search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin incident"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குளச்சல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    குளச்சல்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலங்கள், பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று காலை ராஜாக்கமங்கலம் துறை பொதுமக்கள் அங்குள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திரண்டு சிறப்பு திருப்பலி நடத்தினர். பின்னர் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

    இதேபோல மாலையில் குளச்சல் பகுதி பொதுமக்கள் சார்பில் அங்கு மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டனர். அவர்கள் கைகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். 

    ஆலயம் முன்பு தொடங்கிய ஊர்வலம் பீச் சந்திப்பு, காந்தி சிலை சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு வழியாக மரமடி சந்திப்பில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது சாரல் மழை பெய்தது. பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் குளச்சல் பங்குத்தந்தை எட்வின், பங்கு நிர்வாக செயலாளர் வால்டர், துணை செயலாளர் விஜயன், பொருளாளர் மரிய ரூபன், களிமார் புனித சூசையப்பர் ஆலய துணைத் தலைவர் ஜான் கிறிஸ்டோபர், அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள், விசைப்படகு சங்கம், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள், பொது நல அமைப்பு, நகர வியாபாரிகள் சங்கத்தினர், வேன், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், குளச்சல் முஸ்லீம் முகல்ல செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் அமீர் அலி, செயற்குழு உறுப்பினர் சாதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் நசீம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. #ThoothukudiShooting #Modi #AbhishekManuSinghvi
    புதுடெல்லி :

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக டெல்லியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளார் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-



    எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக ட்விட்டரில் கருத்து பதிவிடும் மோடி, தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியான விவகாரத்தில் மவுனம் சாதித்து வருவதற்கான காரணத்தை மக்களிடம் விளக்கி கூற வேண்டும். 13 பேர் பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய உயரதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படாமல், அவர்கள் பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.

    இது குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் அதன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய எந்த கால வரையறையும் அரசு நிர்ணயம் செய்யவில்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மிருகத்தனமான செயல். விசாரணையானது சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. இதன் பின்னணியில் உள்ள அனைவரையும் தண்டிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் துப்பாக்கி சூடு விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting  #Modi  #AbhishekManuSinghvi
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்ததும் ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    குடியாத்தம்:

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். மாநில இணை செயலாளர் ஏ.இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இர்ஷாத்அலி, மாவட்ட அமைப்பாளர் நியாஸ் அகமது, நகர தலைவர் மைனுதீன், வர்த்தக அணி வாலிபாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், அப்பாவி பொதுமக்கள் 12 பேர் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையாக நடடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக கூறி போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும் உள்ளதை கண்டுக்காத மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் இன்று காலை பெல் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், சிவக்குமார், கணேஷ், ஸ்டாலின், சங்கர நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×