என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • உயிரிழந்தவர்களில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த ஒருவரின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 



    • த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கூட்ட நெரிசல் குறித்து விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கரூர்:

    கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

    * கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது.

    * கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    * த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

    * கூட்ட நெரிசல் குறித்து ஆணைய விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • டி.வி.நகர், கிருஷ்ணவேணி நகர், லலிதாம்பாள் நகர், ரோஜாம்பாள் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (29.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ராமாபுரம்: டி.வி.நகர், கிருஷ்ணவேணி நகர், லலிதாம்பாள் நகர், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீலட்சுமி நகர், கார்த்திக் பாலாஜி நகர், சபரி நகர், டி.எல்.எப்., குப்தா கம்பெனி, மவுண்ட் பூந்தமல்லி மெயின் ரோடு, கமலா நகர், ஸ்ரீராம் நகர், வெங்கடேஸ்வரா அவென்யூ, சுபஸ்ரீ நகர்.

    • விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக

    கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

    படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக!

    கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில்,

    கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.

    உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

    எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்!" என்று தெரிவித்துள்ளார். 

    • கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
    • மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கரூர்:

    கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட 35 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் தங்கள் உறவினர்களை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். உயிரிழந்தோர் உடல்களைப் பெறும்போது உறவினர்கள் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.

    • முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.
    • கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    கரூர்:

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.

    கூட்ட நெரிசல் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

    உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார். மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கரூரில் நடந்திருக்கக்கூடிய இந்த கொடுரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாத அந்த அளவிற்கு சோகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதை பற்றி விவரமாக சொல்வதற்கு மனது இடம் கொடுக்க வில்லை.

    கனத்த இதயத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்.

    கரூரில் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. செய்தி கிடைத்த உடனே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டறிந்தேன்.

    கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதை எதிர்பார்க்கவில்லை. இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

    போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.

    ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இது வரை நடக்காதது. இனிமேல் நடக்கக் கூடாதது.

    இறந்துபோன உயிர்களுக்கு எல்லாம் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுவது என்பது தெரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன்.

    அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர்.
    • முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

    கரூர்:

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.

    இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

    அதன்பின், உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார். மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர்.

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர்.
    • தவெகவினர் கேட்டதன் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்பட்டது என்றார்.

    சென்னை:

    கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன் நள்ளிரவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். ஆண்கள் 12, பெண்கள் 16, ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தைகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அவர்கள் முதலில் அனுமதி கேட்டது லைட்ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர்சந்தை பகுதியில்தான். அது இதைவிட நெரிசலான பகுதி.

    இந்தக் கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம்.

    மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டுவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் காரணம் தெரிய வரும் என தெரிவித்தார்.

    • கரூர் துயர சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    • கூட்ட நெரிசல் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.

    கரூர்:

    கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜ மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் சென்றார்.

    இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் உடலைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுதார். அவருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் கூறினார்.

    • கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
    • கரூர் துயர சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உதவி எண்களை அறிவித்தார்.

    சென்னை:

    கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

    கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள 04324-256306, 7010806322 ஆகிய உதவி எண்களை அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், முதல் கட்டமாக போலீசார் கொலையாகாத மரணம், மரணம் விளைவிக்கும் செயல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தற்போது மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவெக தலைவர் விஜய் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • கரூர் துயர சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உதவி எண்களை அறிவித்துள்ளார்.

    கரூர்:

    கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

    இந்நிலையில், கருரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 04324-256306, 7010806322 ஆகிய எண்களை அறிவித்துள்ளார்.

    • கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • விஜய் கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன என்றார்.

    சென்னை:

    கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

    கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

    பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு போலீசாரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு.

    விஜய் கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், போலீசாரும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

    திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த போலீசாரை அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.

    உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    ×