என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • உற்சவர் மலையப்பசாமி ‘யோக நரசிம்மர்’ அலங்காரத்தில் பவனி.
    • விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், காளைகள், குதிரைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

    தமிழகம், கர்நாடகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர். விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை பாடல்களை பாடினர். கோலாட்டமும் ஆடினர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'காளிங்க நர்த்தன' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

    • மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
    • கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வசேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.

    திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.

    • விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும்.
    • கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார்.

    திருப்பதி:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. சனாதன கருத்துக்கு ஆதரவாக 'கோவிந்த கோடி' எழுதும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வரும் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் அளிக்கப்படும், எனத் தெரிவித்தார்.

    இந்தநிலையில் திருப்பதியில் விநாயக சாகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'கோவிந்த கோடி' விநாயகரை அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், கோவிந்த கோடியை விநாயகப்பெருமான் எழுதுவதுபோல் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சிலை நன்றாக இருக்கிறது. சிலை நிறுவப்பட்டுள்ள மண்டபத்தின் நான்கு பக்கமும் கோவிந்த கோடி நாமம் எழுதி வைத்திருப்பது சிறப்பு.

    விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும். வெங்கடாசலபதி, விநாயகர் ஆசியோடு திருப்பதி நகரம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும், என்றார்.அதைத்தொடர்ந்து அறங்காவலா் குழு தலைவர், தெலுங்கில் எழுதப்பட்ட ஏராளமான கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார். அறங்காவலர் குழு தலைவர், சாமி தரிசனம் செய்தபோது மேயர் ஷிரிஷா, கமிஷனர் ஹரிதா ஆகியோர் உடனிருந்தனர்.

    • விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும்.
    • கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார்.

    திருப்பதி:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. சனாதன கருத்துக்கு ஆதரவாக 'கோவிந்த கோடி' எழுதும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வரும் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் அளிக்கப்படும், எனத் தெரிவித்தார்.

    இந்தநிலையில் திருப்பதியில் விநாயக சாகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'கோவிந்த கோடி' விநாயகரை அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், கோவிந்த கோடியை விநாயகப் பெருமான் எழுதுவதுபோல் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சிலை நன்றாக இருக்கிறது. சிலை நிறுவப்பட்டுள்ள மண்டபத்தின் நான்கு பக்கமும் கோவிந்த கோடி நாமம் எழுதி வைத்திருப்பது சிறப்பு.

    விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும். வெங்கடாசலபதி, விநாயகர் ஆசியோடு திருப்பதி நகரம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும், என்றார்.அதைத்தொடர்ந்து அறங்காவலா் குழு தலைவர், தெலுங்கில் எழுதப்பட்ட ஏராளமான கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார். அறங்காவலர் குழு தலைவர், சாமி தரிசனம் செய்தபோது மேயர் ஷிரிஷா, கமிஷனர் ஹரிதா ஆகியோர் உடனிருந்தனர்.

    • மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
    • கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வ சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.

    திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.

    • உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் பவனி.
    • விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், காளைகள், குதிரைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. தமிழகம், கர்நாடகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர். விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை பாடல்களை பாடினர். கோலாட்டமும் ஆடினர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'காளிங்க நர்த்தன' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

    • தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தார்.
    • தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, சர்வே பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அழகாக தலை சீவி ஜடை பின்னல் போட்டு வர வேண்டும் என விதிமுறை உள்ளது.

    நேற்று காலை அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் தலைமுடியை சீவி ஜடை பின்னல் போடாமல் தலைவிரி கோலமாக வகுப்புக்கு வந்தனர்.

    அப்போது வகுப்புக்கு வந்த ஆசிரியை மாணவிகளின் தலைவிரி கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்தார்.

    தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்தார்.

    தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார். இதனை கண்ட சக மாணவிகள் அவர்களை கிண்டல் கேலி செய்தனர்.

    இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

    தங்களது மகள்களின் கோலத்தைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கரடி நீண்ட நேரம் நடைபாதையிலேயே சுற்றிச்சுற்றி வந்தது.
    • கரடி நடமாடிய இடத்தில் வனத்துறையினர் கூடுதலாக ‘ட்ராப்’ கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

    திருமலை:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளன. தற்போது சிறுத்தை நடமாட்டம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கரடி நடமாட்டமும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அலிபிரி நடைபாதையில் 7-வது மைலில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியில் இருந்து 12.30 மணி இடையே கரடி ஒன்று நடமாடியதைப் பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் கரடி நீண்ட நேரம் நடைபாதையிலேயே சுற்றிச்சுற்றி வந்தது.

    இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் கரடி மெல்ல நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    கரடி நடமாடிய இடத்தில் வனத்துறையினர் கூடுதலாக 'ட்ராப்' கேமராக்களை பொருத்தி உள்ளனர். கரடியை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் பேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • விஜயவாடாவில் இருந்து குறைந்த நிறுத்தங்களுடன் சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்னை வந்தடையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • வந்தே பாரத் ரெயில் எந்தெந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா-சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    இதன் தொடக்கவிழா விஜயவாடாவில் நடக்கிறது. இதில் ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    24-ந் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கன்பரன்சிங் மூலம் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்.

    விஜயவாடாவில் இருந்து குறைந்த நிறுத்தங்களுடன் சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்னை வந்தடையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வந்தே பாரத் ரெயில் எந்தெந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

    மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மீண்டும் விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை-விஜயவாடா இடையே குறைந்த நேரத்தில் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கவர்னர் அப்துல் நாசிர் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொள்வதால் விஜயவாடாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.
    • ஆந்திர சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது.

    விஜயதசமி முதல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. நவம்பர் 2-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது.

    இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆந்திராவில் பைபர் நெட் ஒப்பந்தத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் முறைகேடு நடந்ததாக மற்றொரு வழக்கையும் சி.ஐ.டி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
    • சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷையும் விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, தீர்ப்பை தள்ளி வைத்தது.

    இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது அமராவதி தலைநகர் வளர்ச்சி திட்டம், புறவழிச்சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக, சந்திரபாபு நாயுடு மீதும், அப்போதைய அமைச்சர் நாராயணா உட்பட மேலும் சிலர் மீதும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர்.

    இதுகுறித்தும், சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க வேண்டுமெனவும், இந்த வழக்கில் இவர் தான் முதல் குற்றவாளி எனவும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பிடிவாரண்ட் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று ஆந்திராவில் பைபர் நெட் ஒப்பந்தத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் முறைகேடு நடந்ததாக மற்றொரு வழக்கையும் சி.ஐ.டி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    இதிலும் பிடிவாரண்ட் மனுவை சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நேற்று சிஐடி போலீசார் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

    இதுவரை சந்திரபாபு நாயுடு மீது மட்டும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒன்றில் ஜாமீன் கிடைத்தாலும், மற்றொரு வழக்கில் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என கருதப்படுகிறது.

    ஆந்திராவில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய எதிர்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு மீது தற்போது பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளிவர முடியாதபடி ஜெகன்மோகன் அரசு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    வழக்குக்கு மேல் வழக்கு போட்டு அவரை தேர்தல் முடியும் வரை ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் நெருக்கடி கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என ஆளும் கட்சியினர் திட்டம் வகுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேலும் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷையும் விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.
    • திருப்பதியில் நேற்று 67,267 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. அன்று இரவு பெரிய சேஷா வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்தனர்.

    இன்று காலை சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்தனர்.

    பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோஷம் எழுப்பினர்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் 2 அறைகளில் மட்டுமே பக்தர்கள் உள்ளனர்.

    மேலும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன பக்தர்கள் மற்றும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் குறைந்து 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்வதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    திருப்பதியில் நேற்று 67,267 பேர் தரிசனம் செய்தனர். 20,629 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×