என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது
- பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது செய்யபட்டனர்
- பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி பாதிரியார் இல்லத்தை பங்கு உறுப்பினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
அரியலூர்:
அரியலூரில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தின் பங்கு பேரவைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி, பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதன் உறுப்பினர்கள் 10 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். பங்கு வரவு செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும். அதற்கு உடனடியாக பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி ஆலயத்தின் பாதிரியார் டோமினிக் சாவியோ இல்லத்தை பங்கு உறுப்பினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த கேமிராக்களை மறைத்து இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த அரியலூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட லீனஸ், வழக்குரைஞர் விஜி உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அழைத்து சென்றனர்.
Next Story






