என் மலர்
உள்ளூர் செய்திகள்

துப்பாக்கி ஏந்திய காவலர்கள்பாதுகாப்பு வேண்டும்
அரியலூர்,
அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு ஊரு விளைவிக்கும் அவமதிக்கும் விதமாக செயல்படும் சில நபர்களின் சமூக விரோத செயல்களை கண்டிக்கிறோம்.சமீப காலமாக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பல்வேறு வழக்குகளை சிறப்பாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி வருகிறது.நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும், சாமானிய நுகர்வோர்களும், நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலமாக பாதிப்புகளை ஏற்படுத்தும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் மீது வழக்கு தொடுத்து வருகிறார்கள். சில இழப்பீடுகளையும் பாதிக்கப்படும் நபர்கள் பெற்று வருகிறார்கள்.நுகர்வோர் நீதிமன்ற ங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.இந்நிலையில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எடுக்கும் முயற்சிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் போலி புகார்களை கொடுப்பதும், தாங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வலியுறுத்துவதும் அல்லது மிரட்டுவதும் நடந்துள்ளது.இது குறித்து அரியலூர் வழக்குரைஞர்கள் சங்கத்தினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் கொடுத்துள்ளதாக அறிகிறோம்.அரியலூர் மாவட்ட காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிந்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சட்டவிரோத சமூக விரோத செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நபர்கள் சமூகத்தில் உலவினால் சட்டம் ஒழுங்கு பாதிப்பது மட்டுமல்ல முறையாக நேர்மையாக நீதித்துறையில் உள்ளவர்கள் செயல்படுவதற்கும் இடையூறுகள் ஏற்படும்.எனவே, உடனடியாக நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிக்கையில் கூறியுள்ளார்.






