என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருளர் இன மக்களுக்கு மனைபட்டா கேட்டு பேரணி
    X

    இருளர் இன மக்களுக்கு மனைபட்டா கேட்டு பேரணி

    • இளையபெருமாள் நல்லூர் இருளர் இன மக்களுக்கு மனைபட்டா வழங்க கேட்டு பேரணி நடத்தினர்
    • இருளர் இன மக்கள் வாழ்ந்த ௪.௭௫ ஏக்கரை மனைபட்டாவாக வழங்க கோரிக்கை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் இளையபெருமாள் நல்லூர் இருளர் இன மக்கள் வாழ்ந்த 4.75 ஏக்கர் நிலப்பரப்பை அவர்களுக்கே மனைபட்டா வழங்க கோரி ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பாளர் இளையபெருமாநல்லூர் நாகராஜ் தலைமை தாங்கினார், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாநாட்டு தொடக்க உரையாக தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கம் மாநில பொருளாளர் ஏழுமலை சிறப்புரையாற்றி பேசினார். மாநில செயலாளர் பரமசிவம் தமிழ்நாடு விவசாய சங்கம் உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஜெயங்கொண்டம் அண்ணாசிலையில் இருந்து முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர். பேரணியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பழங்குடி இனத்தைச் சார்ந்த பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×