என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பளிங்காநத்தத்தில் நூலகம் திறப்பு
    X

    பளிங்காநத்தத்தில் நூலகம் திறப்பு

    • அரியலூர் மாவட்டத்தில் பளிங்காநத்தத்தில் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

    அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் ஊராட்சி பழனியாண்டி நகரில் ரூ.12 லட்சம் ரூபாய் செலவில் புதிய நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் டால்மியா சிமெண்ட் ஆலை தலைவர் விநாயகமூர்த்தி குத்து விளக்கேற்றினார். விழாவில் அரியலூர் கலெக்டர் ஆனிமேரி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, திருமானூர் சேர்மன் சுமதி அசோக சக்கரவர்த்தி, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் மாணிக்கம், ம.தி.மு.க. மாணிக்கவாசகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×