என் மலர்
குஜராத்
- பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக சென்றார்.
- நகர்ப்புற வளர்ச்சி துறை, குடிநீர் வடிகால் வாரிய துறை, சாலை மேம்பாட்டு துறை சார்பில் ரூ. 2,450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தி நகரில் நடந்த விழாவில் ரூ. 4 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் மேற்கொள்ள இருக்கிற பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். மேலும் அங்கு நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர்ப்புற வளர்ச்சி துறை,குடிநீர் வடிகால் வாரிய துறை , சாலை மேம்பாட்டு துறை சார்பில் ரூ. 2,450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக 19 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளுக்கான சாவிகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அகமதாபாத்தில் நடந்த அகில இந்திய கல்வி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம்.
- வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன்.
காந்திநகர்:
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மாணவர்களுக்கு முன்பு புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதும் அந்த நிலை மாறும். குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம். புதிய கல்விக்கொள்கையில் அதற்கான அம்சங்கள் இருக்கிறது.
என் வாழ்நாளில் நான் ஆசிரியராக இருந்ததில்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலக தலைவர்களை நான் சந்திக்கும்போது அவர்களில் சிலர், அவர்களின் ஆசிரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று செல்கிறார்.
- சுமார் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
அகமதாபாத்:
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று செல்கிறார். குஜராத்தின் காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று காலை 10.30 மணிக்கு காந்தி நகரில் நடைபெறும் அகில இந்திய கல்வி சங்க மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதன்பின், காந்தி நகரில் மதியம் 12 மணிக்கு ரூ.4,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி சாவியை வழங்குவார்.
- 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.
- குஜராத் மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு 9,268 பெண்களும், 2020-ம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய் உள்ளனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.
இந்தத் தகவல்கள், என்.சி.ஆர்.பி. என்று சொல்லப்படக்கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவை ஆகும்.
அந்த மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினருமான சுதிர் சின்கா கூறும்போது, "காணாமல் போன பெண்களைப் பொறுத்தமட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதையும் நான் கவனித்துள்ளேன்" என கூறி உள்ளார்.
- முதலில் ஆடிய குஜராத் 227 ரன்களை குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன்களை குவித்தது. ஷுப்மன் கில் 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 81 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி கைல் மேயர்ஸ், டி காக் அதிரடியாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது கைல் மேயர்ஸ் 48 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
டி காக் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 21 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
குஜராத் சார்பில் மோகித் சர்மா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 227 ரன்களை குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரரனா விரித்திமான் சகா சூறாவளியாய் சுழற்றி அடித்தார்.
சிக்சர். பவுண்டரிகளாக விளாசினார். மற்றொரு வீரர் ஷுப்மன் கில்லும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கி 14 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன்களை எடுத்தது. ஷுப்மன் கில் 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.
- மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
- கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஆய்வகத்தில் இருந்து மாணவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் வதஸ்மாவில் உள்ள மருந்தகக் கல்லூரியில் படித்து வரும் முன்னாள் காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கல்லூரி வளாகத்தில் மறைத்து வைத்துவிட்டு தப்பிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும், கொலையுண்ட பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண் மற்றொரு ஆண் நண்பருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தனது முன்னாள் காதலியான மாணவியை கொலை செய்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி, நோட்புக் கொடுப்பதாக கூறி முன்னாள் காதலியை கல்லூரி வளாகத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் மாணவனை கைது செய்தனர். மேலும், அதே கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஆய்வகத்தில் இருந்து மாணவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.
+3
- அமான் கான் 44 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் அடித்தார்.
- குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் உள்ளூர் அணியான குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
முகமது ஷமியின் வேகப்பந்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. துவக்க வீரர் பில் சால்ட், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து வார்னர் 2 ரன், ரிலி ரூசோ 8 ரன், மணீஷ் பாண்டே ஒரு ரன், பிரியம் கார்க் 10 ரன்னில் அவுட் ஆகினர். 23 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.
நெருக்கடியான சூழ்நிலையில், அக்சர் பட்டேல் 27 ரன்களும், அதிரடியாக ஆடிய அமான் ஹக்கிம் கான் 51 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிப்பல் பட்டேல் 23 ரன்கள் விளாசினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மோகித் சர்மா 2 விக்கெட், ரஷித் கான் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.
- மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
- ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்த வைக்க மறுப்பு தெரிவித்ததுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி விசாரணையில் இருந்து விலகியதால், இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் பிரச்சக் விசாரித்தார். இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அதேசமயம், ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. தனது மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும்வரை தண்டனையை நிறுத்தி வைக்கும்படி ராகுல் காந்தி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் கோடை விடுமுறைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.
முன்னதாக, ராகுல் காந்திக்கு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடியின் வழக்கறிஞர் வாதாடும்போது, நாட்டின் பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் களவாணி என முத்திரை குத்துவது எதுமாதிரியான மொழி? என கேள்வி எழுப்பினார்.
- மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி பதவி விலகினார்.
- 2 ஆண்டு சிறை தண்டனையை ஒருநாள் குறைவாக வழங்கி இருந்தால்கூட எம்.பி. பதவியை இழக்க நேரிட்டு இருக்காது.
அகமதாபாத்:
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது மோடி குடும்ப பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதைதொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த மார்ச் 23-ந்தேதி அவதூறு வழக்கில் தொட ரப்பட்டது. இந்த வழக்கு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு அவகாசம் கொடுத்து ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவரது மக்களவை எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல்காந்தி சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சூரத் செசன்ஸ் கோர்ட்டு கடந்த 20-ந்தேதி ராகுல்காந்தியின் மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி அவர் முறையிட்டார்.
இந்த மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி பதவி விலகினார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஹேமந்த் பிரச்சக் இந்த மனுவை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
ராகுல்காந்தியின் மேல் முறையீடு மனு விசாரணை குஜராத் ஐகோர்ட்டில் இன்று தொடங்கியது.
ராகுல்காந்தி தரப்பில் மூத்த வக்கீல் சிங்கி இந்த வழக்கில் ஆஜராகி வாதாடியதாவது:-
2 ஆண்டு சிறை தண்டனையை ஒருநாள் குறைவாக வழங்கி இருந்தால்கூட எம்.பி. பதவியை இழக்க நேரிட்டு இருக்காது.
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அவதூறு வழக்கில் அதிக பட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தண்டனையை நிறுத்தி வைக்ககோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது.
- வேறு நீதிபதியை நியமிக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது.
அகமதாபாத்:
மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து ராகுல் காந்தி நேற்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி கீதா கோபி விசாரிப்பதாக இருந்தது.
அதன்படி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பி.எஸ்.சாப்பனேரி இன்று ஆஜராகினார். அப்போது வழக்கில் இருந்து விலகியதாக நீதிபதி கீதா கோபி கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதற்காக தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பும்படி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். எனவே, வேறு நீதிபதியை நியமிக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது.
குற்றவியல் அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டு தண்டனை ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டதால், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- முதலில் ஆடிய குஜராத் 207 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்தார். அபினவ் மனோகர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் விளாசினார்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார். அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டாப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அந்த அணியில் வதேரா 21 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். கேமரூன் கிரீன் 33 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் 23 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்று, புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.






