என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தையற் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்
    X

    தையற் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்

    • தையற்கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோரிக்கை
    • ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

    அரியலூர்,

    தையற் கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தையற் கலை தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தையற் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அச்சங்கம் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் தையற் கலை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயர்த்தி தர வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பாரா பட்சம் இல்லாமல் சமமான உதவித் தொகை வழங்க வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மீன்சுருட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் கிளைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.செயலர் ராஜசேகரன், நிர்வாகி அருள் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொறுப்பு தலைவர் பாண்டியன் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மாவடட தலைவர் விசன்ரவி, செயலர் தேவேந்திரன், பொருளாளர் கண்ணன், துணைச் செலர் ராஜாபெரியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளை பொருளாளர் சாந்தி நன்றி தெரிவித்தார். முன்னதாக பேரணி நடைபெற்றது.இதே போல் எரவாங்குடி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வாரியங்காவல் உள்ளிட்ட இடங்களில் சங்க கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×