என் மலர்
அரியலூர்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 25 வி.சி.க. பொறுப்பாளர்கள் ரத்ததானம் செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து 25 வி.சி.க. பொறுப்பாளர்கள் ரத்ததானம் செய்தனர்.
அதன்பின்னர் அக்கட்சியின் ஊடகப்பிரிவு சுந்தர் தலைமையில் உள்நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் என 100 நபர்களுக்கு இலவசமாக பிரட், மற்றும் வேட்டி, சேலைகள், வழங்கினர்.
அதனை தொடர்ந்து திருச்சி -சிதம்பரம் சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் காமராஜ் லோகநாதன், சிவா சக்கராயுதம், சின்னராசா, குமாரவேல், ராஜா, கருணா, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவமனை டாக்டர் ரவிசங்கர் தலைமையில், டாக்டர் மோகன் அரியலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தினை கொண்டு சென்றனர்.
வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து, குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்துள்ள உதய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது35). இவரது மனைவி இளவழகி (25). ஸ்டாலின் தாய் செல்வி. இவர்கள் 3 பேரும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு முன் பக்க கதவை திறந்து வைத்து, வீட்டின் வெளியே படுத்திருந்தனர்.
இந்நிலையில் அதிகாலை குழந்தை அழும் சத்தத்தை கேட்டு இளவழகி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து, குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி கொடி, வெள்ளி கொலுசு, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்று மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செந்துறை பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின்விநியோகம் இருக்காது.
செந்துறை:
செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் வினியோகம் பெரும்பகுதிகளான செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன் குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு,மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர்,
வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்த நாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 முதல் மாலை பணி முடியும் வரை மின் வினியோகம் நிறுத்தப்படுமென செந்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை கலெக்டர் விஜயலட்சுமி ஏற்றி வைத்து 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில், சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், ஒற்றுமையை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அதைதொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 29 ஆயிரத்து 455 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பதக்கங்களையும் கலெக்டர் வழங்கினார்.

இதைதொடர்ந்து 6 பள்ளிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளான, வாரணவாசி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் சமூக விழிப்புணர்வு நடனமும், செந்துறை தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், அரியலூர் தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், கீழப்பழுவூர் தனியார் பள்ளி சார்பில் நாட்டுப்பற்று நடனமும், கொல்லாபுரத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மரக்கன்றுகளை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நட்டனர்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டாட்சியர்கள், துணை கலெக்டர்கள், கல்வித்துறை, வருவாய்துறை, வளர்ச்சிதுறை, காவல் துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி, வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் பாரதிராஜா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் சங்கர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் தலைமையிலும், ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் ஆனந்தவேல் தலைமையிலும், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலும், தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி தலைமையிலும் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஆண்டிமடம், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் துணை வட்டாட்சியர் வேலுமணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
இதேபோல் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆண்டிமடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக ஆண்டிமடம் நான்கு ரோடு அருகில் ஆண்டிமடம் நகர தலைவர் செல்வராசு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.
திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் (வளர்ச்சி) கலையரசு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.
இதேபோல் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் இன்பராணி, இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் குமரவேல், திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவர் மணிவண்ணன், காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி உள்ளிட்டோர் தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினர்.
இதேபோல், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையங்களில் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டன. இதில் திரளான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உடையார்பாளையம் வடக்கு நடு நிலைப்பள்ளி யில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சவுக்கத் தேசியகொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் வரவேற்றார். பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை வாசித்தல், வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

ஜெயங்கொண்டத்தில் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உட்கோட்டை கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ரமேஷ், முத்துசாமி, குருநாதன், தியாகராஜன், காமராஜ், மீனா ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டசெய லாளர் மணிவேல்,ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகாராசன், இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் கோரிக்கைகள் பற்றி பேசினார்.
கூட்டத்தில் உட்கோட்டை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் திட்டங்களை கைவிடக்கோரியும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முதல் கட்ட நிதியாக ரூ.32 ஆயிரத்து500 யை மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலனிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் புகழேந்தி, மனோகரன், கெங்காசலம், இளைய பெருமாள், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இடைக்கட்டு கிளை செயலாளர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் புகழேந்தி நன்றி கூறினார்.
உடையார்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 63). விவசாயி. இவரது உறவினர்கள் ரவி (45), கலியபெருமாள். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக் கிளில் தத்தனூரில் ஜாதகம் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மூர்த்தியான் கிராமம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குணசேகரன் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டம், கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரசாத் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர தின விழாவையொட்டி அரியலூரில் மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரியலூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். காவல் துறையினர், தீயணைப்பு, தேசிய மாணவர் படையினரின் கண்கவர் அணிவகுப்புகளும், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதையொட்டி சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நேற்று விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு, என்.சி.சி. மாணவர்கள், என்.எஸ்.எஸ். மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருணாநிதி மறைவையொட்டி ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் தி.மு.க.வினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
கருணாநிதி மறைவையொட்டி ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் தி.மு.க.வினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. வாரியங்காவல் பஸ் நிறுத்தத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக இலையூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர் தர்மதுரை தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெங்கமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர்தொண்டரணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன் வரவேற்றார். இதில் செல்ல மணிமாறன், இளவரசன், புலவர் பரமசிவம், கிரேஸ் சுப்பிரமணியன், சிவமுத்து மயில்வாகணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #JewelryTheft
வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 78). விவசாயி. இவரது மனைவி அனுசுயா (57). இவர்களுக்கு சரவணன், கோபால் ஆகிய 2 மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சரவணன் சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். கோபாலும், பிரியாவும் தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியாவை பார்ப்பதற்காக பக்தவச்சலமும், அவரது மனைவி அனுசுயாவும் வீட்டை பூட்டி விட்டு கடந்த 7-ந்தேதி சென்னைக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பக்தவச்சலம் வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சென்னையில் உள்ள பக்தவச்சலத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பக்தவச்சலம், கோபால் ஆகிய 2 பேரும் கவரப்பாளையத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த மர பீரோவின் கதவு உடைக்கப்பட்ட நிலையில், துணிகள் சிதறிக் கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவின் உள்ளே பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பக்தவச்சலம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டிலிருந்து சிறிது தூரம் போய் நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
கவரப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளில் இதுபோன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடப்பது வாடிக்கையாகி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மர பீரோவின் பக்கத்தில் இருந்த இரும்பு பீரோவை மர்ம நபர்கள் உடைக்காததால் அதில் இருந்த தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் தப்பியது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. சூறாவளி காற்றால் ஜமீன்குளத்தூர் திரவுபதி அம்மன் கோவில் அருகே இருந்த 120 வருட பழமையான மரம் முறிந்து விழுந்தது.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெயில் அடித்த போதிலும் ஜெயங்கொண்டம் பகுதியில் மட்டும் நேற்று பலத்த மழை பெய்தது. குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

உடையார்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்ற மூதாட்டி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தத்தனூர் பொட்டகொல்லை கிராமத்தை சேர்ந்த அன்புமணி (வயது 48) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அன்புமணியை கைது செய்து, அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு பெண் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுபாட்டில்களை விற்றது ஸ்ரீபுரந்தான் தெற்கடி தெருவை சேர்ந்த பார்வதி (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பார்வதியை கைது செய்து, அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தா.பழூரில் மது விற்ற இடையாறு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் (43) என்பவரை தா.பழூர் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கருணாநிதி மறைவுக்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க. கிளை செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமையில், பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் கருணாநிதி உருவப்படத்தை கையில் ஏந்தி அமைதி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் செங்குந்தபுரத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வி.கைகாட்டியிலும் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சிறுகுடல் கிராமத்தில் தி.மு.க. சார்பில் 18 பேர் மொட்டையடித்து, அப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் சென்றனர்.
வேப்பூர் கிராமத்தில் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குன்னம் ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமையில், கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சமுத்து தலைமையில், தி.மு.க. கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். குன்னம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சியிலும் தி.மு.க. கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk