என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவி தற்கொலை முயற்சியை அறிந்துகணவர் மன வேதனையில் விஷம் குடித்து சாவு
- ஜெயங்கொண்டம் அருகே மனைவி தற்கொலை முயற்சியை அறிந்துகணவர் மன வேதனையில் விஷம் குடித்து சாவு
- இவருக்கு கல்பனா என்ற ம னைவியும் 2 குழந்தைகளும் உள்ளன
ஜெயங்கொண்டம்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிரையன்பட்டிணம் கல்சாவடிகொட்டா தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் பச்சமுத்து(வயது27). இவருக்கு கல்பனா என்ற ம னைவியும் 2 குழந்தைகளும் உள்ளன.
இந்நிலையில் கல்பனாவிற்கு அர்த்தநேரி கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதளை அறிந்த பச்சமுத்து தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கல்பனா மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சித்தார். பின்னர் கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வ ருகிறார்.
இதனால் பச்சமுத்து மன வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து பச்சமுத்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி உள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பச்சமுத்துவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று , பாண்டிச்சேரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த பச்சமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் பச்சமுத்து தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ் ெ பக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






