என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தனது பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- துர்காவை சந்தித்து ஆசி பெற்றார்.
    • தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற உள்ளார்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி காலையில் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அவர் சென்றார்.

    அங்கு தனது தந்தையான முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. கரை வேட்டியை அணிவித்து வாழ்த்து பெற்றார். பதிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு சால்வை அணிவித்து தோளில் கை போட்டு அரவணைத்து வாழ்த்து தெரிவித்தார்.



    அப்போது தாயார் துர்கா ஸ்டாலினிடமும் உதயநிதி காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரை துர்கா ஸ்டாலின் உச்சி முகர்ந்து வாழ்த்தினார். அப்போது கேக் கொண்டு வரப்பட்டு குடும்பத்தார் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டினார்.

    அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரை சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தாயகம் கவி, எழிலரசன், பகுதி செயலாளர் சேப்பாக்கம் மதன் மோகன், புழல் நாராயணன் கலைஞரின் உதவியாளர் நித்யா, பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், சேப்பாக்கம் பகுதி ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பி.கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் சென்று மரியாதை செலுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அங்கு உதயநிதி ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் மாலைகள்-புத்தகங்கள் வழங்கினர்.

    அதன் பிறகு அங்கிருந்து பெரியார் திடலுக்கு சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ரோட்டின் இரு புறமும் நின்று உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    பெரியார் திடலுக்குள் திராவிட கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வாழ்த்து கூறினார். ஏராளமான கட்சி நிர்வாகிகளும் வாழ்த்தினார்கள். அதன் பிறகு கோபாலபுரம் சென்று கலைஞரின் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார். தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தாரிடமும் ஆசி பெற்றார்.

    பின்னர் சி.ஐ.டி. காலனிக்கு சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.

    இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ரூ.58 ஆயிரத்து 400-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்றுமுன்திம் சவரனுக்கு ரூ.8௦௦-ம் நேற்று சவரனுக்கு ரூ.960 என கடந்த இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,760 குறைந்தது .

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துக்கு. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,105-க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,840-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,640

    25-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600

    24-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400

    23-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400

    22-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-11-2024- ஒரு கிராம் ரூ. 98

    25-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    24-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    23-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    22-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    • அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
    • கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது

    இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் வங்கக்கடலில் இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயல் சின்னம் தமிழ்நாட்டை நெருங்கியது. நாகையில் இருந்து 400 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.

    வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக ஃபெங்கல் வலுப்பெறும். அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    தாழ்வு மண்டலம் 8 கி.மீ. வேகம் 10 கி.மீ. வேகம் என படிப்படியாக அதிகரித்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

    சென்னைக்கு தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் உள்ளது. திரிகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே 130 கி.மீ., நாகைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.

    • தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
    • பள்ளிக்கரணை 8.56, செங்கல்பட்டு 7.5, மகாபலிபுரம் 7.2, புதுச்சேரி 7.55, காரைக்கால் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது

    இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிகழ்வுகள் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை மணலியில் மணலி 13.39, கத்திவாக்கம் 11.19, புழல் 6.95, எண்ணூர் 7.75, மீனம்பாக்கம் 6, பள்ளிக்கரணை 8.56, செங்கல்பட்டு 7.5, மகாபலிபுரம் 7.2, புதுச்சேரி 7.55, காரைக்கால் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாகப்பட்டினம் 16.4, வேளாங்கண்ணி 15, கோடியக்கரை 17, வேதாரண்யம் 13, சீர்காழி 10, திருவாரூர் 9.6, செம்பனார்கோவிலில் 5, அதிராம்பட்டினம் 7.7, கடலூர் 8.8, சிதம்பரம் 7.2, மயிலாடுதுறை 7.1, மயிலம் 7.8, மணல்மேடு 8.05 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றால் அடுத்த இரண்டு தினங்களில் தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.
    • பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது

    இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    10 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.
    • சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை, நாகை, புதுச்சேரி அருகே உள்ளதால் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    மழை தொடர்ந்த நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடத்தப்படும் மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அழகப்பா பல்கலைக்கழ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற இருந்த டிப்ளோமா தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.


    • தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • கொடைக்கானல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது

    இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கொடைக்கானல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • வடக்கு டெர்மினல் சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மைய்யா மேஸ்திரி தெரு.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மைய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏ.இ. கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத்தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ்.

    சோத்துப்பாக்கம் : பாலாஜி கார்டன், பை பாஸ் ரோடு, ஆன் உல்லாச சிட்டி, சாந்தி காலனி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 670 கி.மீட்டர் தொலைவில் நிலவுகிறது.
    • புதுவையில் இருந்து 580 கி.மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில்  தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது.

    சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 670 கி.மீட்டர் தொலைவில் நிலவுகிறது. நாகையில் இருந்து தென்கிழக்கே 470 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 580 கி.மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது. இலங்கையின் திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே 190 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

    அடுத்த 2 நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு- இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவரித்துள்ளது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    சென்னை:

    வடக்கிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கொடைக்கானல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும்.
    • அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். டிரைவர்-கண்டக்டர் (டி அண்ட் சி) என நியமிக்காமல், இரு பணிகளுக்கும் தனித்தனியே ஊழியர்களை நியமிக்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும்.

    வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொ.மு.ச. பேரவை பொருளாளர் கி.நடராஜன், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலர் க.பணீந்திர ரெட்டியை சந்தித்தனர்.

    அப்போது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை டிசம்பர் 2-வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஓய்வு கால பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். மேலும் அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், வரவு-செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் சங்க நிர்வாகிகளிடம் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

    ×