என் மலர்
இந்தியா

10 ஆயிரம் நாணயங்களால் உருவான விநாயகர் சிலை
- சிலை விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- பென்சில் நுனியில் 12 மில்லி மீட்டர் நீளம், 4 மில்லி மீட்டர் அகலத்தில் விநாயகர் சிலையை செதுக்கி உள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், வனப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பழங்கால நாணயங்களான அரை அனா, 1 அனா, 10 பைசா, 20 பைசா மற்றும் தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் என 10 ஆயிரம் நாணயங்களை கொண்டு 3 அடி உயரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்து உள்ளார்.
இந்த சிலை விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த அமீர்ஜான் என்பவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 666 மக்காசோள விதைகளில் அக்ரிலிக் பெயிண்ட்டால் மைக்ரோ பிரஸ்களை கொண்டு விநாயகர் உருவங்களை வரைந்தார்.
அனக்கா பள்ளி மாவட்டம் நக்கப்பள்ளி மண்டலம் சினொட்டிக் கல்லுவை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் என்பவர் பென்சில் நுனியில் 12 மில்லி மீட்டர் நீளம், 4 மில்லி மீட்டர் அகலத்தில் விநாயகர் சிலையை செதுக்கி உள்ளார்.