என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்துவட்டி கொடுமையால் வீடியோ பதிவிட்டு அரியலூர் சிமெண்ட் ஆலை ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
- கந்துவட்டி கொடுமையால் வீடியோ பதிவிட்டு அரியலூர் சிமெண்ட் ஆலை ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் ெரயில் நிலையம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ெரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ெரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், இறந்து கிடந்தவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நரசிம்மலூ(வயது 45) என்பதும், இவர், அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது கைப்பேசியை ஆய்வு செய்ததில், பணம் வட்டிக்கு வாங்கியதில், கந்து வட்டி போட்டு அதிகப்படியான பணத்தை இருவர் தம்மிடம் பெற்று விட்டனர். மேலும், பணம் கேட்டு தொல்லைக் கொடுப்பதால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். அவர்கள் பல்வேறு குடும்பங்களையும் ஒழித்துவிடுவர் என கூறி விடியோ ஒன்றை பதிவிட்டு, அதனை கட்ச் செவி மூலம் தனது நண்பர்களுக்கும் அனுப்பியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் உடலை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.