என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • விசாகப்பட்டினம் நீல கடற்கரையை சுற்றுலா பயணிகள் ரசிக்கும் விதமாக ஸ்கை சைக்கிள் திட்டம் கொண்டுவரப்படுகிது.
    • அந்தரத்தில் சைக்கிள் மூலம் காற்றில் பரந்தபடி ரசிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கைலாச கிரிமலை மற்றும் விசாகப்பட்டினம் நீல கடற்கரையை சுற்றுலா பயணிகள் ரசிக்கும் விதமாக ஸ்கை சைக்கிள் திட்டம் கொண்டுவரப்படுகிது.

    அந்தரத்தில் சைக்கிள் மூலம் காற்றில் பரந்தபடி ரசிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சில நாட்களாக ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டன. ஸ்கை சைக்கிள் திட்டத்தில் இயற்கை அழகை ரசிக்க விசாகப்பட்டின நகர மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.

    • பசுமை ஹைட்ரஜன் மையத்தில் என்.டி.பி.சி 20 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
    • 2 பெரிய திட்டங்கள் மூலம் 48 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று சட்டமன்றத்தில் தொழில் துறை சம்பந்தமாக விவாதம் நடந்தது.

    அப்போது முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில்:-

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 29-ந்தேதி விசாகப்பட்டினம் வருகிறார். விசாகப்பட்டினத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்காக ஏற்கனவே 1200 ஏக்கரை மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது.

    அந்த இடத்தில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை தொழில் பூங்கா அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார். அமோனியா மற்றும் பசுமை ஹைட்ரஜன் மையம் அமைக்கப்பட உள்ளது.

    பசுமை ஹைட்ரஜன் மையத்தில் என்.டி.பி.சி 20 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதன் மூலம் ஆந்திராவில் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்படும் என்றார்.

    இந்த 2 பெரிய திட்டங்கள் மூலம் 48 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு மாதம் ரூ 1500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
    • விவசாயிகள், வேலையில்லா இளைஞர், முதியோர் உதவி தொகைக்கான நிதி ஒடுக்கப்படவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் குறித்து முன்னாள் மந்திரி ரோஜா கூறியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்த திட்டங்களை நிறைவேற்றாததால் பெண்கள் இளைஞர்கள் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மாநிலத்தில் 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மாதம் ரூ 1500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி மாநிலத்தில் உள்ள 1 கோடியே 54 லட்சத்து 47 ஆயிரத்து 61 இணைப்புகளுக்கு ரூ.4115 கோடி ஒதுக்க வேண்டும்.


    விவசாயிகள், வேலையில்லா இளைஞர், முதியோர் உதவி தொகைக்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

    சூப்பர் 6 திட்டத்தில் அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்காக எத்தனை ஆயிரம் கோடி கொடுத்து இருக்கிறீர்கள் இதுபற்றி விமர்சனம் செய்தால் கைது நடவடிக்கை எடுப்பீர்களா?.

    அதனைக் கண்டு நாங்கள் பயப்படமாட்டோம். நான் உட்பட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், சமூக வலைதள ஆர்வலர்கள் உங்களுக்கு எதிராக கண்டிப்பாக பதிவிடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி:

    பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர், துணை முதல் மந்திரி பவன் கல்யாண் மற்றும் உள்துறை மந்திரி வாங்கலபுடி அனிதா ஆகியோரது படங்களை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்து வருகின்றனர்.

    கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திராபுரம் மோரம்புடியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் பத்மாவதி நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பொம்மூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவரை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை.
    • ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் அறிமுகம்.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பழைய கோவில்களை புதுப்பிக்கவும், இந்து அறநிலையத்துறை சார்பில் உள்ள மற்றும் கிராமப்புற கோவில்களில் தூபதீப நெய் வேத்தியம் சமர்ப்பிக்கவும், மதமாற்றம் நடைபெறக் கூடிய இடங்களில் புதிதாக கோவில்கள் கட்டுவதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

    இதற்கு நிதிதிரட்டும் வகையில் ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. பக்தர்கள் யாருடைய சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் நேரடியாக வி.ஐ.பி. டிக்கெட்டுகளைப் பெற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு பக்தருக்கு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்படுகிறது.

    இதற்காக ஆன்லைனில் நன்கொடை பெற்று வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்படுகிறது.

    நேரடியாக திருப்பதிக்கு வரும் பக்கர்களுக்கு திருமலையில் ஆப்லைனில் கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் இந்த டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அங்கு போதிய வசதி இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் கோகுலம் கெஸ்ட் ஹவுஸ் பின்புறத்தில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்கான புதிய கவுன்டரை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார்.

    பக்தர்களிடம் விவரம் பெற்று கொண்டு முதல் டிக்கெட் வழங்கினார். இதுகுறித்து வெங்கையா சவுத்திரி கூறுகையில்:-

    கடந்த காலங்க ளில் சிரமத்தை உணர்ந்து சிறப்பு கவுண்டர் அமைக்கப் பட்டுள்ளது. இனி பக்தர்கள் சிரமமின்றி ஒரு நிமிடத்தில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறலாம் என்றார்.

    திருப்பதி கோவில் நேற்று 66,441 பேர் சாமி தரிசனம் செய்தனர். 20,639 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    நேரடி இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • விசாகப்பட்டினத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் அதிகரித்து வந்தன.
    • போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.

    அண்மை காலங்களில் இளைஞர்கள் பலர் தங்களின் பைக்குகளில் உள்ள சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி வருகின்றனர். இதனால் ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன

    இதனையயடுத்து தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பிய 181 பைக் சைலன்சர்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    • அனில் குமாரை அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட வைத்தனர்.
    • போலீஸ் நிலையத்தில் கைதிக்கு ராஜ மரியாதை செய்ததாக இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    ஆந்திரா மாநிலம் ராஜ மகேந்திரவரத்தை சேர்ந்தவர் அனில் குமார். பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தார் மற்றும் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டார்.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் அனில் குமாரை கைது செய்து ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைத்தனர். கடந்த வாரம் வேறொரு வழக்கு சம்பந்தமாக போலீசார் அனில் குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்தனர். லாக்கப்பில் வைத்து விசாரணை நடத்த வேண்டிய அனில் குமாருக்கு அங்குள்ள மேஜையில் தலையணையுடன் கூடிய படுக்கையை ஏற்பாடு செய்தனர்.

    மேலும் அனில் குமாரை அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட வைத்தனர். அனில் குமார் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சத்தமாக போலீசாருக்கு உத்தரவிடும் காட்சிகளும் போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    போலீஸ் நிலையத்தில் கைதிக்கு ராஜ மரியாதை செய்ததாக இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஒரு வாரத்தில் இறுதி அறிக்கை வந்தவுடன் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் 7 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
    • பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் நடந்தது. பிரம்மோற்சவ விழா தோஷ நிவர்த்திக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் சாமிக்கு புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரமான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தமிழகத்திலிருந்து 5 டன் மலர்களும், கர்நாடகாவில் இருந்து 2 டன் மலர்களும், திருப்பதி தேவஸ்தான புஷ்பவனத்தில் இருந்து 2 டன் மலர்களும் கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து மதியம் 1 மணிக்கு சாமந்தி, சம்பங்கி, தாமரை துளசி, மருவம், தவனம்,வில்வம் உள்ளிட்ட 17 வகையான மலர்கள் 6 வகையான இலைகள் கொண்டு மாலை 5 மணி வரை 9 டன் மலர்கள் கொண்டு புஷ்ப யாகம் நடந்தது.

    அப்போது வேத பண்டிதர்கள் ரிக் வேதம், யஜூர் வேதம், கிருஷ்ணயஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், பாராயணம் உள்ளிட்ட வேத மந்திரங்களை ஓதினர்.

    திருப்பதியில் நேற்று 73,558 பேர் தரிசனம் செய்தனர். 32,675 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி னர். ரூ.3.79 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • உணவு இடைவேளைக்காக பஸ் டிரைவர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம், மண்டப்பேட்டையை சேர்ந்தவர் கீதா ரத்தினம். இவர் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை பையில் எடுத்துக்கொண்டு ஐதராபாத் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் ஏறினார்.

    30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. உணவு இடைவேளைக்காக பஸ் டிரைவர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தினார்.

    இதனை தொடர்ந்து நர்கெட் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் டீ குடிப்பதற்காக அங்குள்ள ஓட்டல் முன்பு பஸ்சை நிறுத்தனார் . கீதா ரத்தினம் தான் கொண்டு வந்த நகை பையை பஸ்சிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கினார்.

    திரும்பி வந்தபோது அவர் இருக்கையில் வைத்து விட்டு சென்ற நகை பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா ரத்தினம் உடனடியாக பஸ் டிரைவரிடம் தகவல் தெரிவித்தார்.

    பஸ் டிரைவர் பஸ்சை நேராக அப்துல்லாபூர் மெட் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். போலீசார் பஸ்சில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

    இருப்பினும் நகை பையை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

    • கடல் விமானத்தில் 14 பேர் பயணம் செய்யலாம்.
    • ஸ்ரீசைலம் மல்லன்னா கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கடல் விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விஜயவாடா-ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், மாநில விமான நிலைய மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த கடல் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.

    கிருஷ்ணா நதியில் பாதாள கங்கா படகு முனையத்தில் இருந்து கடல் விமான போக்குவரத்து தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தக் கடல் விமானத்தில் 14 பேர் பயணம் செய்யலாம். விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சாமி கோவிலில் இருந்து ஸ்ரீசைலம் மல்லன்னா கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கடல் விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



    • நெய் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • குண்டூர் சரக ஐ.ஜி சர்வஸ்ரேஷ், விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி கோபிநாத் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இது குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. சிபிஐ இயக்குனரின் மேற்பார்வையில் சிறப்பு குழு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. சி.பி.ஐ.யைச் சேர்ந்த 3 அதிகாரிகள்-ஐதராபாத் இணை இயக்குநர் வீரேஷ் பிரபு மற்றும் விசாகப்பட்டினம் சரக எஸ்.பி. ரம்பா முரளி மற்றும் 2 மாநில அதிகாரிகள், குண்டூர் சரக ஐ.ஜி சர்வஸ்ரேஷ் திரிபாதி மற்றும் விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி கோபிநாத் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பு கூடம் மற்றும் ஏ.ஆர்.டெய்ரி உணவுப் பொருட்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர்.

    லட்டு தயாரிப்பதற்கான நெய் டெண்டர் செயல்முறை, நெய் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவின் துணை அதிபராகும ஜேடி வான்ஸ்க்கு எனது இதயம் கணிந்த வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அவரது வெற்றியால ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட உஷா வான்ஸ் அமெரிக்காவின் 2-வது பெண்மணியாக உள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதனால் அவரது மனைவி உஷா வான்ஸ் அமெரிக்காவின் 2-வது பெண்மணியாக இருக்கிறார். அமெரிக்காவில் அதிபரின் மனைவி முதல் பெண்மணி என அழைக்கப்படுவார். துணை அதிபர் மனைவி 2-வது பெண்மணி என அழைக்கப்படுவார்.

    உஷா வான்ஸ் ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இதன்மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவின் 2-வது பெண்மணியாக இருப்பது இதுவே முதல்முறையாகும்.

    இந்த நிலையில் உஷா வான்ஸ்க்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சந்திரபாபு நாயுடு தனது வாழ்த்து செய்தியில் "அமெரிக்காவின் துணை அதிபராகும ஜேடி வான்ஸ்க்கு எனது இதயம் கணிந்த வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது வெற்றியால ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட உஷா வான்ஸ் அமெரிக்காவின் 2-வது பெண்மணியாக உள்ளார். இது உலகத்தில் உள்ள ஆந்திர சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம். ஆந்திராவுக்கு வருகை தருவதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்" இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது.

    1970-களில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவுக்கு உஷாவின் குடும்பம் குடிபெயர்ந்தது. சான்டியாகோவிலேயே பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப்பட்டமும் பெற்றுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கீழ் சட்ட வல்லுநராக பணியாற்றினார். கடந்த 2014-ம் ஆண்டில் குடியரசு கட்சியில் இணைந்த உஷா ஒரு விவாத நிகழ்ச்சியின்போது ஜே.டி.வான்ஸ்- ஐ சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே அதே ஆண்டில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    ×