என் மலர்
ஜார்கண்ட்
- பொதுமக்கள் மற்றும் ரெயில்வே போலீஸ் படை அதிகாரிகள் விரைந்து வந்து அந்த இளம்பெண்ணை காப்பாற்றுகின்றனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓடும் ரெயிலுக்கு அடியில் 21 வயது இளம்பெண் ஒருவர் தவறி விழுந்தது தொடர்பான வீடியோ காட்சிகளை காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வீடியோவில் பதிவாகியுள்ள சம்பவம் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றுள்ளது. ராஞ்சி ரெயில் நிலையத்தில் தமிழகம் செல்லும் ரெயிலில் மோனிகா குமாரி என்ற 21 வயது இளம்பெண் ஏற முயல்கிறார். மெதுவாக சென்ற ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே இருந்த இடைவெளியில் அவர் தவறி விழுகிறார்.
இதனைக்கண்ட பொதுமக்கள் மற்றும் ரெயில்வே போலீஸ் படை அதிகாரிகள் விரைந்து வந்து அந்த இளம்பெண்ணை காப்பாற்றுகின்றனர். அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் துணிச்சலோடு பலரது உயிரைக் காப்பாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- நான் நீதித்துறையை மதிக்கிறேன். நீதிமன்றம் அதன் உத்தரவை வழங்கியது மற்றும் நான் (ஜாமினில்) வெளியே இருக்கிறேன்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோடிச வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி கைது செய்தது.
இந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து வெளியில் வந்துள்ளார். வெளியில் வந்த அவர் தான் சதியால் பாதிக்கப்பட்டேன் எனத் தெரிவித்தள்ளார். மேலும், நான் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டேன். எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் நீதித்துறையை மதிக்கிறேன். நீதிமன்றம் அதன் உத்தரவை வழங்கியது மற்றும் நான் (ஜாமினில்) வெளியே இருக்கிறேன். ஆனால் நீதித்துறை செயல்முறை நீண்டது.
ஜூன் 13-ந்தேதி நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தலா 50 ஆயிரம் பிணைத்தொகையுடன் இரண்டு பேரின் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது. சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
நீதிபதி ரோங்கோன் முகோபாத்யாய் 55 பக்க ஜாமின் உத்தரவை வழங்கினார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சாம்பாய் சோரன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை வரவேற்றுள்ளனர்.
முதன்மை பார்வையில் குற்றவாளி அல்ல என்றும், ஜாமினில் இருக்கும்போது மனுதாரர் குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்ததாக ஹேமந்த் சோரன் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கட் முக்தி மோட்சா கட்சி தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர்.
- ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான ரூ.31.07 கோடி மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலம் அவரால் மோசடியாக பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.
- தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதை நீதிமன்றம் நிராகரித்தது.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் நில மோசடி மற்றும் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான ரூ.31.07 கோடி மதிப்புள்ள 8.86 ஏக்கர் நிலம் அவரால் மோசடியாக பெறப்பட்டது என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் புதிய மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவர்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டதில் இருந்து ஜாமீனுக்காக தொடர்து ஹேமந்த் சோரன் போராடி வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் அவரது ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமால் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
- 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
- காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஜார்க்கண்ட்:
பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.
7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 57 தொகுதிகளில் 26.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பீகார்- 24.25 சதவீதம்
சத்தீஸ்கர் - 25.03 சதவீதம்
இமாச்சல பிரதேசம் - 31.92 சதவீதம்
ஜார்க்கண்ட்- 29.55 சதவீதம்
ஒடிசா- 22.64 சதவீதம்
பஞ்சாப்- 23.91 சதவீதம்
உத்தரபிரதேசம்- 28.02 சதவீதம்
மேற்குவங்காளம்- 28.10 சதவீதம்
#LokSabhaElections2024 | 26.3% voter turnout recorded till 11 am, in the 7th phase of elections.
— ANI (@ANI) June 1, 2024
Bihar 24.25%
Chandigarh 25.03%
Himachal Pradesh 31.92%
Jharkhand 29.55%
Odisha 22.64%
Punjab 23.91%
Uttar Pradesh 28.02%
West Bengal 28.10% pic.twitter.com/ywJcIwCJ11
- பாருக்கு இரவு 1 மணியளவில் 4 பேருடன் சார்ட்ஸ் அணிந்து வந்த அந்த நபர் மது கேட்டுள்ளார்.
- ரைபிளால் அந்த நபர் சுட்டதில் படுகாயமடைந்த டிஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஜார்கண்ட் தலைநற் ராஞ்சியில் நள்ளிரவில் பாரில் மது கொடுக்க மறுத்ததால் மர்ம நபர் ஒருவர் ஆளுயர ரைபிள் துப்பாக்கியை எடுத்துவந்து பாரில் உள்ள டிஜேவை சுட்டுக் கொன்ற சம்பவம் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.
பாருக்கு இரவு 1 மணியளவில் 4 பேருடன் சார்ட்ஸ் அணிந்து வந்த அந்த நபர் மது கேட்டுள்ளார். ஆனால் பார் மூடப்பட்டுவிட்டதாக ஊழியர்கள் தெறிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர், ரைபிள் வகை துப்பாக்கியை எடுத்துவந்து அங்கிருந்த பாடல் வாசிக்கும் டிஜே மீது நீட்டிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ரைபிளால் அந்த நபர் சுட்டதில் படுகாயமடைந்த டிஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ராஞ்சி காவத்துறையினர் அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவருக்கு ரைபிள் எப்படி கிடைத்திருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தாலும் ஆளுயரம் உள்ள ரைபிளை கொண்டு நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- ராஞ்சியில் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார்.
டேராடூன்:
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6வது கட்ட தேர்தலில் ராஞ்சி தொகுதியும் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், ராஞ்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு சென்றார். அப்போது அவர் ஜார்க்கண்ட் பெண்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
#WATCH | Congress General Secretary Priyanka Gandhi Vadra performs a traditional dance with locals in Ranchi, Jharkhand.
— ANI (@ANI) May 22, 2024
Source: Congress pic.twitter.com/FIlNWNUMcF
- நீரின் அடியில் ஆழத்திற்கு சென்ற வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
- விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் 18 வயது வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் படம் எடுப்பதற்காக 100 அடி ஆழமுள்ள குவாரி ஏரியில் குதித்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் தௌசிப் (18) என்கிற வாலிபர் இன்ஸ்டாகிராம் ரீல்லுக்கு படம் எடுப்பதற்காக 100 அடி உயரத்தில் இருந்து மிகவும் ஆழமுள்ள குவாரி ஏரியில் குதித்துள்ளார்.
குதித்து நீந்த முயன்ற வாலிபர் நீரில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
அங்கு, ஏரியில் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் பலனில்லை.
இதையடுத்து, இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தௌசிக்கின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகிறது. அதில், தௌசிக் தண்ணீரில் குதிப்பதையும், அவரது நண்பர் அதனை தைரியமாக வீடியோ பதிவு செய்துள்ளதையும் காட்டுகிறது.
- பூரி ஜெகநாதர் பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர்.
- மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா என கேள்வி எழுப்பினார்.
டேராடூன்:
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என தெரிவித்தார். அதன்பின், சுதாரித்துக் கொண்ட அவர், பூரி ஜெகநாதரின் சிறந்த பக்தர் பிரதமர் மோடி என்றார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க.வுக்கு மிகவும் திமிர் பிடித்துவிட்டது, இவர்கள் தங்களை கடவுளாகக் கருதத் தொடங்கி உள்ளனர். பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர் பூரி ஜெகநாதர்.
பூரி ஜெகநாதர் மோடிஜியின் பக்தர் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா? பா.ஜ.க. அவர்களின் ஆணவத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.
- கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை.
- ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, சோனியா காந்தி ரேபரேலியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிபோது தனது மகனை (ராகுல் காந்தியை) தனது தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாக கூறியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-
சோனியா காந்தி பிரச்சாரத்திற்காக ரேபரேலிக்கு சென்று தனது மகனை அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறினார். ரேபரேலியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒரு கட்சிக்காரரையாவது அவர் பார்த்திருப்பாரா?
அவர், கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை. இப்போது அவர் தனது மகனுக்காக வாக்குகளைக் கேட்கிறார். அவர்கள் அந்த இடத்தை தங்கள் குடும்பச் சொத்தாக நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் இளவரசர் தேர்தலில் போட்டியிட வயநாட்டில் இருந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார். இது என் அம்மாவின் தொகுதி என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.
எட்டு வயசுக் குழந்தை படிக்கப் போனாலும், அப்பாவே அந்த பள்ளியில் படித்திருந்தாலும் அதை அப்பாவின் பள்ளி என்று சொல்வதில்லை.
இந்த குடும்பம் சார்ந்தவர்கள் பாராளுமன்ற ஆசனங்களின் உயிலை எழுதுகிறார்கள். ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அருகே உள்ள அம்ரோரா கிராமத்திற்கு அருகே, சரஸ்வதி ராம் என்ற அந்த 60 வயது முதியவர் நேற்று முன்தினம் தனது கால்நடைகளை வண்டியில் ஏற்றி அருகில் உள்ள பன்ஷிதர் நகர் என்ற சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர்ம், முதியவரை மறித்து, மாடு கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரது ஆடைகளைக் களைந்து இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று சிறிதுதூரத்தில் கட்டை அவிழ்த்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சமயம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மூவரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
- ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- எந்தவொரு தொழிலதிபரும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிப்பார்கள் என்று தெரிவித்தார்
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்சத்பூரில் பிரச்சாரப் பேரணியில் பேசிய அவர், "பரம்பரைக் கட்சி அரசியலை ஆதரிக்கும் காங்கிரஸ், மக்களவைத் தொகுதிகளை தங்களின் மூதாதையரின் சொத்துக்களாக கருதுகிறது. எந்தவொரு தொழிலதிபரும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிப்பார்கள். அதற்கு காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) பேசும் தொனி மாவோயிஸ்டுகளின் மொழியாக இருப்பதே ஆகும்.

அதைப் பயன்படுத்தி புதுமையான வழிகளில் தொழிலதிபர்களிடமிருந்து காங்கிரஸ் பணம் பறிக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு, இளவரசரின் (ராகுல் காந்தியின்) தொழில் எதிர்ப்பு மற்றும் தொழிலதிபருக்கு எதிரான மாவோயிஸ்ட் மொழியுடன் அவர்கள் உடன்படுகிறார்களா என்பதற்கு பதிலளிக்க தைரியமாக இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில், மக்களின் அடிப்படை வசதிகளை காங்கிரஸ் மறுத்து வருவதாகவும் ஜார்கண்டில் 18,000 கிராமங்களின் நிலை 18 ஆம் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இருந்தது என்றும் தெரிவித்தார். தற்போது ஜார்கண்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேற்று 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை.
- இன்று 2-வது நாள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த ஆலம்கீர் ஆலம் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக உள்ளார்.
ஆலம்கீர் ஆலமின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால் மற்றும் அவருடைய வீட்டு உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தினர். அப்போது ரூ. 37 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து ஆலம்கீர் ஆலம் மீது அமலாக்கத்துறை ஒரு கண் வைத்திருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) ஆலம்கீர் ஆலம் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்டது. சுமார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரது அறிக்கையை பதிவு செய்து கொண்டது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை மேற்கொண்டது. சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அமலாக்கத்துறை ஆலம்கீர் ஆலம்-ஐ கைது செய்துள்ளது.






