என் மலர்
உள்ளூர் செய்திகள்

டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் 2-ம்கட்ட ஆலோசனை கூட்டம்
- டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் 2-ம்கட்ட ஆலோசனை கூட்டம் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
- மொத்தமாக கொள்முதல் செய்து சென்னை கோய ம்பேட்டிற்குஅனுப்புவது என முடிவு
அரும்பாவூர்,
ஓபெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடம்பூர்,கள்ளபட்டி, அரடிக்காடு,அரும்பாவூர்,பெரியம்மாபாளையம்,வீரகனூர் ,வெங்கனூர் உள்ளிட்டபகுதிகளில் விவசாயத்தை நம்பி மட்டுமே மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.எந்த பயிர் சாகுபடி செய்தாலும் உரியவிலை கிடைக்காமல் அப்பகுதி விவசாயிகள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றனர்.அதனை அறிந்த பூலாம்படியை சேர்ந்த டத்தோ பிரகதீஸ்குமார் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிவெடுத்து ஆலோசனை மேற்கொண்டுவந்தார்.அதில்பூலாம்பாடியில் விவசாயிகளின் ஒத்துழைப்போடு பெரிய அளவில் காய்கறி மார்க்கெட்அமைத்து மொத்தமாக கொள்முதல் செய்து சென்னை கோய ம்பேட்டிற்குஅனுப்புவது என முடிவு செய்தார்.அதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதில்பேசிய டத்தோ பிரகதீஸ்குமார்,நம்பகுதிவிவசாயிகளின் வாழ்வாதா ரத்தை உயர்த்தும் நோக்கில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஒவ்வொரு விவசாயியும் வெவ்வேறு காய்கறிகளை பயிரிடவேண்டும்.பயிரிடுவதற்கான ஆலோ சனை,அரசுமானியங்கள் பெறுவது போன்ற வற்றிற்கு உதவி செய்யப்படும்.அனைவரும் ஒற்று மையாக இருந்துசெ யல்பட்டால் இங்கிருந்து மலேசி யாவிற்கு காய்கறி களை ஏற்றுமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் இது தொடர்பான 2ஆம் கட்ட ஆலோசனைக்கூட்டம் பூலாம்பாடி திரௌபதி அம்மன் கோவிலில் டத்தோபிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.அதில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு காய்கறிபயிரிடுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.வங்கி அதிகாரிகள் பங்கேற்று கடனுதவிகளை எடுத்துக்கூறினர்.இதில் பூலாம்பாடிமற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.






