என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- அறிவிக்கப்பட்ட, தப்பியோடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சொத்துக்கள் முடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ளனர். பெரும்பாலான பயங்கரவாதிகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பயங்கரவாதிகளுக்கு சிலர் அடைக்கலம் கொடுக்கின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் பட்டியலை ஜம்மு-காஷ்மீர் போலீசார் சேகரித்து வந்தனர். கடந்த 1990-ல் இருந்து இந்த பட்டியலை எடுத்து வைத்துள்ளனர். தற்போது, அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளி, தப்பியோடிய குற்றவாளி என அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறுகையில் ''இந்தியாவுக்கு துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்னர். அவர்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அங்கிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிட முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.
டோடா மாவட்டத்தில் இதற்கான பணி தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலம் புகுந்துள்ள 16 பேர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.'' என்றார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள். இவர்களுடைய சொத்துக்கள் வருவாய்த்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை விற்கவோ, மாற்றவோ முடியாது.
மேலும், வேண்டுமென்றே பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்தவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அப்பாவி மக்கள் மிரட்டப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
''ஜம்மு-காஷ்மீரின் சோபார் பகுதியில் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள், அசம்பாவித செயல்களுக்கு துணை போகமாட்டார்கள் என நம்புகிறேன். போலீஸ் மற்றும் பாதுகாப்புப்படையால் மீதமுள்ள வேலைகளை சிறப்பாக முடியும். புகலிடம் கொடுக்காதீர்கள். பல சகாப்தமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதம் காரணமாக பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்'' என துணைநிலை ஆளுநர் சின்ஹா தெரிவித்துள்ளார்.
1990-ல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எல்லைத்தாண்டி, ஆயுத பயிற்சி பெற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்றனர். பெரும்பாலானோர் பயங்கரவாத செயல்களுடன் காஷ்மீர் வந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆயிரம் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2010-ல் ஜம்மு-காஷ்மீர் அரசு, சரணடைந்தால் மறுவாழ்வுக்கு உதவி செய்யப்படும் என அறிவித்தது. 300 பேர் குடும்பத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியா வந்தனர். ஆனால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கினர்.
- பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார்.
- இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பி ஓடி பல ஆண்டுகளாக தேடப்பட்டு வருபவர்களை கைது செய்யும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தோடா மாவட்டத்தில் ஆதில் பரூக் பரிதி, ஜாவேத் என்ற முகமது இக்பால், நிஷார் அகமது என்ற முஜாகித் உசேன், தாரிக் உசேன், இஷ்தியாக் அகமது, அஜாஸ்அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.
இவர்களில் பரிதி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணிபுரிந்துள்ளார். இஷ்பாக் தோடா நீதிமன்ற வளாகத்தில் எழுத்தராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் ஜம்முவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகை
- சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் பெண்கள் ராக்கி கயிறு கட்டுவது முக்கிய நிகழ்ச்சி
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இந்திய எல்லையில், ஆக்னூர் செக்டாரில் பாதுகாப்புப் பணியில ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் ராக்கி கயிறு கட்டினர்.
ரக்சா பந்தன் என்பது ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் (ராக்கி கயிறு) கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.
- ராகுல் காந்தி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஜம்மு-காஷ்மீரில் உள்ளார்
- கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற காட்சித் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சென்றுள்ளார். காஷ்மீர் சென்ற அவர், ஸ்ரீநகரில் உள்ள நைஜீன் ஏரியில் படகு சவாரி செய்தார்.
ஏற்கனவே இரண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள நிலையில், இன்று சோனியா காந்தி சென்றுள்ளார். இது ஒரு குடும்ப சுற்றுப் பயணம். கட்சித் தலைவர்களை சந்திக்கமாட்டார்கள். கட்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி கடந்த 2-ந்தேதி லடாக் சென்றிருந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ராகுல் காந்தியின் முதல் பயணம் இதுவாகும். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டுள்ளார்.
- பரிகம் கிராமத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
- பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
ஜம்மு:
காஷ்மீர் மாநிலம் புல்வா மா மாவட்டத்தில் அடர்ந்த வனபகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் லாரோவ்-பரிகம் சாலையில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது பரிகம் கிராமத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பாதுகாப்பு படையினர் சரண் அடைய எச்சரித்தனர்.
ஆனால் தீவிரவாதிகள் அதை ஏற்க மறுத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இன்று காலை துப்பாக்கி சண்டை ஓய்ந்தது. அதன் பிறகு பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதி என்று தெரியவந்தது. இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
- இந்திய நிலத்தில் ஒரு அங்குலம்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுவது உண்மையில்லை.
- இந்திய ஒற்றுமையை நடைபயணத்தின்போது நான் லடாக் வர திட்டமிட்டு இருந்தேன்.
லடாக்:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, "அவரது பிறந்தநாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது அஞ்சலி" என்று குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் வீர்பூமி பகுதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி லடாக்கில் இருக்கிறார். அவர் பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் ராகுல்காந்தி பேட்டி அளித்தபோது, இந்திய நிலத்தில் ஒரு அங்குலம்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுவது உண்மையில்லை என்று குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
லடாக் மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தில் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் அங்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
தங்களது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து இங்குள்ள உள்ளூர்வாசிகள் கவலைப்படுகிறார்கள். தங்களது மேய்ச்சல் நிலத்தை சீனப்படையினர் அபகரித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஒரு அங்குலம் நிலத்தைகூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். அவர் சொல்வதில் உண்மையில்லை. இங்கே நீங்கள் யாரிடமும் இதை கேட்கலாம். நான் சிறுவனாக இருந்தபோது தந்தையுடன் பாங்காங் டிசோ பகுதிக்கு வந்து இருக்கிறேன். இது பூமியின் மிக அழகான இடம் என்று அவர் என்னிடம் கூறினார்.
இந்திய ஒற்றுமையை நடைபயணத்தின்போது நான் லடாக் வர திட்டமிட்டு இருந்தேன். ஆனால் சில காரணங்களால் பயணத்தை நிறுத்தி வைக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் நான் பின்னர் இங்கு வந்து தங்கலாம் என்று நினைத்தேன். நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் கார்கிலுக்கும் நான் செல்வேன்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.
- லடாக்கில் நேற்று இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
- பேங்காங் ஏரியில் நாளை நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லே மற்றும் லடாக் பகுதிக்கு சென்றுள்ளார்.
லேவில் இருந்து கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் சோ ஏரிக்கு ராகுல் காந்தி பைக் ரைடு சென்றார். அதன் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன், " என் தந்தை கூறியதுபோல், பேங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் உலகின் மிக அழகமான இடங்களில் இதுவும் ஒன்று" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்டு 20ம் தேதி (நாளை) பேங்காங் ஏரியில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
லடாக்கில் நேற்று இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பின்னர் மாவட்டத்தில் கால்பந்து போட்டியிலும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர்.
- 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்?
இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர், இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்கள் தான் என்று குலாம் நபி ஆசாத் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான காஷ்மீர் பண்டிதர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதை பார்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
அரசியல் லாபத்திற்காக மதத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருக்கும் குலாம் நபி ஆசாத், "சில பா.ஜ.க. தலைவர் முஸ்லீம்கள் வெளியில் இருந்து வந்துள்ளனர் என்று தெரிவித்தார். யாரும் வெளியில் இருந்து உள்ளே வரவில்லை. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இஸ்லாம் வந்துள்ளது. இந்து மதம் தான் மிகவும் பழைமை வாய்ந்தது. முஸ்லீம்களில் 10 முதல் 20 பேர் தான் வெளியில் இருந்து வந்துள்ளனர், சிலர் முகலாய படையில் இருந்தவர்கள்," என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
"மற்ற முஸ்லீம்கள் அனைவரும் இந்துவாக இருந்து, முஸ்லீமாக மாறியுள்ளனர். இதற்கான எடுத்துக்காட்டை காஷ்மீரில் காணலாம். 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் யார் முஸ்லீம்களாக இருந்தனர்? அனைவரும் காஷ்மீரி பண்டிட்களாகவே இருந்தனர். அவர்கள் இஸ்லாமிற்கு மாறிவிட்டனர். அவர்கள் பிறக்கும் போதே, இந்த மதத்தில் தான் இருந்தனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என தகவல்.
- இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு ரிக்டர் அளவுகளில் 12 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தோடா மாவட்டத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்பட பல்வேறு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
- ராஜ்நாத் சிங் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றியும், தேசியக் கொடியுடன் பேரணி நடத்தியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர தினவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தபோதிலும், ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் பொதுமக்கள் தேசியக் கொடி ஏந்தியபடி சுதந்திர தினவிழாவை கொண்டாடினர். பொதுவாக காஷ்மீரில் பாதுகாப்பு காரணமாக முழு அடைப்பு போன்ற நிகழ்வு இருக்கும். தற்போது அதுபோன்ற இல்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று பயங்கரவாதியின் சகோதரர் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி வைத்திருந்தார். அவர், சுதந்திர தினவிழாயொட்டி காஷ்மீரில் இரண்டு மூன்று நாட்கள் கடைகள் அடைக்கப்பட வலியுறுத்தப்படும். தற்போது அந்த நிலை இல்லை. காஷ்மீர் முன்னேற்றத்தை கண்டுள்ளது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாடினார்.
- MiG-21 விமானப்படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது
- தற்போது அதற்குப் பதிலாக MiG-29 போர் விமானப்படை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், இந்தியா MiG-29 போர் விமானப்படையை நிலைநிறுத்தியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதற்குமுன் MiG-21 விமானப்படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட MiG-29 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
''காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதி ஸ்ரீநகர். தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயர்வான பகுதியில் உள்ளது. எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் அதிக எடை மற்றும் உந்துதல் விகிதம், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்றவைக்கு மூலோபாய ரீதியாக சிறந்தது. MiG-29 விமானப்படை இவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் என படைப்பிரிவு தலைவர் விபுல் சர்மா தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு பாலகோட்டில் பாகிஸ்தானின் F-16 விமானத்தை தாக்கியழித்த MiG-21s விமானத்தைவிட MiG-29 பல நன்மைகள் ஊள்ளது. வானில் நிண்ட தூரம் சென்று தாக்குதல், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்குதல் வல்லமை கொண்டது.
சண்டையின்போது எதிர் விமானங்களின் செயல்பாட்டை செயலழிக்க வைக்கும் தன்மை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020 கல்வான் தாக்குதலுக்குப் பிறகு லடாக் பகுதியில் MiG-29s விமானப்படை நிலைநிறுத்தப்பட்டது.
- அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது.
- 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது.
ஸ்ரீநகர்:
அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது. 62 நாள் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ந்தேதி நிறைவடைகிறது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை அமர்நாத் யாத்திரை நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.






