என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6 பயனாளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
    X

    6 பயனாளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

    • அரியலூரில் 6 பயனாளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
    • விலையில்லா மிதிவண்டிகளை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ண, பொதுமக்களிடமிருந்து 336 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக அவர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 6 பயனாளிகளுக்கு ரூ.30,867 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்ந ல அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்க லந்துகொண்டனர்.

    Next Story
    ×