என் மலர்tooltip icon

    குஜராத்

    • டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
    • மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் விர்திமான் சஹா 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்களிலும், விஜய் சங்கர் 19 ரன்னிலும் வெளியேறினர்.

    அதன்பின், டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அபினவ் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மில்லர் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. ராகுல் தெவாட்டியா 5 பந்துகளில் 20 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    டேவிட் மில்லர்
    டேவிட் மில்லர்

    மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார். அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டாப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • ஐபிஎல் போட்டியில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 6 புள்ளிகளுடன் உள்ளன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி, இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் களமிறங்குகின்றன.

    இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்ன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 6 புள்ளிகளுடன் உள்ளன.

    இந்நிலையில், இன்றைய 7வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே பலப்பரீட்சை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • வழக்கு விசாரணை 2010-ம் ஆண்டு தொடங்கி, 13 ஆண்டுகள் நடந்ததும், சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப்பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ந்தேதியன்று நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கரசேவகர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர்.

    அதற்கு மறுநாளில், இந்த கொடிய சம்பவத்தைக் கண்டித்து அங்கு முழு அடைப்பு நடந்தது. அப்போது அகமதாபாத்தில் இனக்கலவரங்கள் மூண்டன. அங்கு, நரோடா காம் பகுதியில் வெடித்த கலவரத்தின்போது, வீடுகளுக்கு தீ வைத்ததில் முஸ்லிம் சமூகத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 18 பேர் வழக்கு விசாரணையின்போது மரணம் அடைந்தனர். ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    முன்னாள் பா.ஜ.க. பெண் மந்திரி மாயா கொத்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீதான வழக்கு அகமதாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் (சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குகள்) நடந்து வந்தது.

    இந்த வழக்கை முதலில் நீதிபதி எஸ்.எச்.வோரா விசாரித்தார். அவர் ஐகோர்ட்டு நீதிபதி ஆனதைத் தொடர்ந்து, ஜோத்ஸ்னா யாக்னிக், கே.கே.பட், பி.பி. தேசாய் ஆகிய 3 நீதிபதிகள் அடுத்தடுத்து விசாரித்த நிலையில் ஓய்வு பெற்றனர். அதைத் தொடர்ந்து நீதிபதி எம்.கே. தவே விசாரித்தார். அவர் இட மாற்றம் செய்யப்பட்டார்.

    கடைசியாக நீதிபதி எஸ்.கே. பாக்சி விசாரித்தார். எனவே இந்த வழக்கை மொத்தம் 6 நீதிபதிகள் விசாரித்துள்ளனர்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் 187 சாட்சிகள், கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரிக்கப்பட்டனர். இதேபோன்று, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் அப்போதைய பா.ஜ.க. மூத்த தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா உள்பட 57 சாட்சிகள் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டனர்.

    விசாரணை முடிந்த நிலையில், 20-ந் தேதி (நேற்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த வழக்கில் நேற்று நீதிபதி எஸ்.கே.பாக்சி தீர்ப்பு வழங்கினார்.

    அவர், முன்னாள் பா.ஜ.க. பெண் மந்திரி மாயா கொத்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானித்து, விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு விசாரணை 2010-ம் ஆண்டு தொடங்கி, 13 ஆண்டுகள் நடந்ததும், சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப்பிறகு தீர்ப்பு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 3-ந்தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார்.
    • ராகுல் காந்தியின் மனு மீது கடந்த 13-ந்தேதி விசாரணை நடைபெற்றது.

    சூரத்:

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    இந்நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல்காந்தி கடந்த 3-ந்தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார். அப்போது அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார்.

    அதன்பின்னர் ராகுல் காந்தியின் மனு மீது கடந்த 13-ந்தேதி விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்துவிட்டார். இதனால், ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் நீடிக்கிறது.

    அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரதான மனு மீது விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

    • ராகுல் மீண்டும் மக்களவை செல்ல வழிபிறக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.
    • இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

    அகமதாபாத் :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி?" என பேசியதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அவர் மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பு அளித்தார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு விதித்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்ததுடன், ஜாமீன் வழங்கியும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை அடுத்து ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் கடந்த 3-ந்தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார். அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார். அத்துடன் ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ந்தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

    அதன்படி 13-ந்தேதி விசாரணை நடைபெற்றது.

    அப்போது ராகுல் தரப்பு வக்கீல் கூறியதாவது:-

    ராகுல் வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை தேவையில்லை. விசாரணை கோர்ட்டின் குற்றத்தீர்ப்புக்கு தடை வழங்காவிட்டால், அது அவரது புகழுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விடும். அவருக்கு அதிகபட்ச தண்டனை விதித்திருப்பது சட்டத்துக்கு முரணானது. தேவையற்றது.

    ராகுல் குற்றவாளி என தீர்மானித்தது தவறானது, பொதுவான வக்கிரம். அவர் எம்.பி. என்ற அந்தஸ்தின் தாக்கத்தால் அவரை கோர்ட்டு கடுமையாக நடத்தி உள்ளது. எம்.பி. என்பதால் அவரது பதவியை பறிக்க ஏதுவாகத்தான் அவருக்கு அதிகட்ச தண்டனை விதிக்கப்பட்டது. ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்காமல், பதவி பறிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அவர் விடுதலை செய்யபட்டாலும் கூட, அதை ரத்து செய்ய முடியாது. இந்த தேர்தலால் அரசு கஜானாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும் ஏற்படும்.

    எனவே ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் மீது வழக்கு தொடுத்த புர்னேஷ் மோடி தரப்பில் வாதிடுகையில், "ராகுல் மீது பல்வேறு கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும் அவர் திரும்பத்திரும்ப அதே குற்றத்தை செய்து வருகிறார். அவர் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்ற விதத்தில் பேசி வருகிறார். இது மற்றவர்களை களங்கப்படுத்துவதுடன், உணர்வுகளையும் புண்படுத்துகிறது. எனவே அவர் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கூடாது" என கூறப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் மனு மீதான தீர்ப்பை 20-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

    எனவே இன்று (வியாழக்கிழமை) அந்தத் தீர்ப்பு வருகிறது. அப்போது அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி என சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா அளித்த தீர்ப்புக்கு தடை வந்தால், அது ராகுலின் எம்.பி. பதவி பறிப்பையும் நிறுத்தி வைக்கும், அவர் மீண்டும் மக்களவை செல்ல வழி பிறக்கும்.

    எனவே இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

    • குஜராத்தின் போதட் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட புறநகர் ரெயிலில் தீப்பிடித்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் போதட் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக தீயை தண்ணீர் கொண்டு அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.
    • 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

    ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 4 ரன்னில் வெளியேறினார்.

    சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட்டாகினர். பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அபினவ் மனோஹர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 27 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளின் அரை சதம் அடித்து 60 ரன்களின் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ஷிம்ரன் ஹெட்மெயர் அரை சதம் அடித்து 56 ரன்களின் அவுட்டானார். தேவ்தத் படிக்கல் 26 ரன்களும், துருவ் 18 ரன்களும், ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ரன்களும், ரியான் பராக் 5 ரன்களும், யாஷவி ஜெய்ஸ்வால் ஒரு ரன்கள் எடுத்தனர்.

    குஜராத் அணி சார்பில், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    • இன்று நடைபெறும் 2வது போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 4 ரன்னில் வெளியேறினார். சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட்டாகினர்.

    பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் மனோஹர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 27 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • அந்த நாளில், ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை வருமா என தெரிய வரும்.
    • தனது பேச்சுக்காக ராகுல் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.

    சூரத்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (வயது 52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலத் தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்குப் பின்னேயும் மோடி என வந்தது எப்படி?" என பேசியதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக ராகுல் மீது குஜராத்தில், சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், அந்த மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கடந்த மாதம் 23-ந்தேதி மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும், மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததுடன், ராகுலுக்கு ஜாமீன் வழங்கியும் அவர் உத்தரவிட்டார். இந்த தண்டனையைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில், ராகுல் எம்.பி. பதவி, அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம்ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 -ன்படி பறிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கடந்த 3-ந் தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார்.

    அங்கு அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார். மேலும் ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ந் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

    அந்த விசாரணை, சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி ஆர்.பி. மோகேரா முன்னிலையில் நேற்று நடந்தது. ராகுல் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.எஸ்.சீமா ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:-

    விசாரணை கோர்ட்டில், ராகுல் மீதான வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. மாஜிஸ்திரேட்டின் தீர்ப்பு விசித்திரமானது ஏனென்றால், விசாரணை கோர்ட்டு நீதிபதி பதிவில் உள்ள அனைத்தையும் தாறுமாறாக ஆதாரமாக எடுத்துக் கொண்டார்.

    அங்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. மொத்த வழக்குமே மின்னணு ஆதாரம் அடிப்படையிலானது. தேர்தலின்போது பேசிய பேச்சை 100 கி.மீ.க்கு அப்பால் இருந்து ஒருவர் டி.வி. செய்தியில் கேட்டு வழக்கு போட்டுள்ளார். இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை தேவை இல்லை.

    சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது, இந்த வழக்கில் வழக்குதாரரால் தவறாக இணைக்கப்பட்டுள்ளது.

    எனவே ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதிட்டார்.

    ராகுல் மீது வழக்கு போட்ட புர்னேஷ் மோடி தரப்பில் வக்கீல் ஹர்சித் டோலியா ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:-

    ராகுல் தனது பேச்சின்மூலமாக பெயரின் பின்பகுதியில் மோடி என வருகிற அனைவரையும் இழிவுபடுத்த முயற்சித்ததால்தான் இந்த வழக்குதாரர் கோபம் அடைந்தார். இந்தப் பேச்சை அவர் பேசியபோது, அவர் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக இருந்தார். அவரது பேச்சு நாட்டு மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் தனது பேச்சை பரபரப்பாக்கவும் முயற்சித்தார்.

    அந்தப் பேச்சில் ராகுல், பிரதமர் நரேந்திர மோடி பற்றி பேசினார். ஆனால் அவர் அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், அதைத் தாண்டிச் சென்றார். எல்லா திருடர்களும் பெயரின் பின்னால் ஏன் மோடி என வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என கேட்டார். அந்தப் பேச்சின் இந்தப் பகுதிதான் வழக்குதாரரை புண்படுத்திவிட்டது. எனவேதான் இந்த வழக்கு. தனது பேச்சுக்காக ராகுல் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.

    இதே போன்று அவர் பல அவதூறு வழக்குகளை சந்தித்து வருகிறார். ரபேல் வழக்கில் ராகுல். சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும், தொடர்ந்து அவதூறாகப் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    சம்பவ இடம் ஒன்று, வழக்கு போட்ட இடம் ஒன்று என்று ராகுல் காந்தியின் வக்கீல் சுட்டிக்காட்டியதற்கு, புர்னேஷ் மோடியின் வக்கீல் பதில் அளிக்கையில், "வழக்கு விசாரணையின் போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இப்போது பிரச்சினை செய்கிறார்கள்" என குறிப்பிட்டார்.

    இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, இந்த மனு மீதான தீர்ப்பை 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    எனவே அந்த நாளில், ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை வருமா என தெரிய வரும். அப்படி தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி ரத்தும் நிறுத்தப்படும், அவர் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • யானை தந்தம், தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் யானை தந்தத்தை விற்று வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    அந்த வாடிக்கையாளரிடம் கும்பலை சேர்ந்த ஒருவன், தன்னிடம் 14 கிலோ எடையுள்ள யானை தந்தம் இருப்பதை உறுதி செய்தான். அதை ரூ.35 லட்சத்துக்கு விற்க ஒப்புக்கொண்டான். இதைத்தொடர்ந்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    அவன் போலீசாரிடம், தான் 1999-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாகவும், சந்தனக்கடத்தல் வீரப்பன் உறவினர்களை தனக்கு நன்கு தெரியும் என்றும், இன்னும் நிறைய யானை தந்தங்களை தன்னால் வரவழைக்க முடியும் என்றும் தெரிவித்தான்.

    அவன் அளித்த தகவலின்பேரில், கும்பலை சேர்ந்த மற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். யானை தந்தம், தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய குஜராத் விஜய்சங்கர், சாய் சுதர்சன் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய கொல்கத்தா 207 ரன்கள் மட்டுமே திரில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார்.

    கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஜெகதீசன் 6 ரன்னும், குர்பாஸ் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    3வது ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 45 ரன்னில் அவுட்டானார்.

    வெங்கடேஷ் அய்யர் 40 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    17-வது ஓவரை வீசிய ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆண்ட்ரூ ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரை வெளியேற்றினார்.

    ஆனால், கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அணியை திரில் வெற்றிபெறச் செய்தார் ரிங்கு சிங்.

    இறுதியில், கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
    • முதலில் ஆடிய குஜராத் அணி 204 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 17 ரன்னில் வெளியேறினார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார். அபினவ் மனோகர் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடுகிறது.

    ×