என் மலர்tooltip icon

    அரியலூர்

    • 330 மனுக்கள் பெறப்பட்டன
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் உடனடி நடவடிக்கையாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.9,050 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.6,100 வீதம் ரூ.48,800 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள் என மொத்தம் 9 நபர்களுக்கு ரூ.57,850 மதிப்பில் நலத்திட்ட உதவிகைளகலெக்டர் வழங்கினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
    • முன்னாள் முப்படை வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


    அரியலூர்,

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே முன்னாள முப்படை வீரர்கள் நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய ராணுவத்தை அவதூறாக பேசிய சாட்டை சரவணனை தேச விரோத சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி ராணுவீரர் பிரபுவை கொலைச் செய்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்கயத்தாரில் முன்னாள் ராணுவீரர் சுப்புராஜை தாக்கியவர்க ள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்திலுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.அரியலூரில் ராணுவ கேண்டின் மற்றும் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதுஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் பாண்டியன், நிர்வாகி சூசைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியம்
    • 12வயது சிறுமி பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்


    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சுவாமிமலை முருகன் கோயிலில் சிவராத்திரி அன்று நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பரதநாட்டியம் சிறப்பாக ஆடி அசத்திய 7 ஆம் வகுப்பு மாணவியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது முதலே பரதநாட்டியத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால் அவரது பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் குரு சக்தி செல்லதுரை வி.பி.எஸ் கலைக்கூடம் மூலம் பயிற்சி கொடுத்தனர்.சிறுமி ஓவியாவும் ஆர்வத்துடன் பரதநாட்டியத்தை கற்றுக் கொண்டார். மேலும் பள்ளிகளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடி தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் சிவராத்திரி அன்று மாலை நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இவரது நடனத்தில் அனைத்து பாவனைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி நடனமாடினார். இதனை மெய்மறந்து பார்த்த சக நடன கலைஞர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவி ஓவியாவின் பரதநாட்டியத்தை பார்த்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்,




    அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் நகரை சேர்ந்தவர் சங்கர். ஹோமியோபதி மருத்துவர். விளாங்காரத் தெருவில் மருத்துவமனை வைத்துள்ளார். இவர் மருத்துவமனையை திறப்பதற்காக இன்று வந்த போது, மருத்துவமனையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது மேஜை உள்ளே வைத்திருந்த ரூ.3.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதே போல் அதே வணிக வளாகத்தில் உள்ள இரண்டு கடைகளிலும் திருட்டு முயற்சியும் நடத்துள்ளது. இச்சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி கிராமம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42). கூலி தொழிலாளியான இவர் தனது பைக்கை ஜெயங்கொண்டம் வாரச்சந்தை முன்பு நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறி வாங்கி வந்து மீண்டும் பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் காணாமல் போன வாகனத்தையும், திருடிச் சென்ற மர்ம நபர்களையும் தேடி விசாரித்து வருகின்றனர்.இதேபோல் செங்குந்தபுரம் ஏழாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவர் தனது மோட்டார் சைக்கிளை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு கேட்டின் வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிகிச்சை பெற்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்காதால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளையும், திருடிச் சென்ற மர்ம நபரையும் தேடி விசாரித்து வருகின்றனர்.

    கழுமலை நாதர் திருக்கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: அரியலூரில் சோழர் பாசன திட்டத்தை நடைமுறை படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை மேற்கொண்டார். இத்திட்டத்திற்கான அரசின் முதல் கட்ட பணிகள் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்நிலையில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மார்ச் மாதத்தில் 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் அரியலூர் ஜெயங்கொண்டத்தில் துவக்கி வைக்க உள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுற்று சூழல்துறைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அரியலூரில் 7சிமெண்ட் ஆலைகள் உள்ளது. சிமெண்ட் ஆலைகள் மூலம் வசூல் செய்யப்படும் கனிம நிதிகள் மாவட்டத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பு நீர் ஆதார மேம்பாடு மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் முறையாக பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தநிதி மற்ற மாவட்டங்களில் அரசின் திட்டங்களுக்காக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள கழுமலை நாதர் திருக்கோவில் குளம் சீரமைத்து சிவ பக்தர்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி, மாநில வன்னியர் சங்க செயலாளர் திருமாவளவன், மாவட்ட தலைவர், ஒன்றிய செயலாளர் மற்றும் நகர செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    லயன்ஸ் சங்கம், சின்மயா கலைக்கூடம் ஸ்ரீநித்திய சுந்தரநாட்டியாலயா சார்பில் விழா நடைபெற்றது.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுரை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் லயன்ஸ் சங்கம், சின்மயா கலைக்கூடம் ஸ்ரீநித்திய சுந்தரநாட்டியாலயா சார்பில் 2ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க செயளர் புண்ணியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை பாஸ்கர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கருணாநிதி, மகேஸ்வரி நாதசுரம் இசைக்கப்பட்டது. திருமானூர் பரதநாட்டியம் கிருபாதேவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேலும் நிகழ்ச்சியில் புண்ணியமூர்த்தி, வடிவேல் முருகன், ஜெயபாலன், சத்தியசீலன் மற்றும் கிராம நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, கைலாகம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் லயன் சங்கம் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

    13 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கருப்புசாமி கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் போலீசார் 6 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவிந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 41), பாலமுருகன் (27), சந்திரசேகர் (32), நாவலர் (60), வீரமணி (50), செல்வராஜ் (42) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.13 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விபரீத முடிவு

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மாத் தாயி தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 47). இவ–ருக்கும் இவரது மனைவி அன்னக்கிளி என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அன்னக்கிளி அவரது தாய் வீடான கழுமங்கலத்தில் வசித்து வருகிறார்.இந்தநிலையில் குருநாதன் கழுமங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவி அன்னகிளியை பல முறை குடும்பம் நடத்த வீட்டிற்கு அழைத்தும் வரவில்லை. இதனால் மனமுடைந்த குருநாதன் அப்பாதுரை என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ராஜா உடையார்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பின் னர் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், குருநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங் கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந் தவர் கொளஞ்சி. இவருக்கும் இவரது மனைவி ராணி. இவர்களுக்கு திருமணமாகி சுமார் 28 ஆண்டுகள் ஆகி–றது. இந்த தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இரண்டு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது.இந்த நிலையில் கொளஞ்சி குவைத் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற் பட்டது. இதையடுத்து மேற் கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இரு–தயத்தில் ரத்த அடைப்பு இருந்தது கண்டு–பிடிக்கப் பட்டது. இதற்காக அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண் டார். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து, பூரண குணமடைந்தால் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலுக்கு வரு–வதாக கொளஞ்சி வேண்டி–யிருந்தார். இதையடுத்து அவர் ரூ.40 ஆயிரம் செலவு செய்து சுற்றுலா விசாவில் மலேசியா முருகனை வழிப–டுவதற்காக கடந்த 8 -ந்தேதி புறப்பட்டு சென்றார். இதற்கிடையே மலேசியா–வில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங் குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனும–திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த கொளஞ்சி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து முறைப்படி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி ராணி மற்றும் மகன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

    அரியலூர்,

    அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு ஊரு விளைவிக்கும் அவமதிக்கும் விதமாக செயல்படும் சில நபர்களின் சமூக விரோத செயல்களை கண்டிக்கிறோம்.சமீப காலமாக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பல்வேறு வழக்குகளை சிறப்பாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி வருகிறது.நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும், சாமானிய நுகர்வோர்களும், நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலமாக பாதிப்புகளை ஏற்படுத்தும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் மீது வழக்கு தொடுத்து வருகிறார்கள். சில இழப்பீடுகளையும் பாதிக்கப்படும் நபர்கள் பெற்று வருகிறார்கள்.நுகர்வோர் நீதிமன்ற ங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.இந்நிலையில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எடுக்கும் முயற்சிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் போலி புகார்களை கொடுப்பதும், தாங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வலியுறுத்துவதும் அல்லது மிரட்டுவதும் நடந்துள்ளது.இது குறித்து அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கத்தினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் கொடுத்துள்ளதாக அறிகிறோம்.அரியலூர் மாவட்ட காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிந்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சட்டவிரோத சமூக விரோத செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நபர்கள் சமூகத்தில் உலவினால் சட்டம் ஒழுங்கு பாதிப்பது மட்டுமல்ல முறையாக நேர்மையாக நீதித்துறையில் உள்ளவர்கள் செயல்படுவதற்கும் இடையூறுகள் ஏற்படும்.எனவே, உடனடியாக நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிக்கையில் கூறியுள்ளார்.

    கடைகளை காலி செய்ய நகராட்சி நோட்டீஸ்

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியாக கடந்த 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியானது 7.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த நகராட்சியில், 1975ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. சுமார் 25 பேருந்துகள் நிறுத்தும் வசதி கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. சுமார் 30 கி.மீ சுற்றளவு பகுதிகளில் இருந்து அன்றாட 10 ஆயிரம் மேற்பட்ட பயணிகள் இந்த பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். 48 ஆண்டுகால பழைய கட்டிடத்தில் 60 கடைகள் ஏலம் விட்டப்பட்டிருந்தாலும், சுமார் 100 கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது,இதனால் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பது அரியலுார் மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை ஏற்று தமிழக அரசும், அரியலூரில் மத்திய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என அறிவித்து, இதற்கென 7.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் உரிமை யாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணி முடியும் வரையில், தற்காலிகபேருந்து நிலையம் அரியலூர் -திருச்சி புறவழிச்சாலையில் உள்ள தனியார் இடத்தில் செயல்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடி ந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    ×