என் மலர்
நீங்கள் தேடியது "திருவீதி உலா"
- உடையார்பாளையத்தில் பெரியநாயகியம்மன் திருவீதி உலா நடைபெற்றது
- இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
ஜெயங்கொண்டம்,:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் தாண்டினேரி கரையில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்றது. நிறைவாக தீர்த்த வாரியும், மஞ்சள் விளையாட்டும் நடைபெற்றது. இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மகாலட்சுமி செய்திருந்தார்.
- சாமி திருவீதி உலா நடந்தது
- பொதுமக்கள் ஏராளமனோர் தரிசனம் செய்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதனையொட்டி மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சாமி திருவீதி உலா நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் காட்டுக்காநல்லூர் ராமநாதீஸ்வரர் கோவிலில் பாலாய பூஜை நடைபெற்றது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விட்டோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா, ராஜ மன்னார்குடி மணவாள மாமுனிகள் பீடம் 4-வது பட்டம், செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இதனையொட்டி பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






