என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் 19 பேர் உயிரிழப்பு.
    • இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகாண்ட் மாநிலத்தில் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.

    உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதால் வெறியேற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.

    பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7ன் ஒரு பகுதி சாமோலி மாவட்டத்தில் உள்ள சின்கா அருகே சரிந்த மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே, அண்டை மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் சுமார் 15 கி.மீ சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் , சுற்றுலா பயணிகள் உள்பட 200 பேர் சிக்கினர். இந்த சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களில் சாமோலியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியோகி உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகாண்ட் மாநிலத்தில் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள முன்சியாரியில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
    • உயிரிழந்தவர்களுக்கு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் இருந்து பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஹோக்ரா அருகே உள்ள கோகிலா தேவி கோவிலுக்கு பக்தர்கள் குழுவினர் இன்று சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள முன்சியாரி பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சுமார் 600 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து அறிந்ததும், காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நேற்று இரவு அப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் சேறும் சகதியுமாக இருந்ததால், வாகனம் ஓட்டுவதற்கு ஏற்றதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • முறையாக ஆடை அணியாத ஆண், பெண் பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
    • சிலர் கோவிலின் புனிதம் குறித்த உணர்வின்றி ஆடை அணிந்து வருகிறார்கள்.

    ஹரித்துவார் :

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், டேராடூன் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஹரித்துவார் தக் ஷ் பிரஜாபதி மந்திர், ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ மந்திர், டேராடூன் தபகேஷ்வர் மகாதேவ மந்திர் ஆகிய கோவில்களை நிர்வகித்துவரும் மகாநிர்வானி பஞ்சாயத்தி அகாரா அமைப்பின் செயலாளர் மகந்த் ரவீந்திர பூரி கூறுகையில், முறையாக ஆடை அணியாத ஆண், பெண் பக்தர்கள் இந்தக் கோவில்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெண்கள் தங்கள் உடம்பை 80 சதவீதம் மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும். இந்த ஆடைக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார்.

    மேலும் அவர், சிலர் கோவிலின் புனிதம் குறித்த உணர்வின்றி ஆடை அணிந்து வருகிறார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதையடுத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விரைவில், நாடு முழுவதும் எங்கள் அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • புதன்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
    • டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ.1065

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டேராடூன்-டெல்லி இடையேயான தூரத்தை, 4 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த ரெயில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

    வார நாட்களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது. டேராடூனில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் டெல்லி ஆனந்த விகார் ரெயில் நிலையத்திற்கு 11.45 மணிக்கு வந்தடையும். இடையில் மீரட், முசாபர்நகர், சகாரன்பூர், ரூர்கி மற்றும் ஹரித்வார் போன்ற ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும்.

    மறுமார்க்கத்தில் ஆனந்த் விகார் ரெயில்வே நிலையத்தில் இருத்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு டேராடூனுக்கு இரவு 10.35 மணியளவில் வந்தடையும். இந்த ரெயிலில் மொத்தம் எட்டு பெட்டிகள் உள்ளன.

    டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ.1065 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்சிக்யூடிவ் சேர் கார் டிக்கெட் விலை ரூ.1890 ஆகும். 

    • சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் சிலர் ரிவர் ராப்டிங் செய்யும் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது.
    • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் சுற்றுலா பயணிகள் சிலர் கங்கை ஆற்றின் நடுவே ரிவர் ராப்டிங் சென்றுள்ளனர். ரிவர் ராப்டிங் என்பது நீர் நிலைகளில் மிதக்கும் பலூன் போன்ற படகுகளில் சென்று விளையாடும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி ஆகும்.

    இதில் ஆபத்து அதிகம் என்றாலும் சுற்றுலா பயணிகள் இந்த விளையாட்டை அதிகம் விரும்புவார்கள். சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் சிலர் ரிவர் ராப்டிங் செய்யும் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது. படகுகளில் அமர்ந்திருந்த 2 அணிகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் ராப்டிங் துடுப்பால் தாக்கி உள்ளனர்.

    அப்போது 3 பேர் படகில் இருந்து ஆற்றில் குதித்துள்ளனர். அவர்கள் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆற்றில் வைத்து சுற்றுலா பயணிகள் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், இது வெட்கக்கேடான சம்பவம், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய முறையில் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்‌ஷய திரிதியை அன்று தொடங்கியது.
    • சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோவிலில் இருந்து தொடங்கி உயரமான இடங்களில் அமைந்துள்ள மற்ற மூன்று கோவில்களுக்கு செல்வதுதான் சார் தாம் யாத்திரை.

    இந்த சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. அதன் பின்னர் நேற்றைய தேதி வரை சார் தாம் யாத்திரைக்கு யாத்ரீகர்களின் வருகையின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், " முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சார் தாம் யாத்திரையில் வரும் பக்தர்களின் சுமூகமான தரிசனத்திற்காக உத்தரகாண்ட் காவல்துறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நேற்று மே 18ம் தேதி வரை, சார் தாம் யாத்திரையில் சென்ற யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது " என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்ய மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

    • சுமார் 16 வினாடிகள் கொண்ட வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார்.
    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    குடிமகன்களின் சேட்டைகள் சில நேரம் சிரிப்பை வரவழைக்கும். சில சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்வது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.

    சுமார் 16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருக்கு அறிவுரை வழங்கி, இனி இது போல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.
    • பள்ளி நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் வந்த உத்தரவின் ஸ்கிரின்ஷாட்டை காட்டி பெற்றோர் புகார் செய்தனர்.

    டேராடூன்:

    பிரதமர் மோடியின் மனதின் குரல் (மன் கி பாத்) 100-வது நிகழ்ச்சி கடந்த 30-ந்தேதி நடந்தது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.

    அதே நேரம் இந்த நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அல்லது மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என டேராடூனின் ஜி.ஆர்.டி. நிரஞ்சன் பூர் அகடாமி உத்தரவிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் வந்த உத்தரவின் ஸ்கிரின்ஷாட்டை காட்டி பெற்றோர் புகார் செய்தனர்.

    இது தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் உரிமைக்கான தேசிய சங்கத்தில் தேசிய தலைவர் ஆரிப்கான் டேராடூன் முதன்மை கல்வி அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது.
    • கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவில் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை திறந்து இருக்கும். இன்று காலை 7.10 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்காக கடந்த சனிக்கிழமை பக்தர்கள் யாத்திரை தொடங்கியது. கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    • இந்த மானா கிராமம், பத்ரிநாத் அருகே உள்ளது.
    • உத்தரகாண்டில், இந்திய-சீன எல்லையில் மானா என்ற கிராமம் உள்ளது.

    டேராடூன் :

    வட மாநிலமான உத்தரகாண்டில், இந்திய-சீன எல்லையில் மானா என்ற கிராமம் உள்ளது.

    இந்த கிராமம்தான் நாட்டின் முதல் கிராமம் என காட்டும் பெயர்ப்பலகையை எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ.) வைத்துள்ளது.

    இது குறித்து உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "இப்போது மானா கடைசி கிராமமாக அறியப்படாது. இது நாட்டின் முதல் கிராமம் ஆகும்" என கூறி உள்ளார்.

    பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி கிராமத்துக்கு வந்தபோது, "எல்லை கிராமங்கள் கடைசி கிராமங்கள் என கூறப்படுவது போல அல்ல, அவைதான் நாட்டின் முதல் கிராமங்கள்" என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

    இந்த மானா கிராமம், பத்ரிநாத் அருகே உள்ளது. அங்கே செல்கிற பக்தர்கள் இந்த கிராமத்தைப் பார்க்கச்செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
    • கட்டிடத்தில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறினார்கள்.

    மாநில பேரிடர் மீட்பு குழுவிற்கும், தீயணைப்பு படை விரைந்து அங்கு உடனடியாக சென்றனர். இந்த தீ விபத்தில் 2 சிறுமிகள் உடல் கருகி பலியானார்கள். அந்த கட்டிடத்தில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

    • ஒரு புதிய இந்தியா உருவாகி வருகிறது.
    • பில்கேட்ஸ் இந்தியாவை வெகுவாக பாராட்டி இருந்தார்.

    டேராடூன் :

    உத்தரகாண்டில் ரூ.180 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் 4 சுகாதாரத்துறை திட்டங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அவர் பேசும்போது கூறியதாவது:-

    கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா உள்நாட்டில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது மட்டுமின்றி 150-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் அந்த நாடுகளும் கொரோனாவை எதிர்த்து போரிட உதவியது.

    இந்த சிறப்பான பங்களிப்புக்காக சர்வதேச அளவில் இந்தியா பாராட்டப்பட்டது. உதாரணமாக, தவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் பில்கேட்ஸ் இந்தியாவை வெகுவாக பாராட்டி இருந்தார்.

    சர்வதேச அளவில் தடுப்பூசி டோஸ் ஒன்று 16, 18, 20 டாலர் என விற்பனையாகி வந்தபோது, நாம் 78 நாடுகளுக்கு வெறும் 3 டாலருக்கு ஏற்றுமதி செய்தோம்.

    நம்மை பொறுத்தவரை ஆரோக்கியம் என்றால் சேவைதான், வர்த்தகமோ, வணிகமோ அல்ல. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற நமது மரபுக்கு ஏற்ப இந்தியாவின் செயல்பாடுகள் இருந்தன.

    பிரதமர் மோடியின் தலைமையில், சுகாதாரத்துறையுடன் முதல்முறையாக வளர்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் ஒரு முழுமையான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

    நமக்கு மருத்துவமனைகள் தேவை என்றால், அதை திறம்பட வழிநடத்த டாக்டர்களும் வேண்டும். அதற்கு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும், அதில் உள்ள இடங்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும்.

    கடந்த 2014-ம் ஆண்டில் வெறும் 56 ஆயிரமாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 1.3 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இதைப்போல மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் 350-ல் இருந்து 664 ஆக உயர்ந்துள்ளன.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையும் 6-ல் இருந்து 42 ஆக உயர்த்தப்பட்டு உள்ளன.

    ஒரு புதிய இந்தியா உருவாகி வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்றாகும்.

    இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

    ×