search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலை கைவிட்டதால் காதலியை கற்பழித்து சித்ரவதை செய்த வாலிபர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காதலை கைவிட்டதால் காதலியை கற்பழித்து சித்ரவதை செய்த வாலிபர்

    • கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
    • விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல்.

    நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் தனக்கு திருமணமானதை மறைத்து பழகினார். இந்த பழக்கம் காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான், நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலின் காதலிக்கு அவர் ஏற்கனவே திருமணமானவர் எனவும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதை அறிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீலுடன் இருந்த காதலை முறித்து கொண்டார். மேலும் அவரை சந்திக்கவும் மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நிகுஞ்ச் குமார் அம்ரித்பாய் பட்டீல் சம்பவத்தன்று, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியையும் வைத்தார். இதில் உடலில் எரிச்சல் ஏற்பட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி சூரத் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நிகுஞ்ச் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×