ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு

ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின்.
ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு
Published on

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை என்று அமலாக்கத்துறை அதன் மனுவில் புகார் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, நிலமோசடி புகாரில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் ஜனவரி 31ம் தேதி கைது செய்திருந்தனர்.

பின்னர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 45 பிரிவின்படி ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com