என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்தார்.
- ராணுவம், போலீசார் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பேர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர்.
36-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பூஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாவ்ஜியன் எல்லைப் பகுதியில் உள்ள பிராரி நல்லா அருகே விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, ராணுவம், போலீசார் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க காவல்துறை மற்றும் குடிமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
- 6 மாநிலங்களில் 33 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.
ஜம்மு காஷ்மீரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி நடந்தது. ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியம் (ஜே.கே.எஸ்.எஸ்.பி.) இந்த சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை நடத்தியது. ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விசாரணை குழுவை நியமித்தது. இந்த விசாரணையில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 33 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஆகஸ்டு 5-ந் தேதி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. இன்று 33 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரியானாவில் கர்ணால், மகேந்தர்கர், ரேவாரி ஆகிய பகுதிகளிலும், குஜராத்தில் காந்தி நகரிலும், உத்தர பிரதேசத்தில் காசியா பாத்திலும், கர்நாடகாவில் பெங்களூரிலும், டெல்லி யிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
6 மாநிலங்களில் 33 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.
ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஜஹாங்கீர், ஜே.கே.எஸ்.எஸ்.பி.யின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோக்குமார் ஆகியோர் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்தும் 2-வது கட்ட சோதனை இதுவாகும்.
இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜம்மு, ரஜோரி, சம்பா மாவட்டங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் சதவீதம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்தது. வினாத்தாள்களை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அவுட் சோர்சிங் செய்வதில் விதிகள் மீறப்பட்டு உள்ளன. ஜே.கே.எஸ்.எஸ்.பி. அதிகாரிகள், பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் சிலர் இந்த முறைகேடு சதியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.
- ஒரு கட்டத்தில் பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அவரால் நடனமாட முடயவில்லை
- உதவிக்கு அழைத்த போது அனைவரும் இது நடனத்தின் ஒரு பகுதி என்று நினைத்துள்ளனர்
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் பிஷ்னா பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், யோகேஷ் குப்தா என்ற கலைஞர் பார்வதி வேடமிட்டு நடித்தார். மேடையில் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
'ஊருக்காக ஆடும் கலைஞர் தன்னை மறப்பான்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அவர் கீழே விழுந்து சரியும் வரை நடனமாடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அவரால் நடனமாட முடயவில்லை. அவருடன் சிவன் வேடம் அணிந்து நடனம் ஆடிக் கொண்டிருந்த மற்றொரு கலைஞர் விரைந்து வந்து, பார்வையாளர்களை உதவிக்கு அழைத்த போது அனைவரும் இது நடனத்தின் ஒரு பகுதி என்று நினைத்துள்ளனர். யாரும் மேடைக்கு வரவில்லை.
பின்னர் சக கலைஞர்கள் யோகேஷ் குப்தாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறி உள்ளனர். கடந்த சில மாதங்களாக இது போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
- சில இடங்களில் வீடுகள் லேசான அதிர்வு ஏற்பட்டது.
- ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. சில இடங்களில் வீடுகள் லேசான அதிர்வு ஏற்பட்டது. உடனடியாக மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர்.
கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
- அனந்தநாக் மாவட்டத்தில் இன்று நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்க்ரீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
- ஜம்முவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கெள்வதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார்.
- எனது கட்சி முழு மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் பூர்வீக குடியேற்ற உரிமையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும்.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார். 73 வயதான அவர் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறினார். அவர் ராகுலை கடுமையாக சாடி இருந்தார். குலாம்நபி ஆசாத்துக்கு ஆதராக காஷ்மீரில் பல காங்கிரஸ் தலைவர்கள் விலகினார்கள்.
காங்கிரசில் இருந்து விலகிய அவர் புதிய கட்சியை தொடங்கி பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. புதிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜம்முவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கெள்வதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார். அவருக்கு அங்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற குலாம்நபி ஆசாத் மக்களிடையே பேசியதாவது:-
காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் இப்போது பேருந்துகளில் சிறைக்குச் செல்கிறார்கள். டிஜிபி, கமிஷனர்களை தொடர்புக் கொண்டு பெயரை எழுதிக் கொடுத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குள் வெளியேறிவிடுவார்கள். அதனால்தான் காங்கிரஸால் வளர முடியவில்லை.
காங்கிரஸ் நம் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கணினியால் அல்ல. டுவிட்டரால் அல்ல. ஆனால் காங்கிரஸ் அணுகல் கணினிகள் மற்றும் ட்வீட்களில் மட்டுமே உள்ளது. அதனால்தான் காங்கிரஸை களத்தில் எங்கும் காண முடியவில்லை.
எனது கட்சி முழு மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் பூர்வீக குடியேற்ற உரிமையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும். எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது கட்சிக்கு இந்துஸ்தானி பெயரைச் சூட்டுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் வெளியிடுகிறார்.
- பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் குலாம்நபி ஆசாத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார்.
73 வயதான அவர் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறினார். அவர் ராகுலை கடுமையாக சாடி இருந்தார்.
குலாம்நபி ஆசாத்துக்கு ஆதராக காஷ்மீரில் பல காங்கிரஸ் தலைவர்கள் விலகினார்கள். காங்கிரசில் இருந்து விலகிய அவர் புதிய கட்சியை தொடங்கி பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.
புதிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சியை இன்று அறிவிக்கிறார். ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் வெளியிடுகிறார்.
இதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் குலாம்நபி ஆசாத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதல்-மந்திரி பதவியை குலாம்நபி ஆசாத் கைப்பற்றுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
- சிகிச்சை பலனின்றி சுப்ரக் உசேன் இறந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்தவன் சுப்ரக் உசேன். அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இவன் இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தான். இதற்காக தீவிரவாத அமைப்பினர் அவனுக்கு பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற சுப்ரன் உசேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் தனது கூட்டாளிகளுடன் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவன் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரக் உசேன் இறந்தான்.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் குலாம் நபி ஆசாத் விலகினார்.
- அவருக்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியைவிட்டு விலகி விட்டனர்.
எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகி வருகின்றனர்.
இந்நிலையில், குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் 20 பேர் இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
- ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.
- சோபோரில் பாதுகாப்புப் படை நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.
விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
- காயமடைந்தவர்கள் கிஷ்த்வார் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படும் என துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது. பண்டா பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ்விபத்தில் காரில் இருந்த சிறுமி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்குவதுடன் சிகிச்சைக்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று மேலும் 3 தலைவர்கள் விலகினர்.
- முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட ஜம்மு- காஷ்மீர் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியைவிட்டு விலகி விட்டனர்.
எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.
தொடர்ந்து, குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக கட்சியில் இருந்து நேற்று மேலும் 3 தலைவர்கள் விலகினர். இந்நிலையில், குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று மேலும் 64 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில், முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட ஜம்மு- காஷ்மீர் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.






