என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • உரிய அனுமதி பெற வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
    • 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மினி பார் வைக்க அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் மினி மது பார் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உரிய அனுமதி பெற வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    வருமான வரி செலுத்துபவர்கள் இந்த அனுமதியை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத்தி இந்த அனுமதியை பெற வேண்டும்.

    இந்த அனுமதியை பெற்றால் மது பிரியர்கள் தங்களது வீட்டில் 18 லிட்டர் வெளிநாட்டு மதுபான வகைகளை வைத்துக்கொள்ளலாம். 9 லிட்டர் ஒயின் வைத்துக் கொள்ளலாம். 15.6 லிட்டர் பீர் வகைகளையும் வீட்டில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

    இந்த மினி பாரை வைத்திருப்பவர்கள் விற்பனை செய்யக்கூடாது. 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மினி பார் வைக்க அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். 27 பேர் காயம் அடைந்தனர்.

    உத்தர்காஷி:

    உத்தரகாண்டின் உத்தர்காஷி மாவட்டத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கங்னானி என்ற பகுதியருகே சென்றபோது திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

    50 மீட்டர் ஆழத்தில் பஸ் விழுந்ததில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விசாரணையில், பஸ்சில் பயணித்தவர்கள் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. முறையான சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவுகளையும் மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி பிறப்பித்துள்ளார்.

    இந்நிலையில், பஸ் கவிழ்ந்தவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • மேலும் சில உடல்கள் இன்னும் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • கனமழையால் 800-க்கும் அதிகமான சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்பு காரணமாக கன மழை கொட்டி தீர்த்ததால் சிம்லா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு உண்டானது. சிம்லாவின் சம்மர் ஹில், பாக்லி மற்றும் கிருஷ்ணா நகர் ஆகியவை நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    விமானப்படை ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் உதவியுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காங்க்ரா மாவட்டத்தின் இந்தோரா மற்றும் பதேபூர் பகுதிகளில் இருந்து மட்டும் 1,731 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் நிபுன் ஜிண்டால் தெரிவித்தார்.

    இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை கொட்டியுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை சராசரியாக 730 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கடந்த 54 நாட்களில் 2742 மி.மீ. மழை கொட்டியுள்ளது என்று வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கனமழையால் 800-க்கும் அதிகமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவுகளால் 9,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

    மழை இன்னும் தொடர்ந்து பெய்வதால் மக்கள் பரிதவிக்கின்றனர். சமீபத்திய மழை மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி சேதம் அடைந்துள்ளதாகவும், மழையால் சிதைந்த உள்கட்டமைப்பை மீண்டும் சரிசெய்ய ஒரு வருடம் ஆகும் என்றும் முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்து உள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் உற்பத்தி அதிகமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய மழையால் ஆப்பிள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக, பழத்தோட்டங்களில் விளைந்த ஆப்பிள்கள் விழுந்து சேதமாகி உள்ளன. இமாச்சலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 24 முதல் 28 கிலோ எடையுள்ள 3-4 கோடி ஆப்பிள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் இம்முறை ஒன்று முதல் 1.50 கோடி பெட்டிகள் மட்டுமே அறுவடை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதேபோல உத்தரகாண்ட் மாநிலத்திலும் வரலாறு காணாத மழை, நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. உத்தரகாண்டின் லக்சுமன் ஜூலாவில் உள்ள ஓய்வு விடுதியில் ஒரு தம்பதி மற்றும் அவர்களது மகன் உட்பட 4 பேர் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.

    இயற்கையின் இந்த கோர தாணடவத்தால் இமாசலபிரதேசத்தில் இதுவரை 71 பேரும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 10 பேரும் என மொத்தம் 81 பேர் பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மொத்தம் 57 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கனமழை, நிலச்சரிவில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே உத்தரகாண்டில் இன்னும் 2 நாட்கள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா தெரிவித்து உள்ளது. இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 2 மாநிலங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    • நேற்று அதிகாலை முதல் காலை வரை 4 முறை நிலஅதிர்வு
    • ரிக்டர் அளவில் 4.2, 2.7, 2.8 எனப் பதிவு

    இந்தியாவின் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை உத்தரகாண்டில் நான்கு முறை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

    முதல் நிலஅதிர்வு நேற்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 1.37, 2.18, 6.52 என மூன்று முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

    2, 3 மற்றும் 4-வது நில அதிர்வு 2.7 மற்றும் 2.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் பிதோராகார்ஹ் மாவட்டத்தை சுற்றி நிகழ்ந்துள்ளது.

    இந்தியா- சீனா எலலையில் மிலம் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நில அதிர்வை உணர்ந்ததாக, ராங்கோங்கில் உள்ள பூபால் சிங் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது.
    • மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

    வட இந்திய மாநிலமான உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டம். ருத்ரபிரயாக்கிலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில், கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு யாத்திரையாக பக்தர்கள் மேற்கொள்ளும் கேதார்நாத் யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது.

    சாலை வழியாக இந்த கோயிலுக்கு செல்ல முடியாததால், ருத்ரபிரயாக்கில் உள்ள கவுரிகண்ட் பகுதியிலிருந்து 22 கிலோமீட்டர் மலை வழியில் ஏறி செல்ல வேண்டும். கவுரிகண்ட் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் 3 கடைகள் சேதமடைந்துள்ளன. மேலும், பத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை குழு, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    தற்போது வரை இடிபாடுகளில் 3 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன.

    "காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது" என்று ருத்ரபிரயாக் பகுதி காவல் கண்காணிப்பாளர், டாக்டர் விசாகா கூறியுள்ளார்.

    மழையினாலும், ஆங்காங்கே சரிந்து விழும் பாறைகளினாலும் மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

    • உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவானது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று மாலை 6.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.
    • கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மகி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த மகி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக் காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.

    கொலை செய்வது எப்படி என்பதை 'கிரைம் பேட்ரோல்' என்ற தொலைக் காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.

    தனது திட்டத்தின்படி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த காதலரை, நல்ல பாம்பை விட்டு மகி கடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கித் இறந்து விட்டார். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மகி ஆர்யா உள்ளிட்ட 4 பேர்தான் கொலையாளிகள் என்பதை கண்டுபிடித்துவிட்டனர். 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து நைனிடால் எஸ்.பி. பங்கஜ் பட் கூறுகையில், பாம்புப் பிடாரன் ஒரு வரை அழைத்து வந்து நல்ல பாம்பை மகி ஏவி விட்டு உள்ளார். மகி ஆர்யாவுக்கு தீப் கந்த்பால் என்ற வேறொரு காதலரும் உள்ளார். மகி ஆர்யா, தீப், வேலைக்கார பெண் உஷா தேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோர் சேர்ந்து கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

    அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர்.
    • சம்பவ இடத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்கின்றனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம், அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள  மின்சார டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) இன்று வெடித்து சிதறியது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதில் 15 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, வேதனையையும் இரங்கலையும் தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்வதாக கூறி உள்ள அவர், இதுபற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • யூடியூபர் அஸ்வினி தாபா, புரான்ஸ் கந்தா என்ற கிராமத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.
    • வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

    உத்தரகாண்டை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் அஸ்வினி தாபா. இவரது வீடியோக்கள் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும். இந்நிலையில் இவர் அங்குள்ள புரான்ஸ் கந்தா என்ற கிராமத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். எனவே கிராம மக்களை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு விருந்து கொடுக்க நினைத்த அஸ்வினி தாபா அப்பகுதியில் பிரபலமான கொழுக்கட்டை வடிவிலான சிற்றுண்டி வகையை சேர்ந்த 'மோமோ' விருந்து கொடுத்தார்.

    மேலும் கிராம மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மேலும் பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • இன்று 115 முதல் 204 மி. மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது
    • நிலச்சரிவு, ஆற்றில் வெள்ளம், சாலைகள் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் பேய்மழை பெய்தது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 மாநில சாலைகள், 10 லிங்க் ரோடு சேதமடைந்து போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. மந்தாகினி, அலாக்நந்தா அற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சோன்பிரயாக், கவுரிகுண்ட் பகுதியில கேதர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 115 முதல் 204 மி. மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    உத்தரகாண்ட் கனமழை குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில் ''ஒவ்வொரு வருடமும் பருவமழையின்போது நாம் இயற்கை பேரழிவை எதிர்கொண்டு வருகிறோம். அதிக மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படடுள்ளது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. நாம் முழு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம்.

    அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மாநில பேரிடர் மீட்புக்குழு அவர்களுடைய வேலையை திறம்பட செய்து வருகிறாரக்ள். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    மற்ற அமைப்புகளும் பணியில் இறங்கியுள்ளனர். பேரிடர் மீட்புக்குழு, ராணுவம், பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தயாராக உள்ளோம்'' என்றார்.

    • பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் தக்காளி விலை சரிந்து வருகிறது.

    நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் 1 கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கங்கோத்ரி பட்டணத்தில் ரூ.250, யமுனோத்திரியில் ரூ .200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    பெங்களூருவில் ரூ.101 முதல் 121 வரையும், கொல்கத்தாவில் 152 க்கும், டெல்லியில் 120-க்கும், சென்னையில் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

    மும்பையில் ரூ.108-க்கும், உத்தரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.162-க்கும், ராஜஸ்தான் மாநிலம் சுருவில் ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகின்றன.

    ராஜஸ்தான் மாநிலத்தில் தக்காளி விலை சரிந்து வருகிறது.

    சென்னையில் உள்ள ரேசன் கடைகளில் தமிழக அரசு மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • பள்ளத்தில் தற்காலிகமாக கற்கள் மற்றும் மணல்களை கொட்டி மூடி வைத்துள்ளனர்.

    ஜோஷிமத்:

    உத்தரகாண்ட் மாநிலம் ஷாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் கிராமத்தில் கடந்த ஆண்டு வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. ரோடுகளும் 2-ஆக பிளந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து வாழுவதற்கு தகுதியில்லாத 181 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று வரை பலர் அந்த முகாமிலேயே தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.அப்போது அங்குள்ள ஒரு தெருவில் திடீரென 6 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் சிக்கவில்லை.

    இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதிஅடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

    ரோட்டில் 6 அடி பள்ளம் உருவானதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த பள்ளத்தில் தற்காலிகமாக கற்கள் மற்றும் மணல்களை கொட்டி மூடி வைத்துள்ளனர்.

    ×