என் மலர்tooltip icon

    குஜராத்

    • சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
    • ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் 3 முதல்வர்கள் நீதிமன்றம் வந்திருந்தனர்

    சூரத்:

    அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 23-ந் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    இந்நிலையில், அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவுடன், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார்.

    ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சுக்விந்தர் சிங் சுகு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

    ராகுல் காந்தியின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. அதுவரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டது. அடுத்த விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை ரத்து செய்யாவிட்டால், அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவு தொடரும். அத்துடன், அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 178 ரன்கள் குவித்தது.
    • ருதுராஜ் கெயிக்வாட் 4 பவுண்டரி, 9 சிக்சர் உள்பட 92 ரன்கள் எடுத்தார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 23 ரன்னும், ஷிவம் துபே 19 ரன்னும், டோனி 7 பந்துகளில் 14 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. விரித்திமான் சகா 25 ரன்னும், சாய் சுதர்சன் 22 ரன்னும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். அவர் 36 பந்தில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 4 ரன்னும், 18வது ஓவரில் 7 ரன்னும் எடுத்தனர். விஜய் சங்கர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் ரஷீத் கான் சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.

    இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    சென்னை அணி சார்பில் ஹங்கர்சேகர் 3 விக்கெட் வீழ்த்தினார். ரவீந்திர் ஜடேஜா, தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • பந்தை பிடித்து உள்ளே வீசிய அவர் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    இப்போட்டியின் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சிக்சருக்கு சென்ற பந்தை கேட்க் பிடிக்க முயன்றபோது பலத்த காயமடைந்தார். பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்து பந்தை பிடித்து உள்ளே வீசிய அவர் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. வலியால் துடித்த அவருக்கு மருத்துவக் குழுவினர் வந்து உதவி செய்தனர். பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். 

    • டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தேவன் கான்வே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 23 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் மொயீன் அலி 23 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்கள், அம்பதி ராயுடு 12 ரன்கள் சேர்த்தனர்.

    தொடர்ந்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்த கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ஆக இருந்தது. அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 19 ரன்னில் வெளியேறினார்.

    கேப்டன் டோனி

    கேப்டன் டோனி

     

    அதன்பின் கேப்டன் டோனியுடன் சான்ட்னர் இணைய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கேப்டன் டோனி 7 பந்துகளில் 14 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்குகிறது.

    • தொடக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
    • துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள், லேசர் ஷோ, வாண வேடிக்கைகளுடன் இன்று தொடங்கியது. தொடக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் கண்கவர் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

    துவக்க விழா நிறைவடைந்ததும் போட்டி தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

    சிஎஸ்கே அணி: எம்.எஸ்.டோனி (கேப்டன்), தேவன் காவேன், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மிட்ச் சான்ட்னர், தீபக் சாகர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (அறிமுகம்).

    குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ஷுப்மன் கில், விர்திமான் சகா, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ் லிட்டில், அல்சாரி ஜோசப், யாஷ் தயாள்.

    • நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.
    • துவக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.  துவக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிகளை மந்த்ரா பேடி தொகுத்து வழங்க, பாடகல் அரிஜித் சிங்கின் அசத்தலான பாடலுடன் விழா தொடங்கியது. நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் கண்கவர் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

    துவக்க விழா நிறைவடைந்ததும் போட்டி தொடங்குகிறது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.

    இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. 

    • தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விவரங்களை கேட்டு கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.
    • மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

    அகமதாபாத்:

    பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக  சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு தகவல் ஆணைத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், விவரம் கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கெஜ்ரிவால் கேட்ட விவரங்களை வழங்கும்படி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி ரத்து செய்து இன்று உத்தரவிட்டார். அத்துடன், பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    • 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
    • தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று போட்டி தொடங்கும் முன் பிரமாண்டமான ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது

    இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானம், வெளியூர் என போட்டி முறையில் ஆடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பால் கடந்த 3 ஆண்டாக பொதுவான இடத்தில் போட்டி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • .பிரதமர் மோடியை மறைமுகமாக அவதூறு செய்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டம் மற்றும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ராகுல் காந்திக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவு ஆகும்.

    சூரத்:

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி பேசினார்.

    அப்போது அவர் "எல்லா திருடர்களும் மோடி என்ற ஒரே குடும்ப பெயரை ஏன் வைத்து உள்ளனர்?" என்று பேசியதாக கூறப்படுகிறது.

    தொழில் அதிபர்களான நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இதை பேசினார். பிரதமர் மோடியை மறைமுகமாக அவதூறு செய்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது.

    இதை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது குஜராத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

    முன்னாள் குஜராத் மந்திரியும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான புர்ணேஷ் மோடி இது தொடர்பாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுப்படுத்திவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 (அவதூறு தொடர்பானது) ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரத் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

    இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வந்த நிலையில் இறுதிகட்ட விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது.

    இந்த நிலையில் மோடி பெயர் குறித்து அவதூறாக ராகுல் காந்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று (23-ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ராகுல் காந்தி குஜராத் மாநிலம் சூரத் சென்றார். தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் ஆஜரானார். மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் உள்ளிட்ட தலைவர்கள் கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் குவிந்து இருந்தனர்.

    சூரத் நகர் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அவதூறு கிரிமினல் வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்திய தண்டனை சட்டம் 499-வது பிரிவு (அவதூறு) 500-வது பிரிவு (தண்டனைக்குரிய அவதூறு) ஆகியவற்றின் கீழ் அவர் குற்றம் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எச்.எச்.வர்மா அறிவித்தார்.

    மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்குகிறோம் என்றும், 30 தினங்களுக்குள் அவர் அப்பீல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பை தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பை கேட்டதும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டம் மற்றும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ராகுல் காந்திக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவு ஆகும்.

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பு கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    • ஜீத் அதானி பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் அப்ளைய்டு சயின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார்.
    • நிச்சயதார்த்தத்தின் போது ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

    அகமதாபாத்:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத்அதானி.

    இவருக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின்ஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 12-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று உள்ளது.

    இதில் இரு குடும்பத்தினரின் உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர்.

    நிச்சயதார்த்தத்தின் போது ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் திவா ஜெய்மின்ஷா எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா அணிந்திருந்தார். ஜீத்அதானி வெள்ளை நிற குர்தாவில் அசத்தலாக காட்சி அளித்தார்.

    ஜீத் அதானி பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் அப்ளைய்டு சயின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதானி குழும பணியில் சேர்ந்து தற்போது அதானி குழுமத்தில் நிதி பிரிவின் துணைத்தலைவராக உள்ளார்.

    அதானி ஏர்போர்ட்ஸ் வணிகத்தையும், அதானி டிஜிட்டல் லேப் இணைந்து அதானி குழும வணிகங்களின் அனைத்து வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில் ஒரு செயலி உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஜீத் அதானி தலைமை தாங்குகிறார்.

    • பெண்ணின் மரணத்திற்கான சரியான காரணத்தை மறுஆய்வுக் குழு தீர்மானிக்கும் என்றும் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • குஜராத்தில் இந்த ஆண்டு இதுவரை பருவகால இன்ஃப்ளூயன்சா துணை வகை எச்3என்2 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3ஆக பதிவு.

    குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெண்ணின் மரணத்திற்கான சரியான காரணத்தை மறுஆய்வுக் குழு தீர்மானிக்கும் என்றும் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அந்த பெண் கடந்த 11ம் தேதி அன்று காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் சர் சாயாஜிராவ் ஜெனரல் (எஸ்எஸ்ஜி) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் மார்ச் 13ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவ அதிகாரி டி.கே. ஹெலயா கூறுகையில், " பெண்ணின் அனைத்து மாதிரிகளையும் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். பெண்ணின் இறப்புக்கான காரணத்தை ஆய்வுக் குழு தீர்மானிக்கும்" என்று ஆர்எம்ஓ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    குஜராத்தில் இந்த ஆண்டு இதுவரை பருவகால இன்ஃப்ளூயன்சா துணை வகை எச்3என்2 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3ஆக பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தெரிவித்திருந்தார்.

    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார்.
    • ஸ்மித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் மரியாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் சிட்னி விரைந்தார். இதனால் அவர் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். இதற்கிடையே கம்மின்சின் தாயார் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.

    அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.

    இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் வருகிற 17-ம் தேதியும், 2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் 22-ம் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டீவன் சுமித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:

    டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா

    ×