என் மலர்tooltip icon

    அரியலூர்

    • விவசாய நிலத்துக்கு அருகே குவாரிகளை நடத்த தடை விதிக்க வேண்டும்.
    • குவாரி நடத்த இந்த ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    அரியலூர் மாவட்டத்தில் கிராவல் மண் குவாரிகள் நடத்த கலெக்டர் வழங்கியுள்ள உரிமத்தை நிறுத்தி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில், அரியலூர் மாவட்டம், சூரக்குழி கிராமத்தை சேர்ந்த ஆர்.கணேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் தெற்கே கொள்ளிடமும், வடக்கே வெள்ளாறும், மத்தியில் மருதையாறும் ஓடினாலும், பல பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாரங்களில் கிராவல் மண் வளம் அதிகம் உள்ளன. இந்த வகை மண், சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த மண் இயற்கை வளம் குறித்து எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளலாம், கிராவல் மண் எடுக்க குவாரி உரிமம் விருப்பம்போல் வழங்கப்படுகிறது. என்னுடைய விவசாய நிலத்துக்கு அருகே, சிலர் கிராவல் குவாரிகளை நடத்துகின்றனர்.

    அரசியல் செல்வாக்கு உள்ள இவர்கள், சில நிலங்களை வாங்கியும், ஏழை விவசாயிகளின் நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் குவாரிகளை நடத்துகின்றனர்.

    இவர்கள் மண் எடுக்க தொடங்கி விட்டால், குவாரிக்கு அருகே உள்ள விவசாய நிலத்தை இவர்களிடம்தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இவர்களிடம் குவாரி நடத்த அரசு வழங்கியுள்ள உரிமம் குறித்து கேள்வி எழுப்பியதால், அடுத்த நாளே எங்களது விவசாய நிலத்தில் உள்ள முந்திரி மரங்களை அகற்றி, அத்துமீறி நிலத்துக்குள் நுழைந்து விட்டனர். இதுகுறித்து அரசுக்கு புகார் செய்துள்ளேன். இவர்கள் சுமார் 7 ஹெக்டேர் வரை குவாரி நடத்தி, சுமார் 20 முதல் 30 அடி ஆழத்துக்கு குழி தோண்டி உள்ளனர். இதனால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன.

    எனவே, விவசாய நிலத்துக்கு அருகே குவாரிகளை நடத்த தடை விதிக்க வேண்டும். குவாரி நடத்த இந்த ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த உரிமத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஒப்பந்ததாரர் கிராவல் மண் எடுக்க தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 'இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகளும், குவாரி உரிமம் எடுத்துள்ள விக்ரமாதித்தன், கவிதா, விஜயகாண்டீபன் ஆகியோரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் வழங்கிய குவாரி உரிமங்களை நிறுத்தி வைக்க வேண்டும். விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது
    • இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்க, மதுவை ஒழிக்க அரியலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் அருண்பாண்டியன் முன்னிலையில் ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டனர். கையெழுத்து இயக்கத்தை ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். பஸ் நிலையத்திற்கு வந்த ஏராளமான பொதுமக்கள், பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து மதுவை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து போட்டனர். இதில் போதை வஸ்துகளான மது, கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற கொடிய போதைக்கு சுமார் 10 கோடி பேர் அடிமையாக உள்ளனர். அவர்களை மீட்டெடுக்க வேண்டும், அனைவரும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியாகவும், விமானங்கள் வழியாகவும் சட்டவிரோதமாக கொண்டு வந்து குவிக்கப்படும் கொடிய போதை பொருட்களை தடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் கையில் கத்தியுடன் கைது செய்யப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் 18 வயது முதல் 30 வயது உடைய போதைக்கு அடிமையானவர்களே. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரவு, பகலும் பாதுகாப்பற்ற சூழல் மாறி வருகிறது. இரவு நேர தெருக்களில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை மீட்டெடுக்க வேண்டியது ஒன்றிய மாநில அரசுகளின் கடமையாகும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் வெங்கடாஜலம், கைத்தறி நெசவு தலைவர் துரைராஜ், பத்மாவதி, கோவிந்தராஜ், ரவி, முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • அரியலூரில 540 குழந்தைகள் பயனடைகின்றனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து அங்கு பயிலும் 76 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை பறிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக சின்னவளையம், ஜெயங்கொண்டம் வடக்கு மற்றும் தெற்கு ஆதிதிராவிட நல்ல பள்ளி, செங்குந்தபுரம் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 9 பள்ளிகளை சேர்ந்த 464 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 540 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் மூர்த்தி, கோட்டாட்சியர் பரிமளம், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், வட்டாட்சியர் துரை, நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார், வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி, கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்சி மொழி சட்ட வாரம் முன்னிட்டு நடைபெற்றது
    • அனைத்து துறை அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரின் உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் வருகிற 8 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இதன் முதற்கட்டமாக அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் அரசுப் பணியாளர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சிவசாமி கலந்து கொண்டு, சுற்றோட்ட குறிப்புகள், செயல் முறை ஆணைகள் தயாரித்தல், குறிப்பாணை, மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், கணினிப்பயிற்சி, ஆட்சிமொழி அரசாணைகளும் செயலாக்கமும், மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும் மற்றும் தமிழில் குறிப்புகள் வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் ஆகிய தலைப்புகளில் அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தார். முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்(பொ) சித்ரா வரவேற்றார். பயிற்சி வகுப்பில் அனைத்து துறை அரசு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.fil

    • அனுமதியின்றி கிராவல் எடுத்துச் சென்ற 3 லாரிகள் சிறைபிடிப்பு
    • 3 டிரைவர்கள் கைது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர் நடுத்தெருவில் அனுமதி இன்றி கிராவல் மண் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் 3 டிப்பர் லாரிகளை சிறை பிடித்துள்ளனர். இது குறித்து தாசில்தார் மற்றும் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து லாரி டிரைவர்களான ஆண்டிமடம் ஐயூர் வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது28), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி மோகூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (22), மேலணிக்குடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன் (33) ஆகியோரை ஆண்டிமடம் புவிவட்ட ஆய்வாளர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பா.ம.க.வினர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு
    • நடவடிக்கை இல்லையென்றால் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கூவாகம் செல்லும் சாலையில் உள்ள திடீர்குப்பம் கிராமத்தில் அரசு மதுபான கடை திறப்பதற்கு டாஸ்மார்க் ஊழியர்கள் இடம் தேர்வு செய்து கடை திறப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் துரை, ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட அரசு அதிகாரியிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் முன்னிலையில், ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் தலைமையில், சந்திரகாசன், வழக்கறிஞர் கதிரவன், ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் வாரியங்காவல், குவாகம், திடீர் குப்பம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மேலும் இப்பகுதியில் கடை திறந்தால் ஏராளமான விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தனியார் பள்ளிகள் உள்ளதாகவும், இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிககளுக்கு பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதை சுற்றிலும் முந்திரி கார்டு உள்ளதால் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த பகுதியில் கடை திறக்கக் கூடாது என தெரிவிக்கின்றனர். மேலும் கடை திறப்பது உறுதி செய்தால் முற்றுகைப் போராட்டம் சாலை மறியலிலும் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை தாங்கினார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் கடந்த 6 மாத காலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை அவதூறாக பேசுகிறார். அவர் காரல் மார்க்ஸ் பற்றி பேசியது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது என கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமநாதன், நகரச் செயலாளர் இறைக்கோ உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.


    • ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ரூ.29 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்துத்துக்கான கட்டுமானப் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியது: புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டிடம் 6 தளங்களைக் கொண்டதாகும். இதில் ஆண், பெண் தனித் தனி சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன், தலைமை மருத்துவ அலுவலர் உஷா, நகர் மன்றத் தலைவர் சுமதி சிவக்குமார், துணைத் தலைவர் கருணாநிதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    • சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடபட்டுள்ளது
    • புகார்தாரர் எழுதிக் கொடுத்துள்ள அடமான ஆவணத்தை 4 வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள தெற்கு ஆயுதக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் அருள்தாஸ்(வயது50). இவரது மனைவி ஜெயக்கொடி.கடந்த 2017 ஆண்டு அக்டோபர் மாதத்தில், வீடு கட்டுவதற்காக கும்பகோணத்திலுள்ள எக்வீடாஸ் சிறு நிதி வங்கியை அணுகி ரூ.7.50 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஜெயக்கொடி கடன் பெற்ற போது தனது கணவர் அருள்தாஸ்க்கு பாத்தியப்பட்ட சொத்தை பிணையமாக நிதி நிறுவனத்துக்கு அடமானம் எழுதி கொடுத்துள்ளார்.

    கடன் வழங்கிய அந்த வங்கி, இன்சூரன்ஸ் பிரீமியத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக் கடனுக்கான பாலிசியையும் வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயக்கொடி இறந்து விட்டார். இதையடுத்து அருள்தாஸ், தமது மனைவி இறந்துவிட்டதை தெரிவித்து இன்சூரன்ஸ் மூலம் கடனை முடித்துக்கொண்டு, தாம் எழுதிக் கொடுத்த அடமான ஆவணத்தை ரத்து செய்து, அதனை திரும்பத் தருமாறு வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

    அதற்கு நிர்வாகம்,  இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் வரை மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தினால் இன்சூரன்ஸ் பணம் வந்த பின்னர் ஜெயக்கொடி இறந்த பின்பு செலுத்தப்பட்ட தொகையை திரும்ப தருவதாகவும் அடமானத்தை ரத்து செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனை நம்பி அருள்தாஸ் ஜெயக்கொடி இறந்த பின்னரும் மாதாந்திர தவணை தொகை ரூ.57 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே மாதம், மொத்த கடனையும் திரும்ப செலுத்துமாறு இறந்தவர் பெயருக்கு வங்கி நிர்வாகம் அறிவிப்பு அனுப்பியதைக் கண்டு அதிரிச்சியடைந்த அருள்தாஸ், நிதி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்ததாக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான உறுப்பினர்கள் என். பாலு, வீ. லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் சேவை குறைபாட்டிற்காக மேற்கண்ட வங்கி இழப்பீடு தர வேண்டும். புகார்தாரரின் மனைவி இறந்த பின்பு வசூலிக்கப்பட்ட ரூ.57 ஆயிரத்தை புகார்தாரருக்கு திரும்ப வழங்க வேண்டும். மேலும் புகார்தாரர் எழுதிக் கொடுத்துள்ள அடமான ஆவணத்தை 4 வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது செய்யபட்டார்
    • 21 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனையின்படி ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு போன வழக்கில் குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தை தள்ளி சென்றுள்ள நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து தப்பி ஓடிவிட்டார். அவரை விரட்டி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் அவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது மகன் ராஜ்குமார் (வயது43) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியிலும் இருசக்கர வாகனத்தை திருடியது ெதரியவந்தது.

    இதையடுத்து அவரிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான பல்வேறு விதமான 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒரே நபர் 21 இரு சக்கர வாகனங்களை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாலியல் வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டது
    • மேலும் ரூ.1 லட்சத்து 10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் மகன் லட்சுமணன்(வயது22). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது.

    இதில் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் லட்சுமணன் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.


    • மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தார்
    • குருவாடி அரசு பள்ளியில் விழா

    அரியலூர், 

    அரியலூர் அடுத்த குருவாடி கிராமத்திலுள்ளள அரசு மேல்நிலை பள்ளியில், எண்ணங்களின் சங்கமம் ஸ்வீட் டிரஸ் பாய்ஸ் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இயக்கி வைத்தார். தொடர்ந்து அவர், பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, மாணவர்கள் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், இளவரசன், ஓய்வு பெற்ற நல்லாசிரியர் தியாகராஜன், ஊராட்சித் தலைவர் சுப்புலட்சுமி ரவி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் சாக்ரடீஸ், மனோகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×