என் மலர்
உள்ளூர் செய்திகள்

2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
- அரியலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
- கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5ம் தேதி மமுதல் 16ந்தேதி வரை ஜெயங்கொண்டம் வட்டத்தில் 162 நியாய விலைக் கடை பகுதிகள், ஆண்டிமடம் வட்டத்தில் 67 நியாய விலைக் கடை பகுதிகள் என மொத்தம் 229 நியாய விலைக் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பப் பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 முதல் பகல் 1.00 மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.ஆகஸ்டு 1ம் தேதி முதல் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டங்களில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் அந்தந்த நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் குறித்த நேரத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின்கட்டண இரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இரண்டாம் கட்ட முகாம்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் - 04329-228709, 9384056231 (வாட்ஸ் அப் எண்), வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜெயங்கொண்டம் - 04331-250220, ஆண்டிமடம் - 04331-299800 ஆகிய கட்டுப்பாட்டு அறை (Control Room) தொலைபேசி எண்களில், அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.






