search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biporjoy"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று மாலை கட்ச் பகுதியில் கரையை கடக்கிறது
    • 130 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 74 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிட மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக குஜராத் நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை வடகிழக்கு நோக்கி நகர்ந்து சவுராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி- பாகிஸ்தானின் கராச்சி அருகில் உள்ள ஜக்காவ் துறைமுகம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதிதீவிர மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

    • குஜராத்தில் நாளைமறுதினம் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு
    • 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

    அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக நகர்ந்து வந்தது. இந்த நிலையில் அது தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் அடுத்தடுத்து மாறியது.

    வடகிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் 'பிபோர்ஜோய்' புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குஜராத்தின் ஜக்காவ் துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதிதீவிர புயல் கரையை கடக்கும்போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மணிக்கு 125 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி மராட்டியம், குஜராத் மாநிலங்களில் நேற்று முதல் மிக பலத்த மழையும், மிக பலத்த சூறாவளி காற்றும் வீசத் தொடங்கியுள்ளது.

    மும்பையில் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. அதில் 4 பேர் சிக்கினார்கள். ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இதற்கிடையே புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் குஜராத்தின் கட்ச், துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    புயல் காரணமாக குஜராத்தின் கட்ச் மாவட் டத்தில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. புயல் அபாயம் உள்ள இதர மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    6 மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று இன்று காலை வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும்போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே புயலை எதிர்கொள்வது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படை வீரர்கள் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். கடற்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 30 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கடற்கரையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். சுமார் 2 லட்சம் கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    'பிபோர்ஜோய்' புயல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதையடுத்து குஜராத்தை சேர்ந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, புருசோத்தம் ரூபலா, தர்சன் ஜர்டோஷ், மகேந்திர முன்ஞ்பாரா உள்பட 5 மத்திய மந்திரிகளை கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்பேரில் 5 மத்திய மந்தரிகளும் குஜராத் விரைகிறார்கள்.

    • வியாழக்கிழமை குஜராத் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்க இருக்கிறது
    • சூறாவளி காற்றுடன் பலத்தை மழை பெய்யும் என எச்சரிக்கை

    அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலான வலுவடைந்து குஜராத் மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்த புயலால் குஜராத் மாநில கடற்கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, கடற்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவது உள்ளிட்ட முக்கியம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் அதிதீவிர புயலான பிபோர்ஜோய் தற்போது தீவிர புயலாக வலுவிழந்தாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது இன்று அதிகாலை நிலவரப்படி போர்பந்தரில் இருந்து தென்மேற்கே 310 கி.மீட்டர் தொலைவிலும், தேவ்பூமி துவார்காவில் இருந்து தென்மேற்கே 320 கி.மீட்டர் தொலைவிலும், ஜக்காவ் துறைமுகத்தில் இருந்து தெற்கு, தென்மேற்கே 380 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது. நாளை மறுதினம் மாலை குஜராத்தில் உள்ள ஜாக்காவ் துறைமுகத்தை கடந்து செல்லும் எனத் தெரிவித்துள்ளது.

    பிபோர்ஜோய் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 8ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    அதன்படி வருகிற 8-ந் தேதி, அதாவது நாளை தென்மேற்கு பருவ மழை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் பிபோர்ஜோய் என்ற புயல் உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது மேலும் ஒருவாரம் தாமதமாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    ×