என் மலர்
ஆந்திர பிரதேசம்
- வன உயிரியல் பூங்காவில் இருந்த 5 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தையை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
- சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்றது.
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை அருகே பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டு வைக்கப்பட்டது. 2 வாரங்களில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கியது.
கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.
வன உயிரியல் பூங்காவில் இருந்த 5 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தையை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனை முடிவில் 2 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என தெரிய வந்தது.
இதையடுத்து 2 சிறுத்தைகளை வன சரணாலயங்களில் விடப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதை வாகனங்களில் சென்ற பக்தர்கள் பார்த்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. இன்று அதிகாலை அலிபிரி நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.
கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
மேலும் பக்தர்கள் நடைபாதையில் பாதுகாப்பாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கையில் கம்புகளுடன் கோவிந்தா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் நடந்து சென்றனர்.
- சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இன்று காலை பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது. மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று ஏழுமலையான் கோவிலில் 62,745 பேர் சாமி தரிசனம் செய்தனர். 24,451 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 19 காத்திருப்பு அறைகள் நிரம்பியது. 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள்.
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள்.
ஸ்ரீ காளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன்கோவில் சார்பில் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணை கோவில்களான நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, கோவில் நிர்வாகி கே.வி.சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு, சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை வழங்கினார்கள்.
முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முறைப்படி பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலைமீது சுமந்து மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று நவசந்தி விநாயகர் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கூறுகையில், விநாயகர் சதுர்த்தி புனித தினத்தை யொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் முதன்மை கடவுளாக விளங்கும் கணபதிக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜைப் பொருட்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
- ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாணை ஒப்பிட முடியாது.
- பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை.
திருப்பதி:
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார்.
எங்கள் கட்சிக்கு 22 எம்.பிக்கள், 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
பவன் கல்யாண் போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வி அடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாண் ஒப்பிட முடியாது.
கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 88 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. ஜனசேனா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 120 பேர் டெபாசிட் இழந்தனர். முதலமைச்சரின் அந்தஸ்தை வைத்து பேச வேண்டும்.
பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை. பிறருக்காக வேலை செய்யும் ஒரு பேக்கேஜ் ஸ்டார்.
சந்திரபாபு நாயுடு ஜெயிலில் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு பெரிய பேக்கேஜை பெற்றுவிட்டார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் போருக்கு தயார் என பவன் கல்யாண் தெரிவித்து இருக்கிறார். போர்க்களத்தில் நுழையும் அளவுக்கு அவரிடம் அவ்வளவு இராணுவ வீரர்கள் இருக்கிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுத்தைகளை விஜயவாடா உயிரியல் பூங்கா மற்றும் வன சரணாலயத்தில் வனத்துறையினர்விட்டனர்.
- பக்தர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்து கொன்றது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினர் சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை அருகே இரும்பு கூண்டுகளை வைத்தனர். இதில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கின.
மேலும் 200 கேமராக்களை பொருத்தி சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கம்பு வழங்கப்பட்டது.
கூண்டில் சிக்கிய சிறுத்தைகளை வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் அடைத்தனர். சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை அறிய சிறுத்தைகளின் முடி ரத்தம் உள்ளிட்டவைகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 2 சிறுத்தைகளின் டி என் ஏ பரிசோதனை அறிக்கை வந்தது. அறிக்கையில் 2 சிறுத்தைகளும் சிறுமையை கொல்லவில்லை என தெரியவந்தது.
இதையடுத்து சிறுத்தைகளை விஜயவாடா உயிரியல் பூங்கா மற்றும் வன சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர்.
மற்ற சிறுத்தைகளின் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை விரைவில் வர உள்ளது. அதற்குப் பிறகு சிறுமியை கொன்ற சிறுத்தை எது என தெரியவரும்.
இந்நிலையில் நேற்று இரவு மலைப்பாதையின் 15-வது திருப்பத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனை வாகனங்களில் சென்ற பக்தர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
சேஷாசல வனப்பகுதியில் உள்ள ஒரு சில சிறுத்தைகள் திருப்பதி மலைபாதை அருகே வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
- திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.
திருப்பதி:
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வருவதால் நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரம் வரை நெரிசல் ஏற்படுகிறது.
இதனை தடுக்க திருப்பதி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.650 கோடி செலவில் ஸ்ரீனிவாச சேது என்ற பெயரில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஆட்சி மாறியதும் மறு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியது.
தற்போது ரூ.650 கோடி செலவில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. இதனை ஆந்திர முதல்- அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை திறந்து வைக்கிறார்.
நாளை முதல் பொதுமக்கள் மேம்பாலத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர். திருப்பதி பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த மேம்பாலம் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைஅடிவாரம் வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இதன் மூலம் பக்தர்கள் எளிதில் கோவிலுக்கு சென்று வரலாம் இது குறித்து திருப்பதி மாநகராட்சி மேயர் சிரிஷா கூறுகையில்
தினமும் ஒரு லட்சம் பக்தர்களும் உள்ளூர்வாசிகளும் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த மேம்பாலம் திருப்பதி நகருக்கே பெருமையை தேடி தரப் போகிறது என்றார்.
- 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழா களைகட்டி உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை அங்கூரார்பணம் நடந்தது. விஷ்வகேஸ்வரர் சுவாமி மாட வீதிகளில் உலா வந்து திருவிழா ஏற்பாடுகளை பார்த்தபடி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை ஒட்டி ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை இன்று மாலை சமர்ப்பிக்கிறார்.
திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இரவு 9 மணிக்கு ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழா களைகட்டி உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருப்பதி அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் வனவிலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் கம்புகளை எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் குழந்தைகளுடன் செல்லும் பக்தர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
திருப்பதியில் நேற்று 77,441 பேர் தரிசனம் செய்தனர். 29,816 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எட்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- சிலை விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- பென்சில் நுனியில் 12 மில்லி மீட்டர் நீளம், 4 மில்லி மீட்டர் அகலத்தில் விநாயகர் சிலையை செதுக்கி உள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், வனப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பழங்கால நாணயங்களான அரை அனா, 1 அனா, 10 பைசா, 20 பைசா மற்றும் தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் என 10 ஆயிரம் நாணயங்களை கொண்டு 3 அடி உயரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்து உள்ளார்.
இந்த சிலை விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த அமீர்ஜான் என்பவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 666 மக்காசோள விதைகளில் அக்ரிலிக் பெயிண்ட்டால் மைக்ரோ பிரஸ்களை கொண்டு விநாயகர் உருவங்களை வரைந்தார்.
அனக்கா பள்ளி மாவட்டம் நக்கப்பள்ளி மண்டலம் சினொட்டிக் கல்லுவை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் என்பவர் பென்சில் நுனியில் 12 மில்லி மீட்டர் நீளம், 4 மில்லி மீட்டர் அகலத்தில் விநாயகர் சிலையை செதுக்கி உள்ளார்.
- பிரம்மோற்சவ விழா முதல் நாளான நாளை ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
- பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 22-ந் தேதி நடக்கிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கோலாகலத்துடன் தொடங்குகிறது.
பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு அங்குரார்பணம் நடைபெறுகிறது. நாளை முதல் வரும் 26-ந் தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெறும்.
பிரம்மோற்சவ விழா முதல் நாளான நாளை ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 22-ந் தேதி நடக்கிறது. கருட சேவை அன்று சுமார் 2 லட்சம் பக்தர்களை 4 மாட வீதிகளில் அனுமதிக்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. 23-ந் தேதி தங்கத்தேர் பவனி மற்றும் 26-ந் தேதி தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குழுவார்கள் என்பதால் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 6 லட்சம் லட்டுக்கள் தயார் செய்து வைக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- இந்தியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஜுவாக்காவில் 17 அடி உயரமுள்ள ஸ்ரீ அனந்த பஞ்சமுக மகா கணபதி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விநாயகர் சிலையை வடிவமைப்பதற்காக அனக்கா பள்ளி மாவட்டம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து 5 டன் எடையுள்ள களிமண் கொண்டுவரப்பட்டு சிலை செய்யப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபல சிலை வடிவமைப்பு கலைஞர் கொத்த கொண்ட நாகேஷ் தலைமையில்சிலையை வடிவமைப்பதற்காக மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
- சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
- பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.
ஸ்ரீகாளஹஸ்தி:
ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.
வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.
சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.
சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.
ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.
சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.
பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.
பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.
கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.
பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா தொடக்கம்
- நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடிமரத்தில் கட்டுவற்காக புனித தர்ப்பை புல், பாய், கயிறு ஆகியவை திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அவை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர (சாலகட்லா) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது, தங்கக் கொடிமரத்துக்கு பயன்படுத்தப்படும் புனித தர்ப்பை புல், பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலைக்கு வந்தன. திருப்பதி தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து துணை வனத்துறை அதிகாரி சீனிவாசுலு, அந்தத் துறை பணியாளர்கள் புனித தர்ப்ப புல், பாய், கயிறு ஆகியவற்றை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வந்து, கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர்.
கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் சேஷ வாகனத்தின் மீது புனித தர்ப்பை புல், தர்ப்பை பாய், கயிறு ஆகியவை வைக்கப்பட்டன. நாளை நடக்கும் கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்தப் புனித பொருட்கள் பயன்படுத்தப்படும்.
பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கருட கொடியேற்றம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 'துவஜாரோஹணம்' என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி கோவிலின் தங்கக் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு, பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
ருத்விக்குகள் கொடிமரத்தை சுற்றி வேத மந்திரங்களுடன் தர்ப்ப பாயை போர்த்துவர். கொடிமரம் வரை தர்ப்பை கயிறு கட்டப்படும். தர்ப்பை கயிறு, பாய் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தான வனத்துறையினர் 10 நாட்கள் இரவும் பகலுமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் புனித பொருட்களை தயாரித்துள்ளனர். தர்ப்பையில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகைகள் உள்ளன. அதில் ஏழுமலையான் கோவிலில் 'விஷ்ணு தர்ப்பை' பயன்படுத்தப்படுகிறது.
இந்த விஷ்ணு தர்ப்பை புல் திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் வளர்க்கப்படுகிறது. அதை, தேவஸ்தான வனத்துறையினர் அறுவடை செய்து, திருமலைக்கு கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தி காய வைத்து, நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு தயார் செய்தார்கள். வனத்துறை ஊழியர்கள் 22 அடி நீளம், 7½ அடி அகலத்தில் தயாரித்த தர்ப்பை பாய் மற்றும் 200 அடிக்கு மேல் நீளமுள்ள கயிறு திருமலைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தர்ப்பை புல், கயிறு, பாய் ஊர்வலத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.






