search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
    X

    ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது
    • இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்க, மதுவை ஒழிக்க அரியலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் அருண்பாண்டியன் முன்னிலையில் ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டனர். கையெழுத்து இயக்கத்தை ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். பஸ் நிலையத்திற்கு வந்த ஏராளமான பொதுமக்கள், பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து மதுவை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து போட்டனர். இதில் போதை வஸ்துகளான மது, கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற கொடிய போதைக்கு சுமார் 10 கோடி பேர் அடிமையாக உள்ளனர். அவர்களை மீட்டெடுக்க வேண்டும், அனைவரும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியாகவும், விமானங்கள் வழியாகவும் சட்டவிரோதமாக கொண்டு வந்து குவிக்கப்படும் கொடிய போதை பொருட்களை தடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் கையில் கத்தியுடன் கைது செய்யப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் 18 வயது முதல் 30 வயது உடைய போதைக்கு அடிமையானவர்களே. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரவு, பகலும் பாதுகாப்பற்ற சூழல் மாறி வருகிறது. இரவு நேர தெருக்களில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை மீட்டெடுக்க வேண்டியது ஒன்றிய மாநில அரசுகளின் கடமையாகும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் வெங்கடாஜலம், கைத்தறி நெசவு தலைவர் துரைராஜ், பத்மாவதி, கோவிந்தராஜ், ரவி, முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×