என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தையற்கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோரிக்கை
    • ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

    அரியலூர்,

    தையற் கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தையற் கலை தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தையற் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அச்சங்கம் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் தையற் கலை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயர்த்தி தர வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பாரா பட்சம் இல்லாமல் சமமான உதவித் தொகை வழங்க வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மீன்சுருட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் கிளைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.செயலர் ராஜசேகரன், நிர்வாகி அருள் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொறுப்பு தலைவர் பாண்டியன் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மாவடட தலைவர் விசன்ரவி, செயலர் தேவேந்திரன், பொருளாளர் கண்ணன், துணைச் செலர் ராஜாபெரியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளை பொருளாளர் சாந்தி நன்றி தெரிவித்தார். முன்னதாக பேரணி நடைபெற்றது.இதே போல் எரவாங்குடி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வாரியங்காவல் உள்ளிட்ட இடங்களில் சங்க கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபம்
    • வனத்துறையினர் விசாரணை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் கிராமம் விளாங்குடி-தா.பழூர் சாலையில், உடல் நசுங்கிய நிலையில் மான் ஒன்று செத்து கிடப்பதாக, அவ்வழியாக கடந்து சென்ற பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் செத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வனத்துறை காப்பாளர் முத்துராஜ் மானின் உடலை கைப்பற்றி, உடல் பரிசோதனைக்காக எடுத்து சென்றார். விளாங்குடி கால்நடை மருத்துவர் மகாலட்சுமி மானின் உடலை மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் வனப்பகுதியில் செத்த மான் புதைக்கப்பட்டது.

    • 1.46 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட திட்டம்
    • கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாய மக்களே நீங்கள் கால்நடைகளை நல்லமுறையில் வளர்த்து வருகின்றீர்கள். கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், கால் குளம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும்.மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில், நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், அடர்த்தியான ரோமமும் காணப்படும். பால் கறவை முற்றிலும் குறைந்துவிடும். கறவைப்பசுக்களில் பால் குடித்துவரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத்தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போர்க்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் தாக்கா வண்ணம் இருப்பதற்கு, மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப் பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம்.இம்மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசித் திட்டம் 3-ஆவது சுற்றின் கீழ் நாளை (1ந் தேதி) முதல் தொடங்கி 21 நாட்களுக்கு, மாவட்டத்தில் உள்ள 1லட்சத்து 46 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால் கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தங்கள் கால்நடை செல்வங்களை இக்கொடிய நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாய நிலம் சுற்றி உள்ள கம்பி வேலி சேதம்
    • 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பொட்டக்கொல்லை மேல தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் கலைமணி (வயது62). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணையன், நீலமேகம், பொன்னுசாமி ஆகியோர் கலைமணியை தகாத வார்த்தையால் திட்டி அவரது நிலத்தில் உள்ள கம்பி வேலியை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கலைமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொது சுகாதாரம் மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. இதில், கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரியா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் டாக்டர் வைஷ்ணவி ஆகியோர் போதை ஒழிப்பு தொடர்பாகவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினர். முன்னதாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் தொடங்கி முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் தனியார் மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது
    • மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியரிடம் மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    அரியலூர்,

    அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நாளை (28-ந் தேதி) பிற்பகல் 4 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் அரியலூர் கோட்டாட்சியர் அவர்களிடம் நேரடியாக மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


    • பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது செய்யபட்டனர்
    • பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி பாதிரியார் இல்லத்தை பங்கு உறுப்பினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தின் பங்கு பேரவைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி, பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதன் உறுப்பினர்கள் 10 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். பங்கு வரவு செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும். அதற்கு உடனடியாக பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி ஆலயத்தின் பாதிரியார் டோமினிக் சாவியோ இல்லத்தை பங்கு உறுப்பினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த கேமிராக்களை மறைத்து இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த அரியலூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட லீனஸ், வழக்குரைஞர் விஜி உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.


    • சம்பல் செயலியை பதிவிறக்கம் செய்ய ஓய்வூதியர்களுக்கு அறிவுறுத்தபட்டன
    • தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம் ஆகும். இந்த திட்டம் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது.

    'சம்பல்' செயலியானது, தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிமக்கள் ஓய்வூதியம் பெற பதிவு செய்திடவும், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் குறித்தும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல், நேரடிப் பயன் பரிமாற்றம் குறித்த விவரம் மற்றும் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்கள் குறித்த விவரங்களை அறிய உதவியாக உள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரில், சம்பல் செயலியினை ஓய்வூதியர்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.





    • உடையார்பாளையத்தில் பெரியநாயகியம்மன் திருவீதி உலா நடைபெற்றது
    • இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    ஜெயங்கொண்டம்,:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் தாண்டினேரி கரையில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்றது. நிறைவாக தீர்த்த வாரியும், மஞ்சள் விளையாட்டும் நடைபெற்றது. இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மகாலட்சுமி செய்திருந்தார்.


    • பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • வருகிற மார்ச் 5-ந் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வந்து, கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    இதையடுத்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, கொடி மரத்திற்கும், சாமி, அம்பாளுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மார்ச் 5-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. 6-ந் தேதி மாசி மகத்தையொட்டி மதியம் 12 மணியளவில் தீர்த்தவாரியும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.


    • மத்திய அரசு-கவர்னரை கண்டித்து அரியலூரில் சி.பி.எம். ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், உரம் மற்றும் உணவு மானியங்களை மத்திய அரசு நிறுத்தியது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்காததைக் கண்டித்தும், எல்.ஐ.சி, வங்கிகள் மற்றும் பொது த்துறை நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்த அதானியை கைது செய்து, சொத்துக்களை முடக்க வேண்டும்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை உடனடியாக தொடக்க வேண்டும் , அரியலூர் நகராட்சியுடன் அருகிலுள்ள கிராமங்களை இணைத்து எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காரல்மார்க்ஸ் சிந்தனை களை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார்.மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், து.அருணன், டி.அம்பிகா, கந்தசாமி, இர.மணிவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    • அரியலூரில் 2854 மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு எழுதினர்
    • 2,906 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 52 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    அரியலூர்:

    தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் என்எம்எம்எஸ் தேர்வு நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தில், வட்டார அளவில் 11 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 2,854 மாணவ, மாணவிகள் எழுதினர்.

    2,906 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 52 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டார். பள்ளி, கல்வி துணை ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×