதனால், இரு குடும்பத்தாருக்கும் தகராறுஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தம்பி ரவியைஅரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி, தஞ்சைமருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து,ரவியின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் திருமானூர்காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்து சிறையில்அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மைநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த மாவட்டமுதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், குற்றவாளி ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள்சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தார். இதையடுத்து ராஜேந்திரன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் துளாரக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் சரிவர வரவில்லை. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட பெண்களிடம், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணைத் தலைவர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- அரியலூரில் 6 பயனாளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
- விலையில்லா மிதிவண்டிகளை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ண, பொதுமக்களிடமிருந்து 336 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக அவர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 6 பயனாளிகளுக்கு ரூ.30,867 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்ந ல அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்க லந்துகொண்டனர்.
- அரியலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
- கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5ம் தேதி மமுதல் 16ந்தேதி வரை ஜெயங்கொண்டம் வட்டத்தில் 162 நியாய விலைக் கடை பகுதிகள், ஆண்டிமடம் வட்டத்தில் 67 நியாய விலைக் கடை பகுதிகள் என மொத்தம் 229 நியாய விலைக் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பப் பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 முதல் பகல் 1.00 மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.ஆகஸ்டு 1ம் தேதி முதல் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டங்களில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் அந்தந்த நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் குறித்த நேரத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின்கட்டண இரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இரண்டாம் கட்ட முகாம்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் - 04329-228709, 9384056231 (வாட்ஸ் அப் எண்), வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜெயங்கொண்டம் - 04331-250220, ஆண்டிமடம் - 04331-299800 ஆகிய கட்டுப்பாட்டு அறை (Control Room) தொலைபேசி எண்களில், அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் ராஜவேல்(வயது 31). இவர் டிப்ளமோ படித்துவிட்டு கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே தெருவில் வசிக்கும் பாண்டியன் மகள் நதியா(21) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக ராஜவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வது பற்றி வீட்டில் பேசியபோது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜவேல் குடும்பத்தினர் நதியாவை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்து வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நதியா இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை சில ஆண்டுகளாக ஏமாற்றி காதலித்து விட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து ராஜவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூரில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(வயது 43). விவசாய கூலி தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் செட்டிகுழியில் இருந்து கோவிலூர் செல்லும் சாலையில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் அருகே மரத்தடியில் அமர்ந்து பருத்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூரில் மர்ம நபர்கள் மின் ஒயர் - பணத்தை திருடி சென்று உள்ளனர்
- திருமானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 65). இவருக்கு சொந்தமான வயல் அதே பகுதியில் உள்ளது. வயலில் உள்ள மின் மோட்டார் அறையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.5,000 மற்றும் ரூ.10,000 மதிப்பிலான ஒயர்களை திருடிச்சென்றனர். இதேபோல் அருகே இருந்த ஆனந்த்(40), லோகநாதன்(30) ஆகியோருக்கு சொந்தமான அடுத்தடுத்த மோட்டார் அறைகளிலும் தலா ரூ.5,000 மதிப்பிலான ஒயர்களையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்தில் குறுவை நெல் சாகுபடி பல்வேறு பயிர் பருவங்களில் உள்ளது. குறிப்பாக தற்சமயம் நடவு செய்து 30 நாட்களான வயல்களில் பாசி படர்ந்து பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் வளர்ச்சி குறைந்து கருகிய நிலையில் காணப்படுகிறது இது குறித்து செய்திதினத்தந்தி நாளிதழில் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக தா.பழூர் ஒன்றிய உதவி வேளாண் இயக்குனர் செல்வகுமார் மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்பவல்லுனர் திருமலைவாசன் ஆகியோர் அணைக்குடி மற்றும் ஸ்ரீபுரந்தான் கிராம பகுதி பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டனர்.
- அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது
அரியலூர்,
மணிப்பூர் கலவரத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே இந்திய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவர சம்பவங்களை தடுக்க தவறிய அம்மாநில பா.ஜ.க. ஆட்சியை கலைத்திட வேண்டும். கலவரத்துக்கு காரணமானவர்கள் மீதும், பாலியல் வன்முறை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.ஆறுமுகம், ப.கலியபெருமாள், மு.கனகராஜ் மற்றும் ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.






