என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஜெயங்கொண்டம் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு
    • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான கணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம் அடுத்த கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது35). இவரது மனைவி பானு ப்பிரியா(29). இவர்களுக்கு 3 வயதில் ஆண் ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர்கள் இலையூர் கண்டி யங்கொல்லையிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மனோகரன் பானுப்பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

    இதனிடையே மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த மனோகரன் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட பானுப்பிரியா, வாரியங்காவில் வசிக்கும் தனது தந்தை நீலமேகம் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து வேலைக்குச் சென்றுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று உணவகத்தில் வேலை செய்து கொ ண்டிருந்த பானுப்பிரி யாவை, இனி வேலைக்கு செல்லக்கூடாது என மனோ கரன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மனோகரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பானுப்பிரியாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவலறிந்து வந்த பானுப்பி ரியாவின் தந்தை நீலமேகம், ரத்த வெள்ளத்தில் கிடந்த பானுப்பிரியாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து நீலமேகம் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மனோகரனை தேடி வருகின்றனர்.

    • புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • காவிரி க்கரையோர மாவட்டங்க ளில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது

    திருமானூர்,  

    அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட ஆற்றில் ஆடி18 முன்னிட்டு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது

    18ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி.. வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம்

    மன்னர்கள் காலம் தொட்டே காவிரி க்கரையோர மாவட்டங்க ளில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    தென்மேற்குப் பருவமழை ஆனிமாதம் துவங்கியதும், குடகுமழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி கடைசியில் கொங்கு, சோழமண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால் நிரம்பும்.

    ஆடிப்பட்டத்தில் அந்தாண்டு முதன்முதலாக விவசாயிகள் தங்கள் நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே "ஆடிப்பெருக்கு' விழாவில் திருமானூர் கொள்ளிட ஆற்றங்கரையில் போலீஸ் காவலர்கள் துணையோடு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொள்ளிட ஆற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர் பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க திருமானூர் போலீஸ் காவல்பணியில் ஈடுபட்டிருந்தது.



    • டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் 2-ம்கட்ட ஆலோசனை கூட்டம் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
    • மொத்தமாக கொள்முதல் செய்து சென்னை கோய ம்பேட்டிற்குஅனுப்புவது என முடிவு

    அரும்பாவூர், 

    ஓபெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடம்பூர்,கள்ளபட்டி, அரடிக்காடு,அரும்பாவூர்,பெரியம்மாபாளையம்,வீரகனூர் ,வெங்கனூர் உள்ளிட்டபகுதிகளில் விவசாயத்தை நம்பி மட்டுமே மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.எந்த பயிர் சாகுபடி செய்தாலும் உரியவிலை கிடைக்காமல் அப்பகுதி விவசாயிகள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றனர்.அதனை அறிந்த பூலாம்படியை சேர்ந்த டத்தோ பிரகதீஸ்குமார் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிவெடுத்து ஆலோசனை மேற்கொண்டுவந்தார்.அதில்பூலாம்பாடியில் விவசாயிகளின் ஒத்துழைப்போடு பெரிய அளவில் காய்கறி மார்க்கெட்அமைத்து மொத்தமாக கொள்முதல் செய்து சென்னை கோய ம்பேட்டிற்குஅனுப்புவது என முடிவு செய்தார்.அதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    அதில்பேசிய டத்தோ பிரகதீஸ்குமார்,நம்பகுதிவிவசாயிகளின் வாழ்வாதா ரத்தை உயர்த்தும் நோக்கில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஒவ்வொரு விவசாயியும் வெவ்வேறு காய்கறிகளை பயிரிடவேண்டும்.பயிரிடுவதற்கான ஆலோ சனை,அரசுமானியங்கள் பெறுவது போன்ற வற்றிற்கு உதவி செய்யப்படும்.அனைவரும் ஒற்று மையாக இருந்துசெ யல்பட்டால் இங்கிருந்து மலேசி யாவிற்கு காய்கறி களை ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் இது தொடர்பான 2ஆம் கட்ட ஆலோசனைக்கூட்டம் பூலாம்பாடி திரௌபதி அம்மன் கோவிலில் டத்தோபிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.அதில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு காய்கறிபயிரிடுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.வங்கி அதிகாரிகள் பங்கேற்று கடனுதவிகளை எடுத்துக்கூறினர்.இதில் பூலாம்பாடிமற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

    • கொடுக்கல் வாங்கல் தகராறில் மாமியாரை மருமகன் தாக்கி உள்ளார்
    • மாமியாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மனைவி ராணி (வயது 47). இவருக்கும், இவரது மருமகன் வாரியங்காவல் வடக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தனது மாமியார் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ராணி அளித்த புகாரின் பேரில் வேல்முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதைகள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது
    • திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு அறிவுறுத்தல்

    அரியலூர்,

    திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மக்காச் சோளம் மற்றும் பருத்தி அதிகமான பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. இப்பயிர்களை விதைப்பு செய்ய ஆடிப்பட்டம் மிகவும் ஏற்றதாகும். எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கும்போது தமிழ்நாடு அரசால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு, விதைகளை வாங்கும்போது விதைப் பைகளில் உள்ள விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதியாகும் நாள், குவியல் எண், அவரவர் பகுதிக்கு ஏற்றவையா என்பவற்றை பார்த்து வாங்க வேண்டும்.மேலும், விதைகளை வாங்கும்போது ரசீதில் விதையின் ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது.தாங்கள் விற்கும் விதைக்கு ரசீதை தவறாமல் வழங்க வேண்டும். விவசாயிகள் விதைகளை விதைக்கும்போது மண்ணில் போதிய ஈரம் இருக்க வேண்டும். அறுவடை முடியும் வரை அந்த ரசீதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ரசீது இருந்தால் தான் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் உரிய இழப்பீடு கோர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • அரியலூர் மாவட்ட சிறுபான்மையினர் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அழைப்பு விடுத்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்கு உட்பட்டு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இதற்கு தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயின்றதற்கு உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வருமான ஆண்டு உச்சவரம்பு ரூ.1 லட்சமாக இருக்க வேண்டும்.

    20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் எந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    • அரியலூர் மாவட்டத்தில் பளிங்காநத்தத்தில் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

    அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் ஊராட்சி பழனியாண்டி நகரில் ரூ.12 லட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இதனை  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் டால்மியா சிமெண்ட் ஆலை தலைவர் விநாயகமூர்த்தி குத்து விளக்கேற்றினார். விழாவில் அரியலூர் கலெக்டர் ஆனிமேரி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, திருமானூர் சேர்மன் சுமதி அசோக சக்கரவர்த்தி, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் மாணிக்கம், ம.தி.மு.க. மாணிக்கவாசகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு மூலம் அழைத்துள்ளார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விரும்பும், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினத்தை சேர்ந்த 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்காக ஆகஸ்ட் 12 -ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவ,மாணவிகளின் செயல்பாட்டில் இருக்கும் செல்போண் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    • அரியலூரில் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் பேருந்து நிலையம் அரசு கலைக் கல்லூரி புதிய வழித் தடத்தில் பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன.பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இந்த பேருந்து சேவையினை கொடியசைத்து தொடக்கி வைத்தார். அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு காலை கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் மதியம் கல்லூரி முடிவடையும் நேரங்களில் 6 நகரப் பேருந்துகள் மூலம் தினசரி 12 நடைகள் கூடுதலாக இயக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் கூடுதலாக நகரப் பேருந்து வசதியினை பெறுகின்றனர். . இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட், மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், திருச்சி மண்டல பொது மேலாளர் எஸ்.சக்திவேல், அரியலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் ஜோ.டொமினிக் அமல்ராஜ், அரியலூர் நகர்மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கனரக லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு தகவல் பலகை
    • முக்கிய சாலைகளில் 8 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது

    ஜெயங்கொண்டம், 

    ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வராமல் தடுக்கும் விதமாக ஜெயங்கொண்டம் முக்கிய சாலைகளில் 8 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதுஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் வர்த்தகர்கள் பொதுமக்கள் கோரிக்கையின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பெயரில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆய்வாளர் சாஹிரா பானு மற்றும் போக்குவரத்து போலீசார்கள் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் விபத்து தடுக்கும் விதமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்களை இயக்காமல் இருக்கும் வகையில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கும் விதமாக ஜெயங்கொண்டம் முக்கிய சந்திப்பில் 8 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம் மிதித்து வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரியலூரில் உலக காகித தின கொண்டாட்டம் நடைபெற்றது
    • காகித பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்க உரை

     அரியலூர்,

    அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், உலக காகித தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட மைய நூலகர் செசிராபூ கலந்து கொண்டு பேசுகையில், உலகில் காகித பயன்பாடு மிகவும் முக்கியமானது. சமூக ஊடகங்கள் மின்னணு கருவிகள் எவ்வளவோ இருந்தாலும், காகிதம் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை. மக்களுக்கு செய்திகளை வழங்க செய்தித்தாள்களாகவும், அறிவு சுரங்கங்களான புத்தகங்களை அச்சிடுவதற்கும் காகிதங்கள் மிகவும் முக்கியமாக பயன்படுகின்றன.71% காகித உற்பத்தி மறுசுழற்சி முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன .காடுகளை அழித்து தான் காகிதம் உருவாக்கப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.காகித ஆலைகளால் அதிகமாக வளர்க்கப்படும் மரங்களாலேயே காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன . காகிதங்கள் எளிதில் மக்குவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை. கணினி, கைப்பேசி போன்ற சாதனங்களை பயன்படுத்தி கற்பதைவிட காகிதத்தை பயன்படுத்தி கற்பது அதிக நாள்கள் நினைவில் இருக்கும்.உலகில் சராசரி மனிதர்களின் காகித பயன்பாடு 60 கிலோவாக இருக்கும் பொழுது, இந்தியர்களின் சராசரி காகித பயன்பாடு 13 கிலோவாக உள்ளது. இதனை அதிகரிக்க செய்தித்தாளையும் புத்தகங்களையும் அதிகம் வாசிக்க தூண்டுவிக்க வேண்டும்.மாணவர்கள் நூலகப் புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் அதிகம் வாசிக்க வேண்டும்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, மாணவ,மாணவிகள் அனைவரும், நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், கோகிலா, தங்க பாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அரியலூரில் ஓ.பி.எஸ்.-அ.ம.மு.க. கூட்டணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அரியலூர்,

    கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு ஓபிஎஸ் அணி, அமமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், திமுக தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் கூறியவாறு, கொடநாடு கொலை, கொள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்.என்று கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்துக்கு ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலர் விஜயபார்த்திபன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் கவிதாராஜேந்திரன், அவைத் தலைவர் ரவிச்சந்திரன், நகரச் செயலர் உத்தாண்டம் கார்த்திக், மாநில துணைச் செயலர் ராஜ்குமார், ஒன்றியச் செயலாளர்கள் லோகராஜ், சுரேஷ், புகழேந்தி, அமமுக நிர்வாகி வடிவேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    ×