என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினருக்கு இலவச தையல் இயந்திரம்
- அரியலூர் மாவட்ட சிறுபான்மையினர் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
- அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அழைப்பு விடுத்துள்ளார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்கு உட்பட்டு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இதற்கு தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயின்றதற்கு உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வருமான ஆண்டு உச்சவரம்பு ரூ.1 லட்சமாக இருக்க வேண்டும்.
20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் எந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.






