என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது.
    • சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா- தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஆக்சிஜன் குறைந்த சூழ்நிலையில் அதற்குள் தவித்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வருவதற்காக இடிந்து விழுந்த பகுதிக்குள் துளையிட்டு குழாய்களை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அமெரிக் காவில் தயாரிக்கப்பட்ட எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

    நேற்று பிற்பகலில் அந்த எந்திரம் மூலம் துளையிட்டு 5-வது குழாயை செலுத்தும் பணி நடைபெற்றது. அப்போது சுரங்கப்பாதைக்குள் ஒரு பலத்த விரிசல் சத்தம் கேட்டது. இந்த இடையூறு காரணமாக மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மற்றொரு அதிக சக்தி வாய்ந்த துளையிடும் எந்திரம் விமானம் மூலம் சுரங்கப பாதை பகுதிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் துளியிடும் பணிக்கு மீட்பு படையினர் தயாராகி வருகிறார்கள். இதற்காக மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளைபோட முயற்சி செய்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் நிபுணர்கள் குழுவுடன் பிரமதர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவும் இணைந்துள்ளனர். இது தொடர்பாக பிரதமரின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறுகையில், 'தொழிலாளர்களை மீட்க நிபுணர்களுடன் இணைந்து 5 திட்டங்களை வகுத்துள்ளோம். ஒரே வழியில் மட்டும் முயற்சி செய்யாமல் 5 திட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதில் நிபுணர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.

    மீட்பு படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிலாளர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் மீட்கப்படுவார்கள். ஆனால் கடவுள் போதுமான அளவில் கருணை காட்டினால், அவர்கள் அதற்கு முன்பே மீட்கப்படுவார்கள்' என்றார்.

    இதன் அடிப்படையில் மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர்களை மீட்பதற்கான 5 திட்டங்கள் தொடர்பாக அவர்கள் கலந்தாலோசித்தனர்.

    இதற்கிடையே சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் சுரங்கப்பாதைக்கு வெளியே தொடர்ந்து வேதனையுடன் காத்திருக்கிறார்கள். அதில் சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    • சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    • 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.

    அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனா். முன்னதாக இடிபாடுகளில் துளையிட்டு பெரிய இரும்புக் குழாக்களைச் செலுத்தி, அவற்றின் வழியே தொழிலாளா்களை வெளியே மீட்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் துளையிடும் எந்திரம் சரிவர வேலை செய்யவில்லை.

    இதையடுத்து வேறு எந்திரம் மூலம் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள பாறை சரிவை துளையிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப் படையின் சி-130 ஹொ்குலிஸ் விமானத்தின் மூலமாக விபத்துப் பகுதிக்கு 25 டன் அளவிலான அமெரிக்காவில் தயாரான அதி நவீன கனரக எந்திரம் கடந்த 15-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது.

    இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 6 மீட்டர் தூரத்துக்கு பாறைகளில் துளையிடும் ஆற்றல் கொண்டது. இந்த நவீன எந்திரம் மூலம் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் சரிந்து விழுந்துள்ள பாறை கலந்த மண் பகுதி சுமார் 70 மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அந்த 70 மீட்டர் தூரத்தையும் நவீன எந்திரம் மூலம் துளையிட்டு சென்றால்தான் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும்.

    தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே நவீன எந்திரம் மூலம் நேற்று காலை தொடங்கிய துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் 24 மீட்டர் தூரத்துக்கு அந்த எந்திரம் துளையிட்டு இருந்தது.

    அதன் பிறகு பாறைகளில் மிகவும் வலுவான பகுதி இருந்ததால் துளையிடும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இன்னும் பாதிக்கு மேற்பட்ட தொலைவுக்கு துளையிட வேண்டியது உள்ளது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில் உலோகப்பகுதி ஒன்று உள்ளது. இந்த உலோகப் பகுதியை வெட்டி அகற்றினால் தான் சுரங்கப் பாதையில் துளையிடும் பணியை தொடர முடியும். எனவே அந்த உலோக பகுதியை கட்டர் மூலம் வெட்டி அகற்றுவதற்காக பணிகள் நடந்தன.

    நேற்று அந்த பணிகள் நடந்து கொண்டிருந்த போது சுரங்க பாதை இடிந்து விழுவதை போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் மீட்பு குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மீட்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நேற்று மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் இன்று மதியம் வரை தொடங்கவில்லை.

    சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதைக்குள் இடிபாடுகளை நவீன எந்திரங்கள் மூலம் அகற்றும்போது கடுமையாக அதிர்வு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

    இந்த அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை ஓட்டுமொத்தமாக இடிந்து விழுந்துவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதையின் மேல் இருந்து துளைபோட்டு 41 தொழிலாளர்களை மீட்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் அடுத்தடுத்து இடையூறு ஏற்படுவதால் 41 பேரையும் திட்டமிட்டப் படி மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி நடக்குமா? என்று கேள்விக்குறி நீடிக்கிறது.

    சுமார் 150 மணி நேரம் கடந்துவிட்டதால் சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    • சுரக்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க புதிய யுக்தியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    உத்திரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் சுரக்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாட்டில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் அவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அவர்களை மீட்கும் பணி 6-வது நாளாக நடந்து வருகிறது. சுரக்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க புதிய யுக்தியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சுரக்கத்துக்குள் 60 மீட்டர் நீளமும், 900 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட இரும்பு குழாய் சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது.

    தொழிலாளர்கள் குழாயின் உள் வழியாக ஏறி தப்பி வருவதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு குழாயும் சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது. அதன் வழியாக சுரங்கத்துக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும், காற்றை சப்ளை செய்யவும், உடல் நலம் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மருந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த குழாய்கள், தொழிலாளர்கள் இருக்கும் பகுதி வரை செலுத்துவதற்காக குழி தோண்டப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்து குழாய் செலுத்தப்பட்டதும் அதன் வழியாக தொழிலாளர்கள் தப்பி வரும் வகையில் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பணி வேகமாக நடப்பதால் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவிலேயே மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நிபுணர்கள் தரும் தகவல்களின் பேரிலும் மீட்பு பணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    • சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பாறையின் தன்மை மிகவும் அடர்த்தியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.

    சுரங்கப் பாதைக்குள் அந்த சமயத்தில் 40 தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். வெளியேற முடியாத நிலையில் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) 5-வது நாளாக தவிப்புள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு சிறிய குழாய்கள் மூலம் ஆக்சிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    சுரங்கத்தில் மண் சரிந்துள்ள பகுதி சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. எனவே அந்த பகுதியில் துளையிட்டு உள்ளே செல்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 200 பேர் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவில் ராட்சத குழாய்கள் மூலம் 40 தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 900 மி.மீட்டர் குறுக்களவு கொண்ட குழாய்கள் வரவழைக்கப்பட்டன. அந்த குழாய்களை சுரங்கப் பாதைக்குள் செலுத்துவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை துளையிடப்பட்டது.

    இந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் எதிர்பாராத இடையூறு உருவானது. ராட்சத குழாய்களை சுரங்கப் பாதைக்குள் துளையிட்டு செலுத்தும் பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சுரங்கம் தோண்டும் மிகப்பெரிய எந்திரத்தை கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை மூலம் நேற்று மாலை ராட்சத எந்திரம் கொண்டு வரப்பட்டது. 25 டன் எடை கொண்ட அந்த எந்திரம் மணிக்கு 5 முதல் 6 மீட்டர் தூரத்துக்கு துளையிடும் ஆற்றலை கொண்டது.

    இந்த எந்திரம் மூலம் சுரங்கப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் நிலச்சரிவு பகுதியில் உள்ள பாறைகளை துளையிடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 10 மணி நேரத்துக்குள் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு பாறைகளை குடைந்து துளையிட்டு சுரங்கப்பாதைக்குள் சென்று விட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் இன்றே 40 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே மண் சரிந்துள்ள சுரங்கப் பாதை அருகே மற்றொரு சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. அதன்மூலமாகவும் 40 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற தாய்லாந்து மற்றும் நார்வே நாட்டு நிபுணர்களிடமும் ஆன்லைன் மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு உதவிகள் பெறப்பட்டுள்ளன. அந்த நிபுணர்கள் தரும் தகவல்களின் பேரிலும் மீட்பு பணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பாறையின் தன்மை மிகவும் அடர்த்தியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுவும் மீட்பு குழுவினருக்கு கடும் சவாலாக இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் புதன்கிழமை காலை சாத்தப்பட்டன.
    • கோவிலின் நடைசாத்தப்பட்ட பிறகு கேதார்தாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை புதன்கிழமை சாத்தப்பட்டது. குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டுவிடும் என்பதால் ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.

    கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் புதன்கிழமை காலை சாத்தப்பட்டன.

    இந்நிகழ்வின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார். கோவிலின் நடைசாத்தப்பட்ட பிறகு கேதார்தாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. உகிமடம் பகுதியில் உள்ள ஓம்காரேஸ்வர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் இந்த விக்கிரகம், குளிர்காலம் முழுவதும் அங்கு வழிபடப்படும்.

    கேதார்நாத் கோவிலில் நடப்பாண்டில் 19.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டதாக அஜேந்திர அஜய் தெரிவித்தார்.

    • தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • எல்லை சாலை அமைப்பு மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா- தண்டல்ஹன் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.

    சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் வரையிலான 26 கிலோ மீட்டர் தூரத்தை குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    நேற்று அதிகாலை இந்த சுரங்கப்பாதையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. சுமார் 40 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், சுரங்க பாதையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தொடக்க பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    இதனால் சுரங்கத்திற்குள் வேலை செய்த 40 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். மேலும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணம் உள்ளனர்.

    இடிபாடுகள் அதிக அளவில் இருப்பதால் மீட்பு பணிகளில் கடும் சிரமம் நிலவுகிறது. இதனால் 15 மணிநேரத்திற்கு மேலாகியும் நேற்று வரை ஒரு தொழிலாளரை கூட மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதவிர எல்லை சாலை அமைப்பு மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் அவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் ஜே.சி.பி., துளையிடும் கருவிகள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை உத்தர்காசி கலெக்டர் அபிஷேக் ருஹேலா மேற்பார்வையிட்டு வருகிறார்.

    மீட்பு பணிகள் தொடர்பாக அவருடன் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி பேசி உள்ளார்.

    மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி கூறுகையில், "சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனேயே அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

    விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்றார்.

    • சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்துள்ளது.
    • மீட்பு பணிகளில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • பாலின சம உரிமை, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு ஆகியவை இதில் அடங்கும்
    • இருதார முறை தடை செய்யப்படும் என தெரிகிறது

    நவம்பர் 12, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஒரு வாரத்தில் சட்டசபையின் சிறப்பு தொடர் கூட்டப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சி எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மசோதாவிற்கான வரைவில் இடம்பெறும் பல அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாலின சம உரிமை, பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உட்பட திருமணம், விவாகரத்து, பரம்பரை சொத்துரிமை, தத்து எடுத்தல் ஆகிய முக்கிய விஷயங்கள் இந்த சட்டத்தின் மைய பொருளாக இருப்பதாக தெரிகிறது.

    பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18லிருந்து 21 என அதிகரிக்கப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், திருமண வயது 18 என்பதில் இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தற்போது தெரிகிறது.

    இருதார மற்றும் பலதார தடை, 'லிவ்-இன்' வாழ்கை முறையை கட்டாய பதிவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்பதால் இந்த மசோதா சட்டமாவதற்கு முன் பல காரசார விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

    • பிரபலமான தலைவர் பொதுமக்களுடன் பழகுவதைக் கண்டு பக்தர்கள் வியந்தனர்.
    • ராகுல் காந்தியின் கோவில் வருகையின் போது எடுத்த படங்களை காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது 3 நாள் பயணத்தை தொடங்கினார். பயணத்தின் போது கேதார்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்தும் ஆரத்தியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

    பின்பு, மலைக்கோவிலில் பிரார்த்தனை செய்ய தங்கள் முறைக்காக காத்திருக்கும் யாத்ரீகர்களுக்கு தேநீர் வழங்கி 'சாய் சேவா' செய்து கொண்டிருந்தார்.

    இவ்வளவு பிரபலமான தலைவர் பொதுமக்களுடன் பழகுவதைக் கண்டு வியந்த பக்தர்கள், அவரிடம் செல்ஃபி எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ராகுல் காந்தி நிராகரிக்கவில்லை.

    ராகுல் காந்தியின் கோவில் வருகையின் போது எடுத்த படங்களை காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புனித யாத்திரை சென்று திரும்பிய போது விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பித்தோராகர்:

    உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் லகான்பூர் அருகே தார்ச்சுலா-லிபுலேக் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று காளி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உத்தரகாண்டில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பித்தோராகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வர் சிங் கூறும்போது, பெங்களூரைச் சேர்ந்த இருவரும், தெலுங்கானாவைச் சேர்ந்த இருவரும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் என 6 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இருள் மற்றும் பாதகமான சூழ்நிலை காரணமாக, உடல்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புனித யாத்திரை சென்று திரும்பிய போது விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் கைவினைப் பொருள்களை கண்டு களித்தார் பிரதமர் மோடி.
    • உள்ளூர் பிரமுகர்கள், ராணுவ வீரர்களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில், 2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். உத்தரகாண்ட் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் கைவினைப் பொருள்களை கண்டு களித்த பிரதமர் மோடி, அவர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தார்.

    மேலும் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

    அதன்பின், பித்தோரகர் பகுதிக்குச் செல்லும் பிரதமர் மோடி, ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும் சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

    • விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் சிக்கி கொண்டனர்.
    • விபத்தில் 18 பேர் காயமடைந்து உள்ளனர்.

    உத்தரகாண்டின் நைனிடால் நகரில் இருந்து கலாதுங்கி நோக்கி பஸ் ஒன்று நேற்றிரவு வந்து கொண்டிருந்தது. கலாதுங்கி சாலையில் கத்காட் பகுதியருகே வந்தபோது, அந்த பஸ் திடீரென சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், மாநில பேரிடர் பொறுப்பு படை, தீயணைப்பு துறை மற்றும் நைனிடால் போலீசார் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.

    தொடர்ந்து, மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பஸ்சில் 32 பேர் இருந்துள்ளனர். 28 பேர் மீட்கப்பட்டனர். விபத்தில் 18 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்த்வானி பகுதியில் உள்ள சுஷீலா திவாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒன்றிரண்டு பேர் இன்னும் சிக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    ×