search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silent Procession"

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.
    • ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.

    குமாரபாளையம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்டம் குமார பாளை யத்தில் சங்கரய்யா விற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உருவப்ப டத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தியவாறும், மாணவ, மாணவிகள், பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இதன் ஒரு பகுதியாக அனைத்து கட்சியினர் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பின்னர் நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட சங்கரய்யாவின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

    இதில் காங்கிரஸ் ஜானகிராமன், தி.மு.க. செல்வராஜ், ஜெயபிரகாஷ், தே.மு.தி.க. நாராயணசாமி, மகாலிங்கம், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, தி.க. சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கணேஷ்குமார், வக்கீல் கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    மதுரை

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (5-ந்தேதி) காலை 9 மணி அளவில் மதுரை கே.கே. நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வதோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.

    மாலை 4 மணியளவில் மதுரை பெரியார் பஸ் நிலை யத்தில் இருந்து நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக மவுன ஊர்வலமாக சென்று மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்படுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் அம்மா பேரவை சார்பிலும் டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பொது மக்களுக்கு அன்ன தானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கும்படி வேண்டு கிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை மாநகர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளரான கோபாலகிருஷ்ணன் கூறி யிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 9 மணி அளவில் மதுரை சட்டக்கல்லூரி முன்பிருந்து மவுன ஊர்வலமாக சென்று கே.கே.நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் அனைத்து பகுதிகளிலும் அ.தி.ம.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் எனது தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
    • சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     கூட்டத்தில் வருகிற 5 -ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்திலிருந்து மௌன ஊர்வலம் புறப்பட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்வது,அதேபோல் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளபடி வருகிற 9, 13, 14, தேதிகளில் தி.மு.க. அரசை கண்டித்தும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதைப்போல் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, குமார், கே.பி‌.ஜி மகேஷ்ராம், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, கே.பி. முத்து, மற்றும் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் ,அணி செயலாளர்கள் சதீஷ் ,கலைமகள் கோபால்சாமி, அட்லஸ் லோகநாதன், கே.பி.என். பழனிச்சாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

    • கருணாநிதி நினைவு நாள் மவுன ஊர்வலம் நடந்தது.
    • மவுன ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருமங்கலம் நகராட்சி முன்பு மதுரை சாலையில் தெற்கு மாவட்ட செய லாளர் மணிமாறன் தலைமையில் மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் திமுக அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லதா அதியமான், முத்துராமலிங்கம், சாமி நாதன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பாச பிரபு மதன்குமார், விமல், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்க பாண்டியன், உசிலம்பட்டி நகர செயலாளர் தங்க பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், கப்பலூர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில், கலைஞரின் நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், இளைஞரணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்துவது குறித்தும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், கலைஞரின் நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், இளைஞரணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்துவது குறித்தும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடி வடக்குமாவட்ட தி.மு.க. சார்பில் வரும் 7-ந்தேதி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவுநாளை வடக்கு மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் தவறாமல் கடை–பிடித்திட–வேண்டும். அன்று காலை 8மணிக்கு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கலைஞர் அரங்கம் வரை மவுன ஊர்வலம் நடக்கிறது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.

    எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுத்திடவும், தி.மு.க. அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் எடுத்து சொல்லிடவும் வடக்கு மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்களை நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் தெருமுனை கூட்டங்களை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எதிர்கட்சியினர் சொல்லும் உண்மைக்கு புறம்பான செயல்களுக்கு எல்லாம் கழக தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர்கள் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். இருந்தாலும் இந்த வேகத்தை அதிகப்படுத்திடவேண்டும். தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் கழகத்திற்காக உழைத்திட–வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், அகில உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழகத்தில் நடத்திட சிறப்பாக ஏற்பாடு செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க.வின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அமைதி பேரணி முடிந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAlagiri
    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க. அழகிரி இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆவின் பால் பண்ணை சாலை சந்திப்பில் அவரது சிலை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளோம். சிலை விவரம் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.


    அமைதி பேரணி தற்போது தான் நடந்து முடிந்துள்ளது. எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKAlagiri #KarunanidhiStatue
    மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    வேலூர்:

    முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று அவரது சொந்த ஊரான காட்பாடிக்கு வந்தார்.

    அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்த பொதுக்குழு, செயற்குழு, தி.மு.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். இதை போல மற்ற மாவட்டங்களிலும் நிதி வழங்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் குட்கா சம்பந்தமாக சோதனை நடத்த வேண்டும். இது தாமதமானது தான் என்றாலும் வரவேற்கதக்கது.


    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் எப்படியாவது அணை கட்ட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒற்றைகாலில் நிற்கிறார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் அதனை தடுத்து நிறுத்தினோம். மேகதாதுவில் அணைகட்டினால் காவிரியில் வரும் கொஞ்ச தண்ணீரும் நின்று விடும். இது மிகப்பெரிய ஆபத்து. தமிழக அரசு இதனை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும்.

    பாலாற்றில் தந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. தற்போது ஆற்றுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்களிலும் அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தோடு தான் இது நடக்கிறதா. பொதுப் பணித்துறை அமைச்சர் விஜயவாடாவுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அணைகட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    கருணாநிதி மறைவையொட்டி ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் தி.மு.க.வினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    கருணாநிதி மறைவையொட்டி ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் தி.மு.க.வினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. வாரியங்காவல் பஸ் நிறுத்தத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக இலையூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர் தர்மதுரை தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெங்கமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர்தொண்டரணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன் வரவேற்றார். இதில் செல்ல மணிமாறன், இளவரசன், புலவர் பரமசிவம், கிரேஸ் சுப்பிரமணியன், சிவமுத்து மயில்வாகணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குளச்சல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    குளச்சல்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலங்கள், பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று காலை ராஜாக்கமங்கலம் துறை பொதுமக்கள் அங்குள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திரண்டு சிறப்பு திருப்பலி நடத்தினர். பின்னர் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

    இதேபோல மாலையில் குளச்சல் பகுதி பொதுமக்கள் சார்பில் அங்கு மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டனர். அவர்கள் கைகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். 

    ஆலயம் முன்பு தொடங்கிய ஊர்வலம் பீச் சந்திப்பு, காந்தி சிலை சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு வழியாக மரமடி சந்திப்பில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது சாரல் மழை பெய்தது. பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் குளச்சல் பங்குத்தந்தை எட்வின், பங்கு நிர்வாக செயலாளர் வால்டர், துணை செயலாளர் விஜயன், பொருளாளர் மரிய ரூபன், களிமார் புனித சூசையப்பர் ஆலய துணைத் தலைவர் ஜான் கிறிஸ்டோபர், அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள், விசைப்படகு சங்கம், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள், பொது நல அமைப்பு, நகர வியாபாரிகள் சங்கத்தினர், வேன், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், குளச்சல் முஸ்லீம் முகல்ல செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் அமீர் அலி, செயற்குழு உறுப்பினர் சாதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் நசீம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×