என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    • எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம்

    கதுவா:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் முதல்-மந்திரி உள்ளிட்ட முக்கிய பதவிகள் வகித்து வந்த குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி விட்டனர். இவர்களில் முன்னாள் மந்திரிகளும் அடங்கும்.

    எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார். அதற்காக அவர் காய் நகர்த்த தொடங்கி உள்ளார். காங்கிரசில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்நிலையில், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் விலகி உள்ளனர். கதுவா மாவட்டம் பானி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் துணை சபாநாயகருமான குலாம் ஹைதர் மாலிக் மற்றும் முன்னாள் எம்எல்சிக்கள் சுபாஷ் குப்தா, ஷாம் லால் பகத் ஆகியோர் விலகி உள்ளனர். கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.

    முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோஹல் லால் சர்மா, குரு ராம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் ஆகியோரும் டெல்லியில் ஆசாத்தை சந்தித்தனர். அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் குலாம் நபி ஆசாத்துக்கான ஆதரவை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகிறது.

    • ஐம்முகாஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்.
    • பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பை தேடி வந்தனர்.

    சோபூர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

    ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர்.

    மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை அந்த பயங்கரவாதிகள் தேடி வந்தது முதல்கட்ட விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார்.
    • காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் பற்றி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " பழமையான கட்சி நிலைகுலைவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. பயமாகவும் உள்ளது. நீண்டகாலமாக வதந்திகள் உலா வந்தன. ஆனால் காங்கிரசுக்கு ஆசாத் விலகலால் அமைப்பு ரீதியில் அடி விழுந்துள்ளது.

    சமீப காலத்தில் கட்சியில் இருந்து விலகிய மிக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அவரது விலகல் கடிதத்தை வாசிப்பது வேதனை தருகிறது" என கூறி உள்ளார்.

    • குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
    • மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    இதையடுத்து அங்கு மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

    காங்கிரசில் இருந்து விலகியவர்களில் முன்னாள் மந்திரிகள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

    இன்னொரு மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், "குலாம் நபி ஆசாத் பிரச்சினைகளை கட்சிக்குள் பேசி தீர்த்து கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு கிடைத்த மரியாதை, வேறெங்கும் கிடைக்காது" என கருத்து தெரிவித்துள்ளார்.

    • நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை.
    • கடந்த 4 நாட்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரெசி மாவட்டத்தில் உள்ள கட்ர பெல்ட்டில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு 3.4 என்கிற ரிக்டர் அளவிலும் மற்றொன்று டோடா மாவட்டத்தில் அதிகாலை 4.07 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் 40 நிமிட இடைவெளியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

    காட்ரா, டோடா, உடம்பூர் மற்றும் கிஷ்டவார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

    • இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது.
    • இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு,

    ஸ்ரீநகர்:

    கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 21 அன்று, நௌஷேராவின் ஜங்கர் செக்டாரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள், அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.

    இதையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    மேலும் நடைபெற்ற விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்.

    இந்நிலையில் கடந்த 22ந் தேதி ஜம்முகாஷ்மீரின் நௌஷேரா மாவட்டத்தின் லாம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

    • மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி.
    • மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். அவர், சமீபத்தில் சோபியானில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சுனில்குமார் பட் குடும்பத்தினரை சந்திக்க நேற்று திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் அங்கு செல்ல விடாமல் தடுத்து தன்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தனது வீட்டு கேட்டுக்கு பூட்டு போட்டிருக்கும் படங்களையும், வீட்டுக்கு வெளியே சி.ஆர்.பி.எப். வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கும் படங்களையம் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    அதில் அவர், 'மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது. ஏனெனில் அரசின் கொடூரமான கொள்கைகள், காஷ்மீரை விட்டு வெளியேற விரும்பாதவர்களை இலக்கு வைத்து கொலை செய்ய வழிவகுத்தது. எங்களை பிரதான எதிரியாக முன்னிறுத்துவதற்காகத்தான் நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    • வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
    • நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக கோவில் நிர்வாகம் தகவல்.

    ரியாசி: 

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாலை தொடங்கிய பலத்த மழை நள்ளிரவு வரை தொடர்ந்த போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்தனர். வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. 

    பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்ராவிலிருந்து கோவிலை நோக்கி பக்தர்கள் வருவது நிறுத்தப் பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் தலைமை செயல் அதிகாரி அன்ஷுல் கர்க் தெரிவித்தார்.அவசர தேவைக்காக பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை.
    • பயங்கரவாதி சுட்டதில் சில போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை பகுதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படுவதற்காக நடத்தப்படும் இந்த கடத்தலை இந்திய ராணுவத்தினர் தடுத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்துவது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில், எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக இன்று ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கதுவா, சம்பா, தோடா உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்தது. ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து ஜம்மு சர்வதேச எல்லை பகுதியில் டிரோன் மூலம் கடத்தப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்யும்போது நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதி அளித்த தகவலின் அடிப்படையில் ஜம்மு எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதியை அழைத்து சென்றபோது அவர் ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து சுட்டப்படி தப்பிக்க முயன்றார். இதையடுத்து, போலீசார் சுட்டதில் பயங்கரவாதி உயிரிழந்தார். பயங்கரவாதி சுட்டதில் சில போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • கடுமையான விஷம் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • இந்த மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிட்ரா பகுதியில் உள்ள அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 6 பேர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் 6 பேரில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நூருல் ஹபீப், ஷகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், பேரன் சஜத் அகமது ஆகியோர் ஹபீப்பின் வீட்டில் இறந்து கிடந்தனர். ஷகினாவின் மற்றொரு மகள் ரூபினா, மகன் ஜாபர் சலீம் ஆகிய இருவரும் அதை ஒட்டி உள்ள வீட்டில் இறந்து கிடந்தனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. கடுமையான விஷம் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில்தான் 6 பேரும் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • போலீஸ் விசாரணையில் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
    • பிரேத பரிசோதனை முடிவில் தான் 6 பேரும் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிட்ரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 6 பேர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. செரினா பேகம், அவரது மகள்கள் நவீமா அக்தர். ரூபினா பனோ, மகன் ஜாபர் சலீம், மற்றும் உறவினர்கள் நூர்முகமது, ஹபீப் ஆகியோர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை.

    தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் 6 பேரும் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத்.
    • ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் பிரச்சார குழு தலைவராக நியமனம் செய்த சில மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவராக உள்ள ஆசாத் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அபபதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×