search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றால் அடுத்த இரண்டு தினங்களில் தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Live Updates

    • 27 Nov 2024 9:08 PM IST

      கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது

    • 27 Nov 2024 8:59 PM IST

      காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுவதில் தாமதம். மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்வதால் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

    • 27 Nov 2024 8:19 PM IST

      கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசரக்கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

      அதன்படி, 1070, 04368- 22704, 04368- 228801, வாட்ஸ் அப் எண்- 9442636057 என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 27 Nov 2024 8:17 PM IST

      திருச்செந்தூரில் 2வது நாளாக 100 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் பாறைகள் மேல் ஏறி நின்று செல்பி எடுத்து வந்த காரணத்தால், காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

    • 27 Nov 2024 7:36 PM IST

      கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

      திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 27 Nov 2024 7:18 PM IST

      புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.

    • 27 Nov 2024 5:27 PM IST

      ஃபெங்கல் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.

    • 27 Nov 2024 5:03 PM IST

      நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

      நாகையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.

    • 27 Nov 2024 4:14 PM IST

      ஃபெங்கல் புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

      இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

    • 27 Nov 2024 3:00 PM IST

      சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் தடை விதித்து வனத்துறை, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

      சதுரகிரி கோவிலுக்கு செல்ல முன்னதாக அனுமதி தரப்பட்டிருந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×