என் மலர்
அரியலூர்
- குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நெல்லித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மதுபான கடைக்கு செல்லும் மதுபிரியர்கள் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்ல முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். உயிர் பலி ஏற்படும் முன் உடனடியாக அரசு மதுபான கடைக்கு செல்லும் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூரில் நாளை நடக்கிறது.
- விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது
- மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை வட்டங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற 28ந் தேதி காலை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மேற்கண்ட வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது
- திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசினார்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருகாவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தை அதிபர் தங்கசாமி இந்த சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் அவர் பிரசங்கம் செய்த போது, இந்த தவக்காலம் என்பது மன மாற்றத்திற்கான மனம் திருந்துவதற்கான காலமாகும். நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் திரும்பி வாழும் காலமாகும். மனிதன் கடவுளைத் தேடும் காலமாகும் என்று பேசினார். அதன் பின்னர் உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் உடன் இணைந்து திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரின் நெற்றியிலும் சாம்பல் பூசினார்.
- அரியலூர் அருகே போக்சோ வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது
- ரூ.1லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த மேலநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் மகன் விஜயகுமார்(வயது25). இவர், அதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்த 18 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதையடுத்து 2020ம் ஆண்டு சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பெண்ணை கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக விஜயகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து விஜயகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.
- மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்க பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவிய போட்டிகள்-அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்க–ளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வுவை ஏற்ப–டுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக்கலை) குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திடவும், இக்கலைப் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்க–ளுக்கான நடனங்கள் (கர் நாடக இசை பாடல்க–ளுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நட–னங்கள் மற்றும் குழு நட–னங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ள–லாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனும–திக்கப்படும். தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நட–னம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்க–ளுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்க–ளுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நட–னங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ள–லாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங் கள் நடனமாட அனுமதிக்கப்படும். குரலிசைப் போட்டியில் கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்பு–ணர்ச்சிப் பாடல்கள், நாட் டுப்புறப் பாடல்கள் ஆகிய–வற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடவேண்டும். பக்க வாத்தியக் கருவி–களை, பாடுபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள–லாம். மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள், குழப்பாடல்கள் அனுமதியில்லை. அதிகபட்சம் 5 நிமிடங்கள் பாடலாம். ஓலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது. ஓவியப் போட்டிக்கு 40x30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த–வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமை–யலாம். ஓவியத்தாள் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவை–யானவற்றைப் போட்டியா–ளர்களே கொண்டு– வருதல் வேண்டும். குழு–வாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்கின்றவர்கள் அரிய–லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் உள்ள–வர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்புச் சான்றி–தழ்களுடன், அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு 26.02.2023 (ஞாயிற் றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு வருகை தர–வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கந்துவட்டி கொடுமையால் வீடியோ பதிவிட்டு அரியலூர் சிமெண்ட் ஆலை ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் ெரயில் நிலையம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ெரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ெரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், இறந்து கிடந்தவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நரசிம்மலூ(வயது 45) என்பதும், இவர், அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது கைப்பேசியை ஆய்வு செய்ததில், பணம் வட்டிக்கு வாங்கியதில், கந்து வட்டி போட்டு அதிகப்படியான பணத்தை இருவர் தம்மிடம் பெற்று விட்டனர். மேலும், பணம் கேட்டு தொல்லைக் கொடுப்பதால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். அவர்கள் பல்வேறு குடும்பங்களையும் ஒழித்துவிடுவர் என கூறி விடியோ ஒன்றை பதிவிட்டு, அதனை கட்ச் செவி மூலம் தனது நண்பர்களுக்கும் அனுப்பியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் உடலை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் செல்வநம்பி தலைமை வகித்தார்.
அரியலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய தடா பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூரில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாசிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் செல்வநம்பி தலைமை வகித்தார். மாநில முதன்மை செயலர் உஞ்சை அரசன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாநிலப் பொறுப்பாளர் அன்பானந்தம், விவசாய அணி மாநில துணை செயலர் கருப்புசாமி, தொகுதி செயலாளர்கள் மருதவாணன், இலக்கியதாசன், செய்தித் தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
- கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது
அரியலூர்:
வழிப்பாட்டு தலங்கள், அறக்கட்டளைகள், மடங்கள் மற்றும் சத்திரங்களுக்கு சொந்தமான நிலங்களின் குத்தகைக்கு சாகுபடியாளர்களுக்கு நில உரிமைக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகியும், ஸ்ரீபுரந்தான் ஊராட்சித் தலைவருமான உலகநாதன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாவட்ட செயலர் ராமநாதன், துணை செயலர் கலியபெருமாள் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில், வழிப்பாட்டு தலங்கள், அறக்கட்டளைகள், மடங்கள் மற்றும் சத்திரங்களுக்கு சொந்தமான நிலங்ககளில் குத்தகைக்கு சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளின் பாரம்பரிய சாகுபடி நிலங்களை பறிக்கக் கூடாது. சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு நிலத்திற்கான உரிமை பட்டாவை வழங்க வேண்டும்.அதேபோல் கோவில் நிலங்களில் குடியிருப்பாளர்களுக்கு தடையின்றி உரிய சான்றிதழ் வழங்க வேண்டும். இயற்கை பேரிடர் பாதிப்பு ஆண்டுகளுக்கான குத்தகை நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும். கோயில் நிலங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் குடியிருப்பாளர்களை அவர்களின் வீட்டு மனையிலிருந்து வெளியேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
- அரியலூர் மாவட்டத்தில் கலை விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன
- கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலை மன்றம் வாயிலாக 2021-22ஆம் ஆண்டில் கலை விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் விருதிற்கான பொற்கிழிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வுவை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திட உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து,கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர்களுக்கு விருது மற்றும் விருதிற்கான பொற்கிழிகளை கலெக்டர் வழங்கி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 44 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் ரூ.4,000 வீதம் ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரை 9 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்ட காலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.14.76 இலட்சம் வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் நீலகண்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- அரியலூர் நகர்மன்ற கூட்டம்
- நகராட்சி கடை வாடகை பாக்கி ரூ.8.50 லட்சத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது
அரியலூர்:
அரியலூர் நகர்மன்ற அலுவலக கூட்டமன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது, நகராட்சி துணைதலைவர் கலியமூர்த்தி முன்னிலையில்நகராட்சி ஆனையர் (பொ) தமயந்தி வரவேற்று பேசினார், நகராட்சி சேர்மன் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் தீர்மானங்கள் வாசித்தார். ரூபவ் நகர்மன்ற உறுப்பினர்கள், ஜேசுமேரி, செல்வராணி, சத்ய ன்ரூபவ்கண்ணன், ரேவதி, மகாலெட்சுமி, இன்பவள்ளி, முகமதுஇஸ்மாயில், மலர்கொடி, வெங்கடாஜலபதி ரூபவ் ஜெயந்தி, ராணி, ராஜேஸ், ஜீவா, புகழேந்தி, நகரமைப்பு ஆய்வாளர் செந்தில் நகராட்சி வருவாய் ஆய்வாளார் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் 19 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் கள் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்து ஏலம் எடுத்தவர்கள் கடையை நடத்தாமல் வேறு நபர்களுக்கு உள்வாடகைக்குவிட்டுள்ளனர்அதன்படி 24 நபர்கள் 8.50 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனர், எந்த காரணம் முன்னிட்டு வாடகை பாக்கியை தள்ளுபடி செய்ய கூடாது நகராட்சி சார்பில் வாடகை பாக்கி கட்டக்கோரி நோட்டீஸ் கொடுக்க வேண்டும். தவறினால் மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று கடையை பூட்டி சீல் வைக்கவேண்டும். சொத்துக்களை ஜப்தி செய்ய கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- கட்டடங்களை இடிப்பதற்கான ஆணையை ரத்து செய்யக் கோரி
- கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்
அரியலூர் அடுத்த கோக்குடி கிராம மக்கள் சார்பாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோக்குடி கிராம வளர்ச்சிக்கு, அப்பகுதி மக்கள் பொது இடங்களில் நான்கு கட்டடங்களை கட்டி, அதனை வாடகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல் பள்ளி, கல்லறை தோட்டம், குடிநீர் விநியோகம், கிணறு வெட்டுதல், சாலை அமைப்பது, பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கின்றனர்.இந்நிலையில், பொது இடத்தில் இருக்கும் அந்த கட்டடத்தை இடிப்பற்கு மாவட்ட நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோக்குடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.






