என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது
- மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியரிடம் மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நாளை (28-ந் தேதி) பிற்பகல் 4 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் அரியலூர் கோட்டாட்சியர் அவர்களிடம் நேரடியாக மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Next Story